இதனிடையே, நிதி ஆயோக் துணைத் தலைவ ராக
இருந்த அரவிந்த் பன காரியா கடந்த 2017 ஆகஸ் டிலும், தலைமை பொருளா தார
ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கடந்த ஆண்டு ஜூனிலும் பதவி விலகினர்.
பிரதமருக்கான பொருளாதார ஆலோ சனை குழுவில் இடம் பெற்றிருந்த பகுதி நேர
உறுப்பினர் சுர்ஜித் பல்லா, கடந்த ஆண்டு டிசம்பரில் பதவி விலகினார்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரல் ஆச்சாரியா தனது
பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிவ டைய இன்னும் 6
மாதங்கள் உள்ள நிலையில் அவர் பதவி விலகியுள்ளார்.
அரசுடனான கருத்து வேறுபாடு
ரிசர்வ் வங்கியின் தன் னாட்சியை
வலியுறுத்தியும், மத்திய நிதியமைச்சகத்தை விமர்சித்தும் பல்வேறு தரு
ணங்களில் இவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற் படுத்தின. கடந்த அக்டோ
பரில் நிகழ்ச்சியொன்றில் பேசிய இவர், மத்திய அரசின் கொள்கைகள் உருவாக்கமா
னது, குறுகிய கண்ணோட்டமும் அரசி யல் சிந்தனைகளும் கொண் டதாக உள்ளது என்று
தெரிவித்தார். ரிசர்வ் வங்கி கையி ருப்புத் தொகை மீதான அதிகாரம் யாருக்கு
உள்ளது என்பது உள்ளிட்ட பல் வேறு விவகாரங்களில் மத் திய அரசுக்கும் ரிசர்வ்
வங் கிக்கும் கருத்து வேறுபாடு கள் நிலவியதையும் ஆச் சார்யாவின்
கருத்துகள் அம் பலப்படுத்தின. இதே போல், வட்டி விகிதங்கள் நிர்ணயத் திலும்
இவர் சில எதிர்ப்பு களை பதிவு செய்திருந்தார்.
No comments:
Post a Comment