Wednesday, December 18, 2019

டிச.26இல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்: வெறும் கண்களால் பார்க்கக் கூடாது


'டிச. 26ஆம் தேதி நடக்கவுள்ள நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பார்க்க முடியும். ஆனால் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது'- என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கிரகணம் என்பது நிழல். சூரிய னுக்கும் பூமிக்கும் நடுவே ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால் பூமியில் விழும் சூரிய ஒளி தடுக்கப் பட்டு நிலவின் நிழல் பூமியின் மேல் விழுவது சூரிய கிரகணம் எனப்படு கிறது. இதில் மூன்று வகை உண்டு. சந்திரனின் நிழல் முழுதாக சூரியனை மறைத்தால் அது முழு சூரிய கிரகணம்.
நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்க முடியாமல் அதன் விளிம்பு பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளித்தால் அது கங்கண அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம். சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படாமல் ஒளி குறைந்தாலும் வெளிச்சம் இருக்கும். இது பகுதி சூரிய கிரகணம். டிச.26ஆம் தேதி கங்கண சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
இது குறித்து பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மய்யத்தின் பொறுப்பு செயல் இயக்குனர் சவுந்திரராஜன் கூறியதாவது:
கிரகணத்தின் உச்சத்தில் ஒரு கங்கணம் போல சூரியனின் வெளி விளிம்பு தெரியும்.
இதனை கங்கண அல்லது நெருப்பு வளைய சூரிய கிரஹணம் என்கிறோம். இந்தியாவில் 2010 ஜன. 15இல் கங்கண சூரிய கிரகணத்தை காண முடிந்தது. டிச. 26ஆம் தேதி நிகழ உள்ள சூரிய கிரகணம் சவுதி அரேபியா, கத்தார், இலங்கை, மலேசியா, மாலத்தீவு, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் தென்மாநிலங்களில் தெரியும். இந்த அரிதான வான் நிகழ்வை தமிழகத்தில் 26ஆம் தேதி காலை 8.06 முதல் 11.19 மணி வரை மூன்று மணி நேரம் பார்க்கலாம்.
திருப்பூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக் கல், மதுரை, பழநி, கரூர், ஈரோடு, கோவை, உதகை ஆகிய நகரங்களில் கிரகணத்தை பார்க்கலாம். சென்னையில் 84.7 சதவீதம் சூரியனை சந்திரன் மறைத்து செல்லும்.
காலை 8:09க்கு துவங்கி 9:35 மணிக்கு உச்சம் பெற்று காலை 11:19க்கு கிரகணம் நிறைவு பெறுகிறது.கிரகணத்தை உரிய பாதுகாப்புடன் 'வெல்டிங்' கண்ணாடி - ஷேட் நம்பர் - -14' பயன்படுத்தி பார்க்கலாம். தொலை நோக்கி வழியே நேரடியாக பார்க்கக் கூடாது.
சூரியன் பிம்பத்தை திரையில் விழச் செய்து பார்க்கலாம்.
சென்னை பிர்லா கோளரங்கில் பொதுமக்கள் சூரிய கிரகணம் பார்ப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்ரகண்ட் ஆகிய மாநிலங்களில் கங்கண சூரிய கிரகணத்தை காணலாம்.
மீண்டும் 2031 மே. 21இல் தமிழ கத்தில் இந்த நிகழ்வை காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...