சேலத்தில் 8 வழிச்சாலையை எதிர்த்து வாய், கண்ணை கட்டிக் கொண்டு விவசாயிகள் 17 கிராமங்களில் நேற்று பட்டி னிப் போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை விரைவுச்சாலைக்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங் களில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், ஏரி, குளங்கள், மலைகளை அழிக் கவுள்ளனர். இந்த பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்த மாநில வருவாய்த்துறை அதிகாரிகள், கடந்த சில மாதங்களுக்கு முன் நிலத்தை அளவீடு செய்து முட்டுக்கல் நட்டனர். அப்போது, போ ராட்டம் நடத்திய விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இதை யடுத்து 5 மாவட்டங்களிலும் விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனிடையே விவசாயிகள் தரப்பில், 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 8 வழிச்சாலைக் கான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தேர்தல் முடிவுக்குப்பின்
மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையகம் சார்பில் 8 வழிச்சாலை அரசாணையை ரத்து
செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு
செய்யப்பட்டது.
இதனால், சேலம், தர்மபுரி உள்ளிட்ட 5
மாவட்ட விவ சாயிகள் அதிர்ச்சியடைந் தனர். அவர்கள் மீண்டும் தங்களது
போராட்டத்தை தொடங்கி யுள்ளனர்.
விளை நிலங்களில் இறங்கி கருப்புக் கொடி போராட்டங்களை தொ டர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 8 வழிச்
சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் உருவாக்கிய உழவர் உற் பத்தியாளர்
பேரியக்கம் சார் பில் நேற்று, பாதிக்கப்படு கின்ற 17 கிராமங்களிலும்
வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விளை நிலங்களில் பட்டினிப் போ ராட்டம்
நடத்தப்பட்டது.
சேலம் உத்தமசோழபுரத் தில் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவு நம்பிக்கை தருகிறது
சென்னை உயர்நீதிமன்ற தீர்பை எதிர்த்து
மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையகம், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு
செய்தது. அந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி மல் கோத்ரா அமர்வு,
உயர்நீதி மன்ற உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது. மேலும், முறையாக
எந்த அறிவிப் பாணையையும் வெளியி டாமல், நிலத்தை மட்டும் எந்த அடிப்படையில்
கைய கப்படுத்தினீர்கள் என மத் திய, மாநில அரசுக்கு நீதிபதி கள் கேள்வி
எழுப்பினர். நீதிபதிகளின் இந்த உத்தரவு, சேலத்தில் பட்டினிப் போ
ராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுக்கு மகிழ்ச் சியை கொடுத்தது.
அதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ‘‘எட்டு வழிச்சாலைக்கு நிலம்
கையகப்படுத்துவதில் தவறு நடத்துள்ளதை நீதிபதிகள் உணர்ந்துள்ளனர். அத னால்,
நீதி நிச்சயம் வெல்லும். உச்சநீதிமன்றத்தில் விவசா யத்தை காக்கும் வகையில்
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தற் போதைய நீதி
பதிகளின் உத் தரவும் நம்பிக் கை தருகிறது,’’ என்றனர்.
No comments:
Post a Comment