Thursday, December 5, 2019

நிர்பயா நிதி: நிதி கிடைத்தும் செலவில்லை

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி, கடந்த 2012-ஆம் ஆண்டு, ஓடும்பேருந்தில் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், சைபர் குற்றங்களை தடுப்பதற்காகவும் நிர்பயா நிதியம் உரு வாக்கப்பட்டு, ஆண்டுதோறும் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், பெண்களின் பாதுகாப்புக்கான நிர்பயா நிதியத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தொகையில், 50 சதவிகிதத்தைக் கூட மாநிலங்கள் செலவழிப்பதில்லை என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பாஜக கடந்த வாரம் வரை ஆட்சியிலிருந்த மகாராட்டிரா, தற்போது ஆட்சியிலிருக்கும் மணிப்பூர், திரிபுரா மற்றும் மேகாலயா, சிக்கிம், டையூ டாமன் உள்ளிட்ட 6 மாநிலங்கள் நிர்பயா நிதியில் இருந்து ஒரு பைசாவைக் கூட பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
நிர்பயா நிதியிலிருந்து டில்லிக்கு ஒதுக்கப்பட்ட 390 கோடியே 90 லட்சம் ரூபாயில், வெறும் 19 கோடியே 41 லட்சத்தை மட்டுமே அந்த அரசு செலவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் 119 கோடி ரூபாயில் வெறும் 3 கோடியே 93 லட்சத்தை மட்டும் செலவிட் டுள்ளது. இதேபோல கருநாடகம் 191 கோடியே 72 லட்சத்தில், 13 கோடியே 62 லட்சம் ரூபாயையும், தெலங்கானா மாநிலம் 103 கோடி ரூபாயில் 4 கோடியே 19 லட்சம் ரூபாயையும் மட்டுமே செலவழித்துள்ளன.  தமிழ்நாடு அரசும் இதில்  190 கோடி ரூபாயில் வெறும் 6 கோடி ரூபாயை மட்டுமே செலவிட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...