Wednesday, December 18, 2019

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக மறியல் போராட்டம்: காவல்துறையினர் கல்லூரி மாணவர்களிடம் அத்து மீறல்


குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் விரட்டி அடித்த தால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. டெல்டா மாவட் டத்திலும் போராட்டம் தீவிரமடைந் துள்ளது.
தஞ்சை
தஞ்சை மன்னர்சரபோஜி அரசு  கல்லூரி மாணவ, மாணவிகள் 1,000க்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அங்கு வந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தை நிறுத் துமாறு வலியுறுத்தினர். அத்துடன் இந்திய மாணவர் சங்க தலைவர் அரவிந்த்சாமி  உள்ளிட்ட மாணவர் களை கையை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இதனால்  ஆத்திரமடைந்த மாண வர்கள், காவல்துறையினருக்கு எதிராக முழக்கம் எழுப்பியவாறு கல்லூரி  வளாகத்தை விட்டு வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் மாண வர்களை விரட்டி அடித்ததால் மாணவர்கள்  கலைந்து சென்றனர்.
திருவாரூர்
திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய  பல்கலைக்கழக மாணவர்களும் நேற்றுமுன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்ட தோடு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின்  உருவ பொம்மையை எரித்து தங்கள்  எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையடுத்து 20ஆம் தேதி வரையில் விடுமுறை அளித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டதுடன் உட னடியாக 24 மணி நேரத்திற்குள் மாணவர்கள் விடுதியை விட்டு  வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
பல்வேறு வெளிமாநிலங்களை சேர்ந்த  மாணவர்கள், உடனடியாக தங்கள் ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் கிடைக்காததால்  விடுதியை விட்டு வெளியேற முடியாது என நள்ளிரவு வரை உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பல்கலைக்கழக நிர்வாகம்  சம்மந்தப்பட்ட மாணவர் களிடம் தனித்தனியாக கடிதம் பெற்றுக் கொண்டு 2  நாட்கள் வரையில் விடுதி யில் தங்குவதற்கு அனுமதி அளித் துள்ளனர்.
பிரதமர் உருவ

பொம்மை எரிப்பு
மேலும் போராட்டத்தில் ஈடு பட்டு,  பிரதமர் உருவபொம்மையை எரித்ததாக 30 மாணவிகள் உட்பட மொத்தம் 75  மாணவர்கள் மீது நன்னிலம் காவல்துறையினர் பல் வேறு  பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...