Monday, January 6, 2020

அயோத்தி விவகாரம்: 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழு

ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோவில் கட்டுவதற் கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இது தொடர்பான விவ காரங்களை கவனிக்க  3 அதி காரிகளைக் கொண்ட குழு  ஒன்றை மத்திய  உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
பல ஆண்டுகளாக இழுத் தடிக்கப்பட்டு வந்த அயோத்தி ராமர்கோவில் விவகாரத்தில், உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு (2019) நவம்பர் மாதம் 9ஆம்  தேதி   தீர்ப்பு வழங்கியது. அதைய டுத்து, அங்கு ராமர்கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அயோத்தி பிரச்சினை தொடர்பாக பல் வேறு பரிந்துரைகள், ஆலோ சனைகள் குறித்து கவனித்து தேவையான நடவடிக்கைள் எடுப்பது குறித்து, 3 உயர் அதிகாரிகளை கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
மத்திய உள்துறையின் கூடுதல்  செயலாளர் ஜியானேஷ் குமார் தலைமையில், 3 அதி காரிகள் நியமிக்கப்பட்டு உள் ளனர்.
அவர்கள்  அயோத்தி தொடர்பான அனைத்து விவ காரங்களையும்  கவனிப்பார்கள் எனக் கூறப்பட்டு உள்ளது.
ஜியானேஷ் குமார் ஏற்கெ னவே காஷ்மீர், லடாக் விவ காரங்களை கவனிக்கும் அதிகா ரிகள் குழுவின் தலைவராகவும் உள்ளார். மத்திய அரசின் காஷ் மீர் சிறப்பு தகுதி ரத்து நடவடிக்கையில் அவர் முக்கிய அதிகாரியாக இருந்தவர்.
அதேபோல உள்நாட்டுப் பாதுகாப்புக்கு என்று 2 பிரி வுகள் இருந்தன அவை  ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. அதற்கு இணை செயலாளர் (பெண்கள் பாதுகாப்பு) புனியா சாலிலா சிறீவத்சவா பொறுப் பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...