பா.ஜ.க.-வுட னான கூட்டணியில் இணைந்ததற்கு வருந்துவதாக கோவா முன் னேற்றக்
கட்சித் தலைவர் (Goa Forward Party) விஜய் சர் தேசாய் கூறியுள்ளார்.
கடந்த 2017-இல் நடை பெற்ற கோவா சட்டப் பேரவைத் தேர்தலில், பா.ஜ.க.-வுக்கு எதிராக போட்டியிட்ட கோவா முன்னேற்றக் கட்சி, தேர்தலுக்குப்பின் அதே பா.ஜ.க.-வுக்கு ஆதரவளித்து, அமைச் சரவையிலும் இடம்பெற்றது. கோவா முன்னேற்றக் கட்சியின் ஆதரவு இல்லாவிட்டால், ஆட் சியில் தொடர முடியாது என்பதால், அக்கட்சியின் தலைவர் விஜய் சர்தே சாய்க்கு, துணை முதல்வர் பதவி வழங்கியது பா.ஜ.க.
ஆனால், அண்மையில் காங் கிரசை சேர்ந்த 10 சட்டமன்ற உறுப் பினர்கள் பா.ஜ.க.-வுக்குத் தாவியதால், கோவா சட்டப் பேரவையில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றது. கூட்டணிக் கட்சிகள் மற்றும் சுயேச் சைகளின் ஆதரவு அக்கட்சிக்கு அவசியமில்லாமல் போனது. இதை யடுத்து, கோவா முன்னேற்றக் கட் சிக்கு வழங்கப்பட்டிருந்த துணை முதல்வர் பதவி உட்பட 3 அமைச்சர் பதவிகளையும், சுயேச்சை உறுப் பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர் பதவியையும் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு பறித்துக் கொண்டது.
இந்நிலையில்தான், முன்பு பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த தற்காக வருத்தப்படுவதாக கோவா முன்னேற்றக் கட்சியின் தலைவர் விஜய் சர் தேசாய் கூறியுள்ளார். "மனோகர் பாரிக்கரின் மறைவுக்குப் பிறகும் நாங்கள் பா.ஜ.க. கூட்டணி யில் நீடித்ததற்காக வருந்துகிறோம். அரசியல் மரபை பா.ஜ.க. கொன்று விட்டது. இனிமேல் நாங்கள் பா.ஜ.க.-வுடன் இணைந்து இருக்கப் போவதில்லை " என்றும் சர்தேசாய் கொதித்துள்ளார்.

No comments:
Post a Comment