டில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு நிர்பயா
என்ற துணை மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் கொடூரமாக
பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்டார். இதில் கைது செய்யப்பட்ட 6
பேரில் ராம் சிங் என் பவர் திகார் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து
கொண்டார். மற் றொரு இளம் குற்றவாளி தண்டனை முடித்து விடுதலையானார்.
மீதமுள்ள 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதில் அக்ஷய் குமார் என்பவர் தனது தண்ட னைக்கு எதிராக உச்சநீதி
மன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில், அக்ஷய் குமாரின் வழக்கை
தள்ளுபடி செய்து, குற்றவாளி கள் அனைவரையும் உடனடியாக தூக்கி லிட வேண்டும்
என நிர்பயாவின் தாய் நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல்
செய்துள்ளார். இந்த இரு மனுக் களும் 17ஆம் தேதி விசாரணைக்கு வருகி றது.
இதற்கிடையே குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஆணையைப் பிறப் பிக்குமாறு
டில்லி உயர்நீதிமன்றத்திலும் நிர்பயாவின் தாய் மனு ஒன்றை தாக்கல்
செய்துள்ளார். அந்த மனு 18ஆம் தேதி விசாரிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment