நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்க ளவை
தேர்தல் நடைபெற்று வருகிறது. 6ஆவது கட்ட தேர்தல் நேற்று நடந்தது. உத்தரப்
பிரதேசம் 14, அரியானா 10, பீகார் 8, மத்தியப் பிரதேசம் 8, மேற்கு வங்கம் 8,
டில்லி 7, ஜார்கண்ட் 4 தொகுதிகள் என, 7 மாநிலங்களிலும் உள்ள 59
தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு
வரும் 19ஆம் தேதி 7ஆவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
நேற்று நடந்த தேர்தலில், காலையிலேயே
முக்கியத் தலைவர்கள், வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு
செய்தனர்.குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த
வாக்குச்சாவடியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன்
வரிசையில் நின்று வாக்களித்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல், அவரது தாயாரும்,
அய்க்கிய முற்போக்கு கூட்டணி யின் தலைவருமான சோனியா காந்தி, பிரி யங்கா
காந்தி, ஆம் ஆத்மி கட்சித் தலைவ ரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால், பாஜக
வேட்பாளர் கவுதம் கம்பீர், காங்கிரஸ் வேட்பாளர் விஜேந்தர் சிங்
உள்ளிட்டோர் டில்லியில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
டில்லியில் வாக்குப்பதிவு...
டில்லியில் வாக்குப்பதிவு இயந்திரங் களில்
ஏற்பட்ட கோளாறால் பல இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
இதேபோல், டில்லியில் பல இடங்களில் தங்கள் பெயர்கள் இல்லாததால் வாக்கா
ளர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். அவர்கள் வாக்குச்சாவடி அதிகாரிகளுடன்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
மே.வங்கம்
நேற்று தேர்தல் நடந்த மாநிலங்களிலேயே,
மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிக பதற் றம் காணப்பட்டது. அங்கு நேற்று
முன்தினம் இரவே பாஜக, - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே
ஆங்காங்கே மோதல் ஏற்பட்டு, வன்முறையில் முடிந்தன.
ஜர்கிராம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக
தொண்டர் ராமன் சிங் (46) என்பவரை, ஒரு கும்பல் அடித்து தாக்கியதில் அவர்
டாப்சியா ஊரக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
அதேபோல், பாக பான்பூர் மற்றும் கிழக்கு மிட்னாபூரில் 2 பாஜக தொண்டர்கள்மீது
துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், காயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில்
தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், நேற்று தேர்தல் நடந்த போதும் இம்மாநிலத்தில் பல இடங்களில் பதற்றம் நிலவியது.
காஷ்மீர்
காசிரி வாக்குச்சாவடிக்கு வெடிகுண்டு
மிரட்டல் விடுத்த திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரை காவல்துறையினர் கைது
செய்தனர். அதேபோல், முன்னாள் காவல் துறை அதிகாரியும், ஹாடல் தொகுதி பாஜக
வேட்பாளருமான பாரதி கோஷ், வாக்குப் பதிவு மய்யம் ஒன்றுக்கு சென்றபோது
தடுத்து நிறுத்தப்பட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் அங்கிருந்து புறப்பட்டு மற்றொரு
வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அவருடன் சென்ற வாகனங்கள்மீது வெடிகுண்டு
வீசப் பட்டது. இதில், வாகனங்கள் சேதமடைந்தன. சிலர் காயமடைந்தனர்.
வன்முறையாளர் கள்மீது பாரதியின் பாதுகாவலர்கள் நடத்திய
துப்பாக்கிச்சூட்டில், திரிணாமுலை சேர்ந்த ஒருவர் காயமடைந்ததாக
கூறப்படுகிறது. கிழக்கு மிட்னாபூரில் பாஜக தொண்டர்களை, திரிணாமுல்
காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதால், அவர்கள் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.
உ.பி. - ம.பி.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில்
பெரியளவில் அசம்பாவிதங்கள் இன்றி வாக் குப்பதிவு அமைதியாக நடந்தது.
இதேபோல், பீகாரில் நடந்த வாக்குப்பதிவில் சில இடங் களில் பிரச்சினை
ஏற்பட்டதால் வாக்குப் பதிவில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள்
விரைந்து சென்று அதை சரி செய்து வாக்குப்பதிவை தொடங்கினர். நேற்று நடந்த
6ஆம் கட்ட தேர்தலில் சராசரி யாக 63 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய
அதிகாரிகள் முதல் கட்ட மாக தெரிவித்தனர். சில மாநிலங்களில் இரவு வரையில்
வாக்குப்பதிவு நடந்ததால், பதிவான வாக்குகளின் உண்மையான சதவீத நிலவரம் இன்று
அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment