முன்னாள் அரசு அதிகாரிகள் 66 பேர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம்
புதுடில்லி, ஏப்.10 இந்திய தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மை நெருக்கடியில் தத்தளித்து வருகிறது என்று முன்னாள் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என்று 66 பேர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மை நெருக்கடியில் அவதிப்பட்டு வருவதால் வரவிருக்கும் தேர்தலின் நேர் மையாக நடைபெறுமா என்று அய்யம் எழுந்துள்ள தாக இவர்கள் குடியரசுத்தலைவரிடம் அய்யம் எழுப்பி யுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவதில் ஆளும் பாஜகவுக்குச் சாதகம் மற்றும் சலுகையும் காட் டப்படுவதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகள் எழுப்பி வரும் நிலையில் முன்னாள் சிவில் அதிகாரிகள், ஆட்சியமைப்பு அதிகாரிகள் 66 பேர் கடிதத்தில் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை நெருக்கடியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அதாவது எத்தனையோ பெரிய சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்த தேர்தல் ஆணையம் தேர்தல்களை கவுரவமாக நடத்தியதற்கான பெருமைகளை இதுகாறும் கொண்டிருந்தது. ஆனால் இன்று நம்பகத்தன்மை நெருக்கடி தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம், நியாயம், பாரபட்சமின்மை, மற்றும் திறமை ஆகியவை சமரசம் செய்து கொள்ளப் பட்டுள்ளன. இதன் மூலம் தேர்தல் நடைமுறை நேர் மைக்கு அபாயம் விளைந்துள்ளது. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானம் ஆகும்.
துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்ட 66 பேர்
இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் முன்னாள் அயலுறவு செயலாளர் ஷிவ்சங்கர் மேனன், முன்னாள் திட்ட ஆணைய செயலாளர் என்.சி.சக்சேனா ஆகியோர் உள்பட 66 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதில் ஆச்சரியகரமான ஒரு அதிகாரி யாரெனில் டில்லி யில் பாஜக ஆசியுடன் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு நெருக்கடி கொடுத்த துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங். இவரும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை நெருக்கடி கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால், நஜீப் ஜங்கை பாஜகவின் முகவர் என்று சாடியதும் நினைவுகூரத்தக்கது.
இந்தக் கடிதத்தில் பெரும்பாலும் பாஜகவின் நடத்தை விதிமீறல்களை கண்டும் காணாதும் விடப் பட்டுவரும் தேர்தல் ஆணையத்தின் செயல்கள் சில பட்டியலிடப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் மார்ச் 27ஆம் தேதி மிஷன் சக்தி தொடர்பாக பிரதமர் ஆற்றிய உரையை நேரடியான நடத்தை விதிமீறல் என்று குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment