சாமானியர்களுக்கு எளி தாகக் கடன்
வழங்காத வங்கிகள், பெரிய தொழிலதிபர் களுக்கு, கோடி கோடியாக கொட்டி
கொடுக்கின்றன. அவர்களில், விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள், பல
ஆயிரம் கோடியை, செலுத்தாமல், வெளிநாடு களுக்கு தப்பியோடி, அங்கு
தஞ்சமடைந்து விடுகின்றனர். அத்தகையோர் மீது, மத்திய அரசு கடும்
நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், ஆண்டுக்கு ஆண்டு, நிதி முறைகேடு
அளவும், வழக்கு களும் அதிகரித்தபடி உள் ளன.
இதுவரை இல்லாத வகை யில், கடந்த
நிதியாண்டில், 71 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் அளவுக்கு, வங்கிகளில் முறை
கேடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக, 6,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,
விசா ரணை நடந்து வருகிறது. முறைகேடுகள் தொடர்பாக, கடந்த, 11
நிதியாண்டுகளில், 53 ஆயிரத்து, 334 வழக்குகள், தொடரப்பட்டுள்ளன; 2.05
லட்சம் கோடி ரூபாயை, ஏரா ளமானோர் செலுத்தவில்லை.
பெரிய அளவில் நடந்த வங்கி முறைகேடுகள்,
நிதி மோசடி வழக்குகளை, மத்திய அரசின், சி.பி.அய்., மற்றும் அமலாக்க
இயக்குநரகம் போன்ற அமைப்புகளும், விசாரித்து வருகின்றன. இந்த விபரத்தை,
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment