தமிழக அரசு
சட்டக்கல்லூரிகளில் 186 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிட்டது.
இதில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை என குற்றம்
சாட்டி குணநிதி, சுவாதி ப்ரியா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி
எஸ்.எம்.சுப்ரமணியம், ‘‘நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்குப்
பின்னரும் கூட தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் ஒரு
பழங்குடியினர் கூட பேராசிரியர்களாக நியமிக்கப்படாதது அதிர்ச்சிகரமாக
உள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு, பார் கவுன்சில்,
தமிழக சட்டக்கல்வி இயக்குநர், பல்கலைக்கழகம் என அதிகாரிகள் யாருமே இந்த
இடஒதுக்கீடு விசயத்தில் போதிய கவனம் செலுத்தாதது கண்டனத்துக்குரியது.
இடஒதுக்கீடு விசயத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது தமிழக சட்டத்
துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டு
கொள்கையின்படி அறிவிக்கப்படாத சர்வதேச சட்டத்தில் 10 பணியிடங்கள்,
தொழிலாளர் சட்டத்தில் 10 பணியிடங்கள், அரசியலமைப்பு சட்டத்தில் 15
பணியிடங்கள், நிர்வாக சட்டத்தில் 10 பணியிடங்கள் என மொத்தம் 47 உதவிப்
பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை ரத்து செய்யப் படுகிறது. இட
ஒதுக்கீட்டை முறையாக பின் பற்றாமல் முறையற்ற வகையில் உதவிப்பேரா சிரியர்கள்
தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்ய யுஜிசி சிறப்பு
ஆய்வுக்குழுவை நியமிக்க வேண்டும்.
அரசியல் சாசனம் வழங்கும் இடஒதுக்கீட்டு
கொள்கையை முறையாக அமல்படுத்தாமல் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பெயரை
மட்டும் சட்டக் கல்லூரிகளுக்கும், சட்டப் பல்கலைக் கழகத்துக்கும்
சூட்டுவதால் எந்த பயனும் ஏற்படாது, என மத்திய, மாநில அரசுகளை சாடியுள்ளார்.
No comments:
Post a Comment