370ஆவது பிரிவு ரத்து செய் யப்பட்ட
பின்னர் ஜம்மு-காஷ் மீர் மற்றும் லடாக்கிற்கான கல்வி மற்றும் உள்கட்டமைப்
பின் தரத்தை மேம்படுத்தும் திட்டத்தை மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் மேற்
கொண்டது.
“நாங்கள் திட்டத்தை வகுத்தோம், இந்த
திட்டத் திற்குக் கிடைக்கக்கூடிய வள இருப்பை மதிப்பிடுகிறோம்,” என்று ஒரு
மூத்த மனிதவள மேம்பாட்டு அதிகாரி கூறினார். அத்தகைய “பெரிய முயற்சிக்கு”
நிதி கிடைக்க வில்லை என்று கூறினார்.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆரம்பத்தில்
தனது ராஷ்டிரிய உச்சட்டார் ஷிக்ஷா அபியான் (RUSA) திட்டத்தின் மூலம் இந்த
திட்டத்திற்கு நிதியளிக்கும் திட்டங்களைக் கொண்டிருந் தது. இருப்பினும்,
RUSA) மூலம் கிடைக்கும் நிதிகளும் போதுமானதாக இல்லை என்று மற்றொரு அதிகாரி
தெரிவித்தார்.
மோடி அரசாங்கம் தனது கல்வித் திட்டத்தின்
ஒரு பகு தியாக புதிய கல்லூரிகளைத் திறக்கவும், தற்போதைய உள்கட்டமைப்பை அதிக
நிதியுடன் புதுப்பிக்கவும் முயன்றது என்று தி பிரிண்ட் தெரிவித்துள்ளது.
370 மற்றும் 35 ஏ பிரிவு அகற்றப்பட்ட
உடனேயே, கள நிலவரத்தை மதிப்பிடுவ தற்கும், ஒரு திட்டத்தை தயா ரிப்பதற்கும்
தொடர்புடைய அமைச்சர்கள் ஜம்மு-காஷ்மீ ருக்கு அனுப்பப்பட்டனர்.
மாணவர்களை வேலைக் குத் தயாராக்கும்
நோக்கத்து டன், பாலிடெக்னிக் உள் ளிட்ட தொழில்நுட்ப நிறுவ னங்களின் தரத்தை
மேம்படுத் தவும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள் ளதாக தி
பிரிண்ட் தெரிவித் துள்ளது.
அய்ந்து பல்கலைக்கழகங் களில் தொகுதி
கல்லூரிகளை நிறுவும் திட்டமும் நிறுத்தப் பட்டுள்ளது. “இப்பகுதி இது வரை
பெற்று வந்த நிதியை தொடர்ந்து பெறும். இருப்பி னும், “கூடுதல் நிதி
எதுவும் இருக்காது”, என்று மற்றொரு அதிகாரி தெளிவு படுத்தினார் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment