Monday, July 22, 2019

கார்ப்பரேட் கம்பெனிகளின் மோசடிகள் கண்காணிக்கப்படுகின்றனவா? நாடாளுமன்றத்தில் பி.ஆர். நடராஜன் கேள்வி

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பி.ஆர்.நடராஜன், மோசடிக் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர்,  உறுப்பினர் கோரியிருப்பது போன்று விழிப்புப்பணி மய்யங்கள் அமைக்கும் கருத்துரு எதுவும் அரசிடம் கிடையாது என்றும், எனினும் அரசாங்கம் கடுமையான மோசடிகள்  தொடர்பான புலனாய்வு அலுவலகம் (SFIO-Serious Fraud Investigation Office) அமைத்திருக்கிறது என்றும். அது கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும்மோசடிகள் குறித்து புலனாய்வு மேற்கொள்கிறது என்றும், இந்த அலுவலகத்திற்கு மோசடி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உரிமையாளர்களைக் கைது செய்வதற்கு அதிகாரம் உண்டு என்றும் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக அமைச்சர் அளித்துள்ள பட்டியலை ஆராய்கையில் 2015-16ஆம் ஆண்டில் 23 நிறுவனங்கள் மீதும், 2016-17ஆம் ஆண்டில் 25 நிறுவனங்கள் மீதும், 2017-18ஆம் ஆண்டில் 21 நிறுவனங்கள் மீதும், 2018-19ஆம் ஆண்டில் 33 நிறுவனங்கள் மீதும், 2019-20ஆம் ஆண்டில் ஜூன் 30 முடிய உள்ள தேதிகளில், 6 நிறு வனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. இவற்றில் தமிழ்நாட்டில் 2016-17ஆம் ஆண்டில் இரண்டு நிறுவனங்கள் மீதும், 2017-18ஆம் ஆண்டில் ஒரு நிறுவனத்தின் மீதும், 2018-19ஆம் ஆண்டில் மூன்று நிறுவனங்கள் மீதும் வழக் குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எனினும் எவரும் கைது செய்யப்பட்டதாகவோ, மோசடிகள் மீது எவரும் தண்டிக்கப் பட்டதாகவோ அமைச்சரின் பதிலிலிருந்து தெரிய வரவில்லை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...