Wednesday, December 11, 2019

பிரதமர் அலுவலகத்தில் அதிகாரக் குவிப்பு மந்த நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி : ரகுராம் ராஜன் சாடல்


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையின் நடுப்பகுதியில், ஆழ்ந்த சிக்கலில் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன, பிரதமர் அலுவலகத்தில் மட்டும் அதிகாரக் குவிப்பு வைத்துக்கொண்டு மற்ற அமைச்சர்களை அதிகாரமற்றவர் களாக வைத்திருப்பதும் பொருளா தாரத்துக்கு நல்லதல்ல என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் கடந்த 6 மாதங்களாக சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்த உள்நாட்டு மொத்த உற்பத்தி, 2ஆ-வது காலாண் டில் 4.5 சதவீதமாகச் சரிந்துள்ளது. அடுத்துவரும் காலாண்டுகளிலும் இந்த பொருளாதார வளர்ச்சிக் குறைவின் தாக்கம் இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொருளாதார வல்லுநரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறைவுக்கான காரணங் கள், அதை மீட்பதற்கான வழிகள் குறித்து ‘இந்தியா டுடே’ இதழில் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்ப தாவது:

என்ன தவறு நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, தற்போதுள்ள ஆளும் மத்திய அர சின் மய்யப்படுத்தப்பட்ட இயல்பி லிருந்து தொடங்க வேண்டும். பிரதமரைச் சுற்றியுள்ள சிறிய ஆளுமைகளிடம் இருந்தும் மற்றும் பிரதமர் அலுவலகத்தைச் சுற்றியும் தான் முடிவு எடுப்பது மட்டுமல்ல, சிந்தனைகள், திட்டங்களைச் செயல்படுத்துவது எல்லாம் தொடங் குகிறது.
பிரதமர் அலுவலகத்தில் உள்ள வல்லுனத்துவம் பெற்றவர்களின் சிந்தனைகள், திட்டமிடல்கள் கட் சிக்கும், சமூக நிகழ்ச்சிகளுக்கும் வேண்டுமானால் சரியாகப் பொருந் தும்.
ஆனால், பொருளாதாரச் சீர்தி ருத்தங்களில் அவர்களின் சிந்தனை களை, திட்டங்களைச் செயல்படுத் தினால் மிகவும் குறைவான அளவு தான் பணியாற்றும், பலனைத் தரும்.
குறைவான நிபுணத்துவம் உள்ள வர்களால், மாநில அளவிலும், தேசிய அளவிலும் பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது, இயங்கு கிறது என்பது குறித்து அறிய முடியாது
அதிகபட்சமான மய்யப்படுத் துதல், அதிகாரமற்ற அமைச்சர்கள், ஒத்திசைவான தொலைநோக்குப் பார்வைக் குறைவு போன்றவை இல்லாமல் சீர்திருத்த முயற்சிகளைப் பிரதமர் அலுவலகம் மட்டுமே செயல்படுத்த முயல்வது பலவித மான சிக்கல்களை ஏற்படுத்தும், கவனச்சிதறல்களை உண்டாக்கும்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு "குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்" என்ற அடிப்படையை வைத்துத்தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால், இந்த வார்த்தை அவ்வப்போது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அதா வது அரசு சில விடயங்களைத் திற மையாகச் செய்யும், ஆனால், அதே அளவுக்கு மக்களும், தனியார் துறையும் சிறப்பாக, சுதந்திரமாகச் செய்யவிடுவதில்லை.
பொருளாதாரம் சரிவை நோக் கிச் செல்கிறது என்பதை முதலில் பிரதமர் மோடி அரசு அதை ஏற்றுக் கொள்வதுதான் பிரச்சினையை அடையாளம் காணும் முதல் புள்ளி யாகும்.
பிரச்சினை முழுவதையும் அறிவதற்குத் தொடக்கப்புள்ளியை நாம் அங்கீகரிப்பது அவசியம். உள் ளார்ந்த, வெளிப்புறத்தில் இருந்து வரும் ஒவ்வொரு விமர்சனங்களையும் அரசியல் ரீதியானது என்று எண்ணக்கூடாது, இந்த பொரு ளாதார பிரச்சினை தற்காலிக மானது என்று பேசுவதும், புள்ளி விவரங்களையும், மோசமான செய் திகளை அடக்குவதாலும் பிரச் சினைகள் நாளடைவில் மறைந்து விடும் என்பதை நிறுத்த வேண்டும்.
ஏனென்றால், இந்தியப் பொரு ளாதார வளர்ச்சிக் குறைவு மந்த நிலையின் நடுப்பகுதியில் இருக் கிறது. குறிப்பாகக் கிராமப்புறங்களில் குறிப்பிடத்தகுந்த பொருளாதார அழுத்தம் இருந்து வருகிறது.
கட்டுமானத்துறை, ரியல் எஸ் டேட், உள்கட்டமைப்பு ஆகியவை ஆழ்ந்த சிக்கலில் இருக்கின்றன. வங்கி அல்லாத நிறுவனங்களும் பிரச்சினையில் இருக்கின்றன. இதன் காரணமாக மோசான வாராக்கடன் அதிகரிப்பும் வங்கி களுக்கு உருவாகும் சூழல் இருக் கிறது.
இளைஞர்கள் மத்தியில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருவது அவர்களிடையே மனவேதனையை யும், அழுத்தத்தை உருவாக்கும். உள்நாட்டு தொழில்களும் முதலீடு செய்வதில்லை, முதலீடும் தேக்க மடைந்து இருப்பது ஏதோ மிகப் பெரிய தவறு நடக்கப்போவதற்கான வலுவான அறிகுறியாகும்.
நிலம் கையகப்படுத்துதலை முறைப்படுத்துதல், தொழிலாளர் சட்டங்கள், நிலையான வரிச் சட்டங்கள், முறைப்படுத்தப்பட்ட நிர்வாகம், திவால் சட்டங்களை வேகமாகச் செயல்படுத்துதல், முறை யான மின்கட்டணம், தொலைத் தொடர்புத் துறையில் ஆரோக்கி யமான போட்டியைத் தக்கவைத்தல், விவசாயிகளுக்குக் கடன் மற்றும் உள்ளீடுகள் அளித்தல் முக்கிய மானவை.
நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமானவரிக் குறைப்பு செய்வதில் இருந்து சற்று விலகி இருந்து, முத லில் மத்திய அரசு தங்களின் நிதி களைக் கிராமப்புறப் பொருளா தாரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட் டத்துக்கு (100நாள் வேலைவாய்ப்பு) அதிகமான நிதியை அளிக்க வேண்டும்.
2024ஆ-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அந்த பொருளா தாரத்தை எட்டுவதற்கு ஆண்டுக்கு 8 முதல் 9 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாம் முன்னேற வேண்டும். ஆனால், அது சாத்திய மில்லாததை அதிகரித்து வருகிறது
பிரதமர் மோடி தலைமையிலான அரசு அய்ந்தரை ஆண்டு களுக்கும் மேலாக ஆட்சியில் நீடித்து வந்தபோதிலும், இன்னும் சில பிரச்சினைகளை தொடர்ந்து வருகிறது. மிகப்பெரிய அளவில் சீர்திருத்த நடவடிக்கை தேவைப் படுகிறது.
இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...