Monday, July 22, 2019

நான் குப்பை கூட்டவும், கழிப்பறை, சாக்கடை சுத்தம் செய்யவும் எம்.பி. ஆகவில்லை பெண் சாமியார் பிரக்யாசிங் திமிர் பேச்சு

கழிப்பறை யையும், சாக்கடையையும் சுத்தம் செய்வதற்காக நான் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை என பாரதீய ஜனதா கட்சியின் சர்ச்சைக்குரிய நபர்களில் ஒருவரும், மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகு தியின் உறுப்பினருமான. பெண் சா மியார் பிரக்யாசிங் அகம்பாவத்துடன் பேசியுள் ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் செகோர் நகரில் ஓரிடத்தில் ஆட்கள் புடைசூழ அமர்ந்தி ருக்கும் பிரக்யா சிங், நான் சாக்கடை அல்லது கழிப்பறை களை சுத்தம் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை. நான் எதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டேனோ, அந்தப் பணியை கண்ணியத்துடன் நிறைவேற் றுவேன்'' என்றுள்ளார். அவர் பேசும் அந்த காணொலி தற்போது வெளியாகியுள்ளது.
தூய்மை பாரத இயக்கத் தில் நாடு முழுவதும் முன் வந்து பங்கேற்கும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதே கட்சியின் உறுப்பினரான சாமியார் பிரக்யா இவ்வாறு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...