பீகார் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கேள்வி
"இந்தியாவில் மாநில அரசியலில் ஆளுநர்
பங்கு என்ன? குறிப்பாக, பீகார் மாநிலத்தை முன் வைத்து விமர்சன ரீதியாக
ஆராயுங்கள். ஆளுநர் என்ப வர் வெறும் பொம்மைதானா?" என
கேட்கப்பட்டிருக்கிறது. பீகாரில் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் இந்திய
அரசியலில்ஆளுநரின் இடம் பற்றிய கேள்வியில் ஆளுநர் வெறும் பொம்மையா?' எனக்
கேட்கப்பட் டுள்ளது.
பீகார் மாநிலத்தில் மாநில அரசுப் பணியாளர்
தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் பணியிடங் களுக்கு மெயின் தேர்வில்
ஆளுநர் பற்றி இந்தக் கேள்வி இடம்பெற்றிருக்கிறது.
கடந்த ஜூலை 12, 13, 14 மற்றும் 16 ஆகிய
தேதிகளில் பீகார் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் நடந்தன. மொத்தம் 200
மதிப்பெண் களுக்கு நடத்தப்பட்ட இத் தேர்வில் ஆளுநரைப் பற்றிய இந்தக்
கேள்விக்கு 6 மதிப் பெண்கள் கொடுக்கப்பட் டிருந்தது.
"இந்தியாவில் மாநில அரசியலில் ஆளுநரின்
பங்கு என்ன? குறிப்பாக, பீகார் மாநிலத்தை முன்வைத்து விமர்சன ரீதியாக
ஆராயுங்கள். ஆளுநர் என்பவர் வெறும் பொம்மைதானா?" என
கேட்கப்பட்டிருக்கிறது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்த வினாத்தாள்
அளிக்கப் பட்டுள்ளது. இதில் பகுதி 1 இல் 2 ஆவது வினாவாக மேற்கண்ட வினா
உள்ளது.
ஆசிரியர்களே பொறுப்பாம்!
இது குறித்து பீகார் அரசுப் பணியாளர் தேர்
வாணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் கருத்து கேட்டபோது, "இதற்கு
வினாத்தாளை உருவாக்கிய ஆசிரியர்களே பொறுப்பு. ஆணையத்தில் உறுப்பின ராக
இருக்கும் யாருக்கும் வினாத்தாளைப் பார்க்கும் அதிகாரம் இல்லை. இது
குறித்து சம்பந்தப்பட்ட ஆசி ரியர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்."
என் றார். சர்ச்சையை ஏற்படுத்தி யிருக்கும் இந்த வினா ரத்து
செய்யப்படப்போவதில்லை. மாறாக, தேர்வர்கள் அளித்த பதிலுக்கு ஏற்ப மதிப்பெண்
கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பீகார் ஆளுநராக
இருப்பவர் லால்ஜி டாண் டன். இவர் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி
முதல் அந்தப் பதவியில் உள்ளார். அதே போல் முந் தைய அரசில் மோடிக்கும்,
நிதீசுக்கும் இருந்த நல்லுறவு இம்முறை இல்லை, ஆகவே மத்திய அமைச்சரவையில்
இடம் வேண்டாம் என்று கூறிவிட்டார். தற்போது ஆளுநர் விவகாரத்தில் நேர
டியாகவே சீண்டியுள்ளார்.
No comments:
Post a Comment