இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
பாரதீய ஜனதாக் கட்சி, கருநாடக அரசியலை மட்டும் சீர்குலைக்கவில்லை. மட்ட மான
அரசியலை நடத்துவதற் கான ஒரு புதிய அளவு கோலையே தீர்மானித்து வருகிறது
அக்கட்சி. நான் பதவியில் ஒட்டிக் கொண்டி ருக்கவில்லை. பாரதீய ஜன தாவின்
பித்தலாட்டங்களை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டுமென்பதுதான் எனது
விருப்பம்.
ஆளுநர் மாளிகையை பக டைக் காயாகப்
பயன்படுத்தி, நம்பிக்கை வாக்கெடுப்பிற் கான காலக்கெடுக்களை விதிக்கிறது
அக்கட்சி. ஆளுங் கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்களை வலுக்கட் டாயமாக
கடத்திச்சென்று அடைத்து வைத்துள்ளது அக்கட்சி. பாரதீய ஜனதா தலைவர்களும்
நிர்வாகிகளும், எங்கள் உறுப்பினர்களுடன் இணைந்து சிறப்பு விமானத் தில்
மும்பை செல்லும் காணொலிகளே இதற்கு சாட்சி.
நான் உடனடியாக பதவி விலக வேண்டுமென்று
கேட்கும் பாரதீய ஜனதா, தனது நோக்கத்திற்காக ஆளுநர் மாளிகையை பயன்படுத்திக்
கொள்கிறது. அரசியல் நன் னெறியைப் பற்றி பேசிக் கொள்ளும் பாரதீய ஜனதா,
நடைமுறையில் அவற்றை எப்படி அலங்கோலப்படுத்து கிறது மற்றும் அரசியல்
சாசனத்தை எப்படி கேலிக் குள்ளாக்குகிறது என்பதை நாடே பார்க்கிறது''
என்றார்.
மேலும், மும்பை சொகுசு விடுதிகளில் தங்க
வைக்கப் பட்டுள்ள அதிருப்தி சட்ட மன்ற உறுப்பினர்கள் அனை வரும் கருநாடகம்
திரும்பி, சட்டமன்ற கூட்டத் தொட ரில் கலந்துகொள்ள வேண்டு மென கோரிக்கை
விடுத்தார் குமாரசாமி.
No comments:
Post a Comment