மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட புதிய
கல்விக் கொள்கையில் அனைத்து வகுப்புகளிலும் சமஸ் கிருதம் ஒரு பாடமாக
கட்டாயம் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முக்கியமாக எளிய முறையில்
சமஸ்கிருதம் கற்பதற்கான நூல்கள் இந்தக் கல்வியாண்டில் இருந்தே
விநியோகிக்கவேண்டும் என்றும், இந்தி ஆங்கிலத் தோடு சமஸ்கிருதம் ஒரு மொழியாக
இருக்கவேண்டும் என்றும் அந்தக்கல்விக் கொள்கையில் கூறப்பட் டுள்ளது.
"சமஸ்கிருதம் எளிதாகக் கற்க எளிய
சமஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தி மாநிலமொழிகளிலும், சமஸ்கிருத பேச்சு
மொழியை எழுதுவதன் மூலம் சமஸ்கிருதத்தை எளிமையாகக் கற்றுக் கொள்ளும்
முறையைப் பயன்படுத்தவேண்டும். சமஸ்கிருதப் பாடங்களைத் தேர்வு இல்லாத
முறையில் சிறு பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு 8 ஆம்
வகுப்பில் இருந்து சமஸ்கிருதப் பாடங்களுக்குத் தேர்வு வைக்க வேண்டும்"
என்றும் கூறப்பட்டுள்ளது.
"புதிய வரைவுக் கொள்கையின் தலைவர் கஸ்தூரி
ரங்கன் உட்பட 12 பேர் கொண்ட குழுவினர் அனைவருமே சமஸ்கிருதத்தில் பெரும்
புலமை பெற்றவர்கள்; ஆகையால் அவர்களுக்கு சமஸ் கிருதத்தின் அருமை
தெரிந்துள்ளது, சமஸ்கிருதத்தின் மூலம் எதையுமே கற்கலாம்" என்றும்
கூறுகின்றனர்.
"சமஸ்கிருதம் இந்தியாவை
ஒற்றுமையாக்குகிறது, சமஸ்கிருதத்தின் வழியாக நாம் இந்திய மொழிகளைக்
கற்கவேண்டும். பல அறிவியல் கட்டுரைகள் சமஸ் கிருதத்தில் உள்ளன.
மொழியானாலும், அறிவியல் ஆனாலும், கணிதமானாலும் சமஸ்கிருதம் அனைத் திலுமே
சிறந்த மொழியாக உள்ளது. ஆகவே அதை அனைவரும் படிக்கவேண்டும். குழந்தைகளுக்கு
சமஸ்கிருத பஞ்ச தந்திரக் கதைகள் மூலம் எளிய முறையில் சமஸ்கிருதம்
கற்றுகொடுக்கலாம். அதைக் குழந்தைகள் ஆவலோடு கற்றுக் கொள்ளும். இந்தியாவின்
மிகவும் பழைமை யான மொழி சமஸ்கிருதம், அதைக் கற்றுக் கொள்வதில் யாரும் எந்த
தயக்கமும் காட்டக்கூடாது.
இந்தி பேசும் மாநிலங்கள் இந்தி,
ஆங்கிலத்தோடு சமஸ்கிருதமும் கற்கவேண்டும், இந்தி பேசாத மாநிலங்களில்
ஆரம்பக்கல்வியில் அறிமுகப் பாடமாக இருக்கவேண்டும், பிறகு அவர்கள்
மேற்கல்விக்கு வரும் போது ஏதாவது ஒரு மொழியைத் தேர்தெடுக்கும் இடத்தில்
சமஸ்கிருதத்தை முதன்மைப்படுத்தி சமஸ்கிருதம் கற்பதை ஊக்குவிக்கவேண்டும்.
பழைமை வாய்ந்த மொழிகளான தெலுங்கு, ஒரியா,
வங்காளி, கன்னடம் போன்றவைகள் அந்தந்த மாநிலங்களால் ஊக்குவிக்கப்படுகின்றன.
ஆகவே மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி அனைவரும்
கற்பதை உறுதிப்படுத்த வேண் டும்" என்றும், அந்தக் குழுவின் அறிக்கை குறிப்
பிடுகிறது.
பார்ப்பனீயத்துக்கே உரித்தான பம்மாத்தும், தந்திரமும் கைகோர்த்து ஆடுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் தான் இதில் உள்ள சூட்சமம் விளங்கும்.
செத்துச் சவக்குழிக்குப் போன
சமஸ்கிருதத்திற்கு உயிரூட்டி - சீவி சிங்காரித்து மணமேடையில் அமர வைக்கும்
ஆரியத்தின் ஆபாசமான சிந்தனை இது.
சமஸ்கிருதம் குறித்து இந்துத்துவாதிகள் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர் என்ன கூறுகிறார்?
"மதச் சண்டைகளும், சாதி வேற்றுமைகளும்,
கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும், இருப்பதும்
சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால்
இப்போராட்டங்களும் தொலைந்து போகும்."
(மறைமலை அடிகளின் 'தமிழர் மதம்' - பக்கம் 24)
சமஸ்கிருதத் திணிப்பை இந்தக் கண்ணோட் டத்தில் பார்த்தால் அதன் விபரீதம் விளங்குமே!
No comments:
Post a Comment