Wednesday, December 11, 2019

அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எத்தியோப்பியா அதிபர்


மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியி யல் ஆகிய துறைகளில் மகத் தான சாதனை படைத்தவர் களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், 2019ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி (43) அமைதிக் கான நோபல் பரிசுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எத்தியோப்பியாவின் நான்காவது பிரதமராக கடந்த 2.4.2018 அன்று பொறுப் பேற்ற அபி அஹமது அலி அண்டைநாடான எரிட் ரேயா அதிபருடன் மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளாலும் எத்தியோப்பியா நாட்டு மக்களின் வாழ்வாதரத்தை வளப்படுத்தவும், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வும் ஆற்றிய அரும்பணிக்காக அவருக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருது வழங்கும் நிகழ்ச்சி நார்வே தலைநகர் ஒஸ்லோ-வில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்டார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...