உணவில் அதிகமான காரம், எண்ணெய் பொருட்கள், காலம் தவறி சாப்பிடுவது, இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருப்பது போன்றவற்றால் உடல் உஷ்ணமாகி கல்லீரல் கெட்டுப் போகிறது. மது குடிப்பது, நீரில் கலந்து வரும் நச்சுக்கள், கிருமிகள் போன்றவற்றால் ஈரல் கோளாறு ஏற்படுகிறது. எளிதில் கிடைக்க கூடிய சுக்கு, மிளகு, சீரகம், பப்பாளி, வெங்காயம் போன்றவை கல்லீரலை பலப்படுத்தும், நோயை தடுக்கும் மருந்தாக அமைகிறது.
பப்பாளியை பயன்படுத்தி கல்லீரல் நோய்களை குணப் படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பப்பாளி, சீரகம். பப்பாளி பழத்தை பசையாக அரைத்து, 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகப்பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வாரம் ஒருமுறை எடுத்து கொண்டால் கல்லீரல் பாதிப்பது தடுக்கப்படும்.
மஞ்சள் காமாலையின் அளவு குறையும். தொற்றினால் வரும் மஞ்சள் காமாலைக்கு இது மருந்தாகிறது. ஈரல் வீக்கத்தை வற்றிப்போக செய்கிறது. கல்லீரல் ஈரல் பலப்படுவதுடன் நன்றாக செயல்படும். பப்பாளியில் உள்ள வேதிப்பொருள், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
வெங்காயத்தை கொண்டு கல்லீரலில் ஏற்படும் கொழுப்பை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். சின்ன வெங்காயத்தை தோல்நீக்கி பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால் கல்லீரலில் உள்ள கொழுப்பு குறையும். இந்த மருந்தில் உப்பு, சர்க்கரை சேர்க்க கூடாது. ரசாயன மருந்துகளால் கல்லீரல் கெட்டு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
ஈரலை பாதுகாக்கும் மருந்தாக வெங்காயம், மிளகு விளங்குகிறது. நாவல் பழத்தை பயன்படுத்தி கல்லீரல் வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நாவல்பழம், சுக்குப்பொடி. நாவல் பழத்தின் சதை பகுதியை எடுக்கவும். இதனுடன், கால் ஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஒரு மாதம் குடித்து வந்தால், கல்லீரல் வீக்கம் குறைய ஆரம்பிக்கும்.
ஈரலில் வீக்கம் ஏற்பட்டால், வயிறு கனத்து போகும். உடல் சிறுத்து கை கால்கள் மெலிந்து காணப்படும். முகம் ஒட்டிப்போகும். வயிறு, காலில் வீக்கம் ஏற்பட்டு பசியின்மை இருக்கும். இந்நிலையில், கல்லீரல் வீக்கத்துக்கு நாவல் பழம் அற்புத மருந்தாகிது. கல்லீரல் பிரச்சினைகளை தவிர்க்க அசைவ உணவுகள், காரம் ஆகியவற்றை அளவுடன் எடுத்துக்கொள்வது அவசியம்.
No comments:
Post a Comment