Friday, April 27, 2018

ஆளுநர்கள் கையில் மாநிலங்கள்

தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் மட்டுமே ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.     குடியரசுத் தலைவரே ஆர்.எஸ்.எஸ் காரிய சேவக் என்று எந்நேரம் அழைத்தாலும் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களில் பேச்சாளர் மற்றும் பேரணி, ஊர்வலக் கண்காணிப்பாளராக சென்றுவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தின் பன்வாரிலால் புரோ கித்தும் தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது
கர்நாடகா ஆளுநர் வஜுபாய் வாலா: அவர் ஆரம்பகாலம் முதலே பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் நிதித் துறை அமைச்சர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மோடி, பிரதமராகப் பொறுப்பேற்றபோது குஜராத் முதல்வர் போட்டியில் வஜுபாய் வாலாவும் இருந்தார்.  மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ்: தெலங்கானா மாநில பாஜகவைச் சேர்ந்த வித்யாசாகர் ராவ் (69), மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய உள்துறை இணை அமைச்சராகப் பணியாற் றியுள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம், கரீம்நகர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வழக்குரைஞரான இவர் மும்முறை ஆந்திர மாநில எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியுள்ளார்.
கோவா - மிருதுளா சின்ஹா: பீகார் மாநில பாஜக மூத்த தலைவரான மிருதுளா சின்ஹா (71), கோவா மாநில ஆளுநராக பதவியேற்றுள்ளார். இந்தி எழுத்தாளரான அவர் 12-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். கட்சியில் தேசிய மகளிர் அணித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மத்திய சமூகநலத் துறை வாரியத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.  ஜனவரி மாதம் கொல்கத்தாவில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் மேற்குவங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, திரிபுரா ஆளுநர் ததகதா ராய், ஜகதீஷ் முகில், உள்ளிட்ட கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநில ஆளுநர்கள் கலந்துகொண்டனர். நேரடி ஆர்.எஸ்.எஸ் காரரான மேகாலயா ஆளுநர் வி.சண்முகநாதன் 2015-ஆம் ஆண்டு மணிப்பூர் பொறுப்பு ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் தன்னுடைய ஆளுநர் மாளிகையை அந்தப்புரமாக மாற்றி ஆளுநர் மாளிகை ஊழியர்கள் மற்றும் அரசுப் பதவியில் உள்ள பல பெண் அதிகாரிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார். இந்த செயல், சான்றுகளுடன் ஊடகங்களில் வெளியானது, இதனை அடுத்து ஜனவரி 17-ஆம் தேதி அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இவரை பதவி விலகக் கூறியதை அடுத்து இவர் தனது பதவியை இழந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தோ மாநில அரசையே நடத்துபவராக உருவெடுத்துள்ளார்.  ஆளுநர் ஆட்சி நடைபெறும் காலங்களில்கூட மாவட்ட ஆட்சியாளர்களை மாவட்டக் காவல்துறை அதிகாரிகளை மாநில அரசு செயலாளர்களை தனது இடத்துக்கு அழைத்துப் பேசுவாரே தவிர,  ஆளுநரே மாவட்டத்துக்கு மாவட்டம் சுற்றுப் பயணம் செய்து ஆய்வு செய்வது கிடையாது.
ஆனால் தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஓர் ஆட்சி இருக்கும் நிலையில்(?) மாவட்டம் தோறும் தமிழக ஆளுநர் சுற்றுப் பயணம் செய்து ஆய்வு நடத்துவது எல்லாம் அதிகாரம் மீறிய; வரம்பு மீறிய செயல் அல்லாமல் வேறு என்னவாம்?
இது மாநில சுயாட்சிக்கு விரோதமானது என்று சுட்டிக் காட்டியதற்குப் பிறகும், மாவட்டங்களில் ஆளுநர் சுற்றுப் பயணம் செய்யும் போதெல்லாம் தி.மு.க. சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியும்கூட, தன் போக்கை மாற்றிக் கொள்ள அவர் தயாராக இல்லை என்பது அதீதமான செயலே!


ஆட்டுக்குத் தாடி எதற்கு, நாட்டுக்கு கவர்னர் எதற்கு ?என்று சொன்னவர் அறிஞர் அண்ணா. அந்த அண்ணா பெயரில் கட்சியையும், ஆட்சியையும் நடத்திக் கொண்டு இருப்பவர்கள் இது குறித்து சற்றும் சுரணையின்றி இருப்பது தமிழ் மண்ணுக்கே தலைக் குனிவுதான்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...