Sunday, August 4, 2019

ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் உருவம், தன்மைகளை அடிக்கடி ஏன் மாற்றுகிறீர்கள்? உயர்நீதிமன்றம் கேள்வி

நாட்டில் புழங்கும் ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் வடிவம் உள் ளிட்ட தன்மைகளை ஏன் அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருக்கிறீர்கள்? காரணம் என்ன என்று மத்திய ரிசர்வ் வங்கிக்கு மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதாவது சில வேளைகளில் ரூ.50 புதிய நோட்டுக்கும், ரூ.100க்கும் சட்டென்று வித்தி யாசம் இல்லாமல் போய் விடு கிறது. 5 ரூபாய் நாணயத்திற்கும், 1 ரூபாய் நாணயத்திற்கும் சில வேளைகளில் வித்தியாசம் இல் லாமல் போய் விடுகிறது, இத னால் பார்வையற்றோருக்கு கடும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவர்கள் பொதுவாக தடவிப் பார்த்துதான் நோட்டுகளை கடைகளிலோ உணவகங்க ளிலோ கொடுக்கின்றனர், வாங் குகின்றனர். அடிக்கடி அதன் உருவம், தன்மையை மாற்றிக் கொண்டேயிருந்தால் அவர் களுக்கு கொடுக்கல் வாங்கல் மிகவும் கடினமாக உள்ளது. மேலும் அவர்கள் ஏமாற்றப்பட வும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இது தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி பிரதீப் நந்த்ரஜோக் மற்றும் நீதிபதி ஜாம்தார் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதனால் ஏற்படும் பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டி  பார்வையற்றோர் தேசி யக் கூட்டமைப்பு சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் செய்த மனுமீதான விசாரணை யில் நீதிமன்றமே ரிசர்வ் வங்கிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
தலைமை நீதிபதி, எழுப்பிய கேள்வியில், “ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் அளவு, வண் ணம், தன்மை ஆகிய உருவங் களை அடிக்கடி மாற்ற வேண் டிய கட்டாயம் என்ன என்பதை நாங்கள் ஆர்பிஅய்யிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகி றோம்” என்றார்.
பார்வையற்றோருக் காகவென்றே புதிய நாணயங்கள் சிறப்பு அம்சங்களுடன் மார்ச் சில் வெளியிட்டதாக நீதி மன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி 6 வாரத்துக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட் டுள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...