Sunday, August 4, 2019

மத்திய அரசு வரலாற்றை சிதைக்கவும், அழிக்கவும் நினைக்கிறது மக்களவையில் காங்கிரஸ் கடும் தாக்கு


மக்களவையில் கலாசார மந்திரி பிரகலாத் பட்டேல், ஜாலியன்வாலாபாக் அறக்கட்டளை சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இதன்மூலம் ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவிடத்தை நடத்தும் அறக்கட்டளையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் நிரந்தர உறுப்பினராக இருப்பார் என்பதை நீக்க வழிகாணப்படுகிறது.
பிரகலாத் பட்டேல் பேசும்போது, “தேசிய நினைவிடங்களில் அரசியல் நீக்கப்பட வேண்டும் என்பது எங்கள் கொள்கை. அதற்காகவே 1951-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்த சட் டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. நினைவிடங்களில் அரசியல்மயம் இருக்கக்கூடாது. தேசியமயம் மட்டுமே இருக்க வேண்டும்” என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் குர்ஜீத் ஆஜ்லா:
மத்திய அரசு வரலாற்றை சிதைக்கவும், அழிக்கவும் நினைக்கிறது. நாட்டின் சுதந்திர போராட்டத்தில் காங்கிரசின் தியாகத்தை உங்களால் நீக்கிவிட முடியாது. நாட்டின் சுதந்திர போராட்டத்தில் உங்களுக்கு எந்த பங்கும் இல்லை. பின்னர் ஏன் நினை விடங்களை கட்டுப்படுத்த விரும்பு கிறீர்கள்?
அப்போது பா.ஜனதா உறுப்பி னர்கள் சிலர் எதிர்த்து முழக்கம் எழுப்பினார்கள்.
மத்தியஅமைச்சர் ஹர்சிம்ரத்
கவுர் பாதல்:
1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் பங்கேற்ற ஒருவரை முதல்-அமைச்சராக நியமித் துள்ளர்கள். பஞ்சாப் முதல்-அமைச்சரின் நெருங்கிய உறவினர் ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயரை பாராட்டி பேசியிருக்கிறார். இது வரலாற்றில் பதிவாகி உள்ளது. இதை நீங்கள் மறக்கக்கூடாது.
அப்போது காங்கிரஸ் உறுப்பி னர்கள் கண்டன முழக்கம் எழுப்பி னார்கள். சிலர் பஞ்சாபில் போதை மருந்து கும்பல் இருப்பது பற்றிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
தயாநிதிமாறன் (தி.மு.க.):- சுதந்திரப் போராட்ட வீரர்களை நாம் மதிக்க வேண்டும். அவர்கள் பற்றி நான் பெருமை கொள்கிறேன். சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மட்டுமே போராடியது. நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் காங்கிரசில் இருந்து பிரிந்துவந்தவை தான். அதிகமான அதிகாரம் கிடைக்கும் போது பொறுப்புணர்வு வேண்டும். ஆனால் உங்களுக்கு (பா.ஜனதா) பொறுப்புணர்வு இல்லை. மக்க ளவையின் நோக்கம் வரலாற்றை திருத்துவது அல்ல, வரலாற்றை உருவாக்குவது. எனவே அரசு இந்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.
சுகதாராய் (திரிணாமுல் காங்கிரஸ்):-
காந்தியார் அந்த நினை விடத்தை நிறுவினார். நீங்கள் 68 வருடங்களுக்கு பின்னர் அந்த சட் டத்தை மாற்ற விரும்புகிறீர்கள். இதனை நான் கடுமையாக கண்டிக் கிறேன். நீங்கள் வரலாற்றை திருத்தி எழுத முடியாது.
மேலும் பல்வேறு கட்சி உறுப்பி னர்களும் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு ஆதரவாக பேசினார்கள். கடுமையான வாக்குவாதத்துக்கு பின்னர் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மத்திய அமைச்சர் பிரகலாத் பட் டேல் பதில் அளிக்கும்போது, “அரசு வரலாற்றை மாற்ற முயற்சிக்கவில்லை. ஆனால் வரலாற்றை உருவாக்க முயற்சிக்கிறது.
காங்கிரசுக்கு இது ஒரு நினைவிடம் அல்லது அறக்கட்டளை. ஆனால் எங்களுக்கு இது ரத்தம்
சிந்திய முன்னோர்களின் தியாகம்” என்றார்.
பின்னர் இந்த சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 214 உறுப் பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 30 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...