மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்
கல்லூரிகளில் 100 மாணவர்கள் மருத் துவம் பயிலும் கல்லூரியில் பொது 500
நோயாளிகளுக் கான படுக்கை வசதியும், 150க்கும் மேற்பட்டோர் பயிலும்
கல்லூரியில் 750 நோயாளி களுக்கான படுக்கை வசதியும் இருக்க வேண்டும் என்பது
மருத் துவ கவுன்சில் வகுத்துள்ள முக்கிய விதிகளாகும். போதிய மருத்துவப்
பேரா சிரியர்கள், முறையான கட்டமைப்பு, மாண வர்கள் படிப்பதற்குத் தேவையான
மருத்துவ உப கரணங்கள் இருக்க வேண்டும் என்ப தும் கட்டாய மாகும்.
மேலும் இந்த விதிகளில் ஏதேனும் ஒன்று
குறைந் தாலும் குறிப்பிட்ட கல் லூரியில் மாணவர் சேர்க் கைக்கு தடை விதிக்
கப் படும். இந்நிலையில் மருத் துவ கவுன்சில் நடத்திய ஆய்வில், போதிய கட்ட
மைப்பு வசதிகள் இல்லாத தஞ்சாவூர் பொன் னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி,
சிறீபெரும் புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரி, மற்றும் மருத்துவமனை
ஆகியவற் றில் நடப்பாண்டில் மாண வர் சேர்க்கைக்கு அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் விதி
களை மீறி கட்டடங்கள் க டப்பட்டதாக கூறப் படும் புகாரின் பேரில் வழக்கு
நடந்து வருவதால், மாங் காடு முத்துக்குமரன் மருத் துவக் கல்லூரியில் மாண
வர் சேர்க்கை தொடர்பாக மருத்துவ கவுன்சில் பரி சீலனை செய்து வருவதாக தக
வல்கள் வெளியாகியுள் ளன. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் புதன் கிழமை
வெளியாகும் நிலை யில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு களுக் கான
விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விநி யோகிக்கப்பட உள்ளன. மேலும் தடை
விதிக்கப் பட்ட கல்லூரிகள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்
குறித்து www.tnhealth.org, மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணைய
தளங்களிலோ 04428361674 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ தகவல்களை
தெரிந்துக் கொள்ளலாம் என மருத் துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment