தி.மு.க. மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேள்வி
தென்சென்னை தொகுதி தி.மு.க. உறுப்பினர்
தமிழச்சி தங்க பாண்டியன் நாடாளுமன்றத்தில், இந்தியா வில் இந்தி, ஆங்கிலம்
தவிர மாநில மொழி களை வழக்காடு மொழியாக பயன்படுத்தும் உயர்நீதிமன்றங்கள்
பற்றிய விவரம் குறித்தும், உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளை வழக்காடு
மொழியாக ஏற்றுக்கொள்வதற்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அம் சங்கள்
பற்றியும் மற்றும் தமிழை உயர்நீதி மன்றங்களில் வழக்காடு மொழியாக ஏற்றுக்
கொள்வது தொடர்பாக ஏதேனும் கோரிக்கை மத்திய அரசிடம் முன் வைக்கப்பட்டதா?
என்பது பற்றியும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:-
சென்னை, கொல்கத்தா, கருநாடகா,
சத்தீஷ்கார், குஜராத் உயர்நீதிமன்றங்களில் முறையே தமிழ், வங்காளி, கன்னடம்,
இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் வழக்காடுவதற் கான முன்மொழிவுகள்
பெறப்பட்டு உள்ளன. இந்த கோரிக்கைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின்
ஒப்புதல் தேவை என்பதால், அமைச்சரவைக் கூட்ட முடிவின்படி கோரிக்கை
உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஏற்கெனவே நிறை
வேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதாக தலைமை நீதிபதி தெரிவித்து
இருக்கிறார். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார். மேலும் தமிழச்சி
தங்கபாண்டியன், விதி எண் 377இன் கீழும் ஒரு கோரிக்கையை முன் வைத்தார். தனது
தொகுதிக்கு உட்பட்ட பள்ளிக் கரணை சதுப்புநிலம் ஆக்கிரமிப்பா லும்,
குப்பைகள் கொட்டுவதாலும் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், எனவே அந்த
நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது அவர்
கோரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment