Friday, April 27, 2018

2016 கிரகணம் - 2018 லுமா?

கணக்கில் வராத பணம், கருப்புப் பணம், கள்ள நோட்டு, தீவிரவாதச் செயலில் ஈடுபடும் பணம் எல்லாம்  வெளியே கொண்டுவருவதற்கென மோடி எடுத்த ‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை’ பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ‘டிமானிடைசேஷன்’ என்று ஆங்கிலத்தில் கூறப்பட்ட இத்திட்டம் மோடியின் தனிப்பட்ட முடிவாகும்.
இத்திட்டம் ஏன் தோல்வியடைந்தது?  சென்ற ஆண்டு முழுவதும் இந்த பேச்சு அடிபட்டுக்கொண்டே இருந்தது. ரிசர்வ் வங்கி முழுமையாக வெளியிட்ட அறிக்கையில் தெளிவாகத் தெரிந்த பிறகும், மோடியும், மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து இது ஒரு மெகா வெற்றி என்று பிதற்றிக்கொண்டு உள்ளனர்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றி பெற்றதா, தோல்வியடைந்ததா? ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத் தின்படி மோடியின் நடவடிக்கை ஒரு வரலாற்றுத் தோல்வி! 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்தது. கணக்கில் வராத பணத்தை வைத் திருப்போர் வங்கியில் அதைச் செலுத்த மாட்டார்கள், அதனால் சட்டவிரோதப் பணம் பெருமளவில் ஒழியும் என்பதே அரசின் நம்பிக்கை.
இதற்கு மாறாக, 2017 ஜூன் 30 வரை 15.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் வைப்பாகச் செலுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. இதன்படி மதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளில் சுமார் 99 சதவீதம் வங்கிக்குத் திரும்பி வந்துள்ளது. எனவே, கிட்டத்தட்ட ரொக்கமாக இருந்த கருப்புப் பணம் முழுவதும் வங்கிக்கு வந்து விட்டது. உண்மையில் அரசு நினைத்தபடி அது ஒழிய வில்லை.
கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள், பணம் இல்லாத பிறரிடம் அதைக் கொடுத்து, அவர்களது வங்கிக் கணக் கில் போட்டு தங்கள் பணத்தை காப்பாற்றிக்கொண்டதாக விளக்கம் கூறப்படுகிறது. கள்ள நோட்டுகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்கும் இந்த பண நீக்க நடவடிக்கை பெரிய அளவில் உதவியதாகத் தெரியவில்லை. ஏப்ரல் 2016 முதல் மார்ச் 2017 வரையில் கண்டுபிடிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 5,73,891 என்கிறது ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம்.
மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட மொத்தம் 15.44 கோடி ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டு என்பது பூஜ்ஜியம் சதவீதத்தைவிடக் கொஞ்சம் அதிகம், அவ்வளவே. முந்தைய ஆண்டில் பணநீக்க நடவடிக்கை ஏதும் இல்லாமலே கண்டுபிடிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 4,04,794. எனவே, பண மதிப்பு நீக்க நடவடிக்கை அதன் முதன்மையான இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதில் படுதோல்வி அடைந்துவிட்டது.
இதில் நகைச்சுவை என்னவென்றால், ரொக்கமாக எவ்வளவு கருப்புப் பணம் இருக்கிறது என்பதைப்பற்றி அரசிடம் புள்ளிவிவரம் ஏதும் இல்லை. 2016 டிசம்பர் 16 அன்று நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் அளித்த பதிலில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இதைத் தெரிவித் தார். கருப்புப் பணத்தில் 5 சதவீத அளவுக்கே ரொக்கமாக மக்கள் வைத்திருக்கிறார்கள் என்று வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனைகளில் தெரியவருகிறது.
பொதுத் தளத்தில் போதிய புள்ளிவிவரம் ஏதும் இல்லாவிட்டாலும் சில பொருளியல் வல்லுநர்கள் தாங் களாக ஒரு புள்ளிவிவரத்தைக் குறிப்பிட்டு மோடி அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்கள். அவர்களின் கணிப்புகளை எந்த தர்க்கத்தின் மீது கட்டமைக்கிறார்கள் என்பதை அவர்கள் விளக்கத் தவறுகிறார்கள்.
இந்தப் பண மதிப்பு நீக்க நடவடிக்கை இந்தியாவின் மிகப்பெரிய ரொக்கப் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்தது. அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த 2.5 லட்சம் தொழில் அலகுகள் மூடப்பட்டதாகவும், ரியல் எஸ்டேட் துறை பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், பெரும் எண்ணிக் கையிலான மக்கள் தங்கள் வேலையை இழந்ததாகவும் பாஜகவின் தொழிற்சங்கப் பிரிவான பாரதீய மஸ்தூர் சங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. பரவலாக ரொக்கத்தி லேயே கொடுக்கல் வாங்கல் நடக்கும் வேளாண்மைப் பொருளாதாரமும் பெரிய அளவில் அடி வாங்கியது. விவசாயிகள் விளைவித்த பருப்பு, காய்கறிகளுக்கு போதிய அளவில் விலை கிடைக்காமல் போனது. பல விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். பல மாநில அரசுகள் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்தன. எல்லாவற்றுக் கும் மேலாக, இந்த நடவடிக்கையால் பெரிய அளவில் ரொக்கப் பற்றாக்குறை ஏற்பட்டது. தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கு, மக்கள் பல நாள்கள் ஏ.டி.எம். வாசலில் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடந்தார்கள். பலரும் இறந்தும் போனார்கள்.
ஆனால், இந்த நடவடிக்கையை மிகப்பெரிய தவறு என்று மோடி ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இது அவரின் சுபாவத்தைப் பொருத்தது.
2017 ஆம் ஆண்டு முழுவதுமே பேசப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை 2018 ஆம் ஆண்டின் மத்தியில் மிகப்பெரிய பொருளாதார சரிவை ஏற்படுத்தும் என்பதை பல பொருளியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஆனா லும் மோடி மிகவும் பிடிவாதமாக கார்ப்பரேட் பொருளா தாரத்தை மேலும் திணிக்கும் நடவடிக்கையில் இறங்கி யுள்ளார்.
2016 நவம்பரில் மக்களைப் பீடித்த பொருளாதார கிரகணம் 2018 லும் தொடரப் போகிறது - இதுதான் மோடி அரசின் மகத்தான பொருளாதாரப் புரட்சி(?)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...