Wednesday, June 5, 2019

உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு பொதுப்பிரிவு பெண்களுக்கான வார்டு எண்ணிக்கை குறைப்பு

உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீட்டில் சென்னை மாநகராட்சியில் பொது பிரிவு பெண்களுக்கான வார்டு எண்ணிக்கை 92 லிருந்து 89 ஆக குறைக் கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள் ளாட்சி தேர்தல் நடத் துவது தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று திமுக  சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதன்பிறகு சென்னை மாநகராட்சியில் வார்டு மறு வரையறை செய்யும் பணியை மாநகராட்சி தொடங்கியது. இதன் முடிவில் 119 வார்டுகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன.
இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மற்றும் ஊராட்சிகள் ஆகியவற்றில் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் பொது பிரிவு பெண்களுக்கு 89 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொது பிரிவு தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 வார்டுகளும், தாழ்த்தபட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு 16  வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பொது பிரிவிற்கு 79 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையில் பொது பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு 92 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அந்த எண்ணிக்கை தற்போது 89 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி பார்த்தால் பொது பிரிவு பெண்களுக்கு இட ஒதுக்கீட்டில் 3 வார்டுகள் குறைக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் பொது மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...