12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப்
புத்தகத்தில் தமிழ் மொழியின் தோற்றம் குறித்து தவறாக எழுதிய புத்தக
தயாரிப்புக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்
கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பிளஸ் -2 ஆங்கில பாடப்புத்தகத்தில் 142
ஆம் பக்கத்தில் மொழிகள் பற்றிய ஒரு பாடப்பிரிவு இடம்பெற்று இருந்தது.
அதில் தமிழ் மொழி கி.மு.300 ஆண்டுகள் தொன்மையானது என்றும், அதைவிட
சமஸ்கிருதம் மொழி கி.மு.2000 ஆண்டுகள் தொன்மையானது என்றும் சர்ச்சைக்குரிய
கருத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த பதிவுக்கு தமிழ் ஆர்வலர்கள்,
கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சமஸ்கிருதத்துக்கு
முக்கியத் துவம் கொடுக்கும் தவறான பாடப்பகுதி நீக்கப்படும். இந்த தவறுக்கு
காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நட வடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சம்பந்தப்பட்ட பாடப்பகுதியில்
உரிய திருத்தங்கள் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்
பட்டுள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகம்
தயாரிப்புக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
புத்தகத்தில் உள்ள சர்ச்சைக் குரிய பகுதியும் நீக்கப்படும் என்றும்
பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உலக மொழிக்கெல்லாம் மூத்த மொழியான
தமிழின் தொன்மையை விளக்கி மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படும் என்று கல்வித்துறை
அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment