- தந்தை பெரியார்
சங்கராச்சாரியின் அட்டகாசமும், ஆணவமும், கொள் ளையும், இன்று சென்னையில் தாண்டவமாடுகின்றது. ஏன் என்று கேட்பாரில்லை? பார்ப்பனரல்லாத மக்கள் அவர்காலில் 1000, 2000, 3000, 5000, 10000 ரூ. கணக்காய் கொண்டு. போய்க் கொட்டி பெண்டு பிள்ளைகளுடன் விழுந்து கும்பிட்டு பாத தீர்த்தம் வாங்கி சாப்பிட்டு விட்டு வருகிறார்கள். சங்கராச்சாரி கால் கழுவின தண்ணீர் இன்று தங்கத்தை விட ஏன் - வைரத்தை விட அதிக விலைக்கு விற்கப் படுகின்றது. சுயராஜ்யம் கேட்கும் ஆட்களும் காந்தி சுயராஜ்யத்திற்கு அதாவது ராமராஜ்யத்திற்கு 1,000, 10,000 என்று காந்தி சிஷ்யர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு அள்ளியள்ளிக் கொடுத்த ஆட்களும் இதில் அதிகம் இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதாவது கடுகளவு அறிவாவது சுயமரியாதையாவது இருக் கின்றதா? என்பது தான் நமது சந்தேகம்.
சங்கராச்சாரி என்றால் என்ன? யாருக்கு சங்கராச்சாரி? அவரது கொள்கை என்ன? நடப்பு என்ன? வேஷம் என்ன? எண்ணம் என்ன? அனுபவம் என்ன? என்பது போன்ற ஒவ்வொன்றையும் யாராவது கவனித்தார்களா? அல்லது கவனித்தும் வேண்டுமென்றே தெரியாதவர்கள் போல் நடந்து கொள்ளுகிறார்களா? என்பது நமக்கு விளங்கவில்லை.
தோழர்களே! சற்று கவனித்துப் பாருங்கள். சங்கராச்சாரியார் என்பவர் ஒரு விதமான ஆணவம் பிடித்த நாதிகக் கொள்ளைக்காரர் அதாவது கடவுள் என்று ஒரு தனிப் பொருள் கிடையாது என்பதோடு தானே தான் கடவுள் என்ற கொள்கையுடையவர்.
ஆனால் அவர் தினமும் பூஜிக்கும் உருவமோ ஒரு தனிக் கடவுள் உருவம். அதிலும் பெண் கடவுள் அதாவது சக்தி பூஜை வேஷமோ, சைவவேஷம், விபூதி பட்டை பட்டையாய் பூசிக் கொள்வது.
நிலையோ சந்யாசி நிலை அதாவது தலை மொட்டை காவிவதிரம்
அனுபவமோ, ராஜபோகம், யானை - குதிரை - பல்லக்கு படை, எடுபிடி ஆள்கள்.
இந்த நிலையில் உள்ள இவரால் பொது மக்களுக்கு ஏற்படும் பயனோ தண்டவரி அதாவது சர்க்கார் தண்ட வரியை விட மோசமான வரி. பார்ப்பன உத்தியோகதர் களையும் செல்வாக்கான பார்ப்பன வக்கீல்களையும், பார்ப் பன பத்திராதிபர்களையும் விட்டு மிரட்டியும் தாட்சண்யத் திற்குக் கட்டுப்படுத்தப் படக் கூடிய தந்திரத்தைச் செய்தும் மக்களின் விதரை நசுக்குவது போல் நிர்ப்பந்தப் படுத்தி பணம் வசூல் செய்வது.
இப்படி வசூல் செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு செய்யப்படும் காரியமோ பார்ப்பன சோம்பேறிகளுக்கும், கொட்டாப்புளிகளுக்கும் பானை பானையாய் பாயாசம் வடையுடன் பொங்கிப் போடுவது.
பணங்கொடுத்தவர்களுக்கு பயனோ, கொடுப்பதையும் கொடுத்து சங்கராச்சாரிகாலில் பெண்டு பிள்ளைகளுடன் விழுந்து போதாக்குறைக்கு அவர் கால் கழுவின தண் ணீரையும் குடித்து விட்டு வந்து வீடு சேருவது.
இவ்வளவோடு இந்த சீன் முடிவு பெருவதில்லை. பணம் கொடுத்த பார்ப்பனரல்லாதார் வீடு வந்து சேருவதற்கு முன்பதாகவே பணம் கொடுத்த பார்ப்பனரல்லாதார்களை பார்த்ததற்காகவும் அவர்களுடன் பேசினதற்காகவும் அந்தத் தோஷ பரிகாரத்துக்காக இவர்கள் பணத்திலேயே பார்ப் பனருக்கு தானம் வழங்குவதும், அவரும் குளித்து முழுகி தீட்டைக் கழித்து விட்டு ஜபம் செய்து தோஷத்தைப் பரிகாரம் செய்து கொள்ளுவதும் ஆகும்.
இவை ஒரு புறமிருக்க, இவருக்குத் தனியோக்கியதை என்ன என்பதைப் பார்ப்போம். இவர் ஒரு சாதாரண பார்ப்பனர் இவருக்கு முன் அந்தப் பட்டத்தில் இருந்தவர் இவரைப் பிடித்து வைத்து விட்டுப் போனார் என்பதைத் தவிர, வேறு ஒரு யோக்கியதையோ அருகதையோ கிடை யாது. இவருக்குப் பிறகு யார் அந்தப் பட்டத்துக்கு வருவார் என்பதும் இவர் பிடித்த வைக்கும் ஆளேயொழிய வேறில்லை. இவர் காலம் முடியும் வரை எந்த வழியிலாவது இவருக்கு திருப்தியாய் நடந்து கொள்ளுகின்றவர்கள். அந்த தானத்திற்கு அருகதையாகி விடுவார்கள். ஆகவே, வாக்கு சுதந்திரம், ஓட்டு சுதந்திரம், ஜன நாயகம் கேட்கின்றோம் என்று சொல்லும் பார்ப்பனர்கள் அதை விட மேலானதாகக் கருதும் தங்கள் மத விஷயத்தில் ஆத்மார்த்த பரமார்த்திக விஷயத்தில் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பதையும் இந்தப் படி நடந்துக் கொள்வது அறிவில்லாமலா? அல்லது மேதாவித்தனத்தாலா அல்லது இதுவும் சுயராஜ்யம் தேசியம் என்பதைப் போன்ற ஒரு சூழ்ச்சியாலா? என்று யோசித்துப் பாருங்கள்.
நிற்க, சகலத்தையும், துறந்து ஆன்ம கோடிகள் உய்வ தற்காக உலகில் தோன்றிய அவதார புருஷரான சங்கராச்சாரிய சுவாமிகள் யானை, குதிரை, பல்லக்கு இதைத் தூக்க 32 ஆள்கள் மற்றும் படைகொடி எதற்கு என்று கேட்பது ஒரு புறமிருக்க இவருக்கு அதாவது இந்த சந்யாசிக்கு பிச்சைக்கு என்று தினம் 1க்கு 500 ரூ அழுவது எதற்காக என்று கேட் கின்றோம். இவர் பக்தாள் வீடுகளுக்குச் செல்லத் தனித்தனி ரேட்டுகள் எதற்காக என்று, கேட்கின்றோம்.
இந்தப்படி வசூலித்த பணத்தைக் கொண்டு பொங்கிப் பொங்கிப் போடும் சமாராதனையில் பணம் கொடுத்த பார்ப் பனரல்லார் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்று கேட் கின்றோம்?
ஒரு சமுகத்தில் எவ்வளவுதான் அடி முட்டாள்கள் இருந்து விட்டாலும் அதை இன்ன அளவு தான் ஏமாற்றுவது என்கின்ற ஒரு பட்சாதாபமாவது இருக்க வேண்டமா? என்று கேட்கின்றோம். இவைகளையெல்லாம் நன்றாய் யோசித்துப் பார்த்தோமேயானால் இது ஒரு பார்ப்பனப் பிரசாரம் என்றும் பார்ப்பன ஆதிக்கத்திற்காக செய்யப்படும் பார்ப்பன மத சூழ்ச்சிப் பிரசாரம் என்றும் சொல்லலாமல் வேறு என்ன சொல்ல இருக்கின்றது.
காந்தியை மகாத்மா ஆக்கினதில் எத்தனை சோம்பேறி களுக்கு வயிற்றுப் பிழைப்புக்கும் உத்தியோகம், பதவி புகழ் வேட்டைக்கும். இடம் கிடைத்ததோ அதைவிட எத்தனையோ மடங்கு அதிகமான பேருக்கு ஒரு பார்ப்பனரைச் சங்கராச்சாரி லோக குரு ஆக்கினதில் வயிற்றுப் பிழைப்பு மாத்திரமில்லாமல் உயர்ந்த ஜாதி நிலையும் ஏற்பட்டு வருகின்றது.
சங்கராச்சாரி இன்னார் என்றும் அவருடைய யோக் கியதை இன்னதென்றும் நம்மைவிட பல மடங்கு அதிக மாகவே பார்ப்பனருக்கும் தெரியுமானாலும் அதை ஒரு சாதனமாய் வைத்து அதாவது கோவிலை ஒரு கல்லை நட்டு அதன் மூலமாக மக்களைக் கொள்ளை அடிப்பது போல் மத வியாபாரம் நடத்துகிறார்கள். இந்த மாயையில் பார்ப்பன ரல்லாத மக்கள் சிக்கிப் பணத்தை அள்ளிக் கொடுப்பதென் றால் அறிவுள்ள யாருக்குத் தான் வயிறு கொதிக்காது என்று கேட்கின்றோம்.
இந்த லட்சணத்தில் அவர் குருவாயூர் கோவில் பிர வேசத்தைப் பற்றி ஜாமொர்னுக்கு சண்டாளர்களைக் கோவிலுக்குள் விடாதே என்று தந்தி கொடுத்திருக் கிறாராம். இது எவ்வளவு அயோக்கியத்னமான காரியம் என்று கேட் கின்றோம். இவருக்கு (அதாவது சங்கராச்சாரிக்கும்) குருவாயூ ருக்கும் எந்த விதத்தில் சம்பந்தம் என்று கேட்கின்றோம்.
அப்துல் காதருக்கும், ஆடி அமாவாசைக்கும் உள்ள சம்மந்தம் போல் இவரோ தானே கடவுள் என்பவர், சைவவேஷக்காரர். சக்தி பூசைக்காரர், சன்னியாசி துறவி ஆகிய இத்தனைக்கும் சம்மந்தம் இல்லாத ஒரு கல்லுருவம் உள்ள இடம் .அதுவும் விஷ்ணுசாமி என்கின்ற பெயர் கொண்ட கல் உருவம் உள்ள கோவில். அதுவும் பாமர மக்களை உஜ்ஜீவிக்கச் செய்ய அச்சவதாரமாய் எழுந்தருளி இருக்கும் இடம், அதுவும் ஒரு மனித உருவ திரியின் வயிற் றில் பிறந்து வளர்ந்து பிறகு கடவுளாகி வந்த அய்தீகத்தை ஆதாரமாய் வைத்து செய்யப்பட்ட உருவத்தினிடம் ஒரு கூட்டத்தாரை மாத்திரம் போக விடப்படக்கூடாது என்றும், அவர்கள் சண்டாளர்கள் என்றும், தந்தி கொடுப்பதென்றால் அதுவும் எப்படிப்பட்ட சமயத்தில் இரண்டு உயிர்கள் அதாவது ஒரு மகாத்மா என்னும் உயிரும் மற்றொன்று மகாத்மாவினது பிரீதிக்கு பாத்திரமான உயிரும் ஆக இரண்டு உயிரும் செத்தாலும் சரி அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை, கல்லுருவத்தினிடம் மாத்திரம் மனிதனை விட்டு விடாதே என்கின்ற கருத்தின் மீது தந்தி கொடுப்ப தென்றால் இதன் ஆணவத்தையும், அகம்பாவத்தையும் என்னவென்று சொல்வது? ஒரு சமயம் இவருக்கு ஜீவன் களிடத்தில் அன்பும், சமத்துவமும் நேரான ஞானமும் இருந் திருக்குமானால் யார் செத்தாலும் கவலையில்லை மக்களில் ஒரு சமுகத்திற்கும் ஒருவித இழிவும் இருக்கக் கூடாது எல்லோரையும் உள்ளே விட்டு அவர்களுக்கு உள்ள இழிவை நீக்குங்கள் என்று தந்தி கொடுத்திருந்தால் இவரை மனித சமுகத்தில் சேர்க்கலாம். அப்படிக் கில்லாமல் இந்தப் படிக்கு தந்தி கொடுப்பதை நினைத்தால் இந்த தாபனத்தின் அட்டூழியம் எவ்வளவு என்பது தான் முன் வந்து நிற்கின்றது.
தோழர்கள் காந்தியும், கேளப்பனும், செத்துப் போவார் களே என்று நாம் சிறிதும் கவலை கொண்டு இவ்விதம் எழுத வில்லை. அவர்கள் இருவரும் எப்படியாவது, என்றைக்காவது சாகின்றவர்கள் தாம் என்பது நமக்கு நன்றாய்த் தெரியும். அவர்கள் தங்களுடைய உயிரை வியாதிக்கும் மூப்புக்கும் பலியாய் கொடுப்பதை விட ஒரு புகழுக்கோ அல்லது தாங்கள் நல்லது என்று நினைக்கிற ஒரு காரியத்திற்கோ பலி கொடுப்போமே என்று எண்ணி இருக்கலாம். அல்லது பல காரணங்களால் வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றி இருக்க லாம். அதலால் நமக்கு அதைப் பற்றி கவலை இல்லை. சங்க ராச்சாரியாரின் இப்படிப்பட்ட காரியமும் அவர் ஆதரவால் நடத்தப்படும் பார்ப்பன ஆதிக்கப் பிரசாரமும் சாதிக்கக் கூடியதாயில்லை என்பதற்காகவே, இதை எழுதுகின்றோம். சங்கராச்சாரி சென்னையில் இன்னும் ஒரு மாத காலம் தங்கப் போவதாகவும் அதற்குப் பல பேர் பார்ப்பனரல்லா தார்களே இன்றும் பல ஆயிர ரூபாய்கள் கொடுக்கப் போவதாகவும் யாரோ ஒரு மார்வாடி சேட் ஒரு மாதத்திய செலவையும் அதாவது சுமார் 10, 20 ஆயிரம் ரூபாயையும் பொருத்துக் கொள்ளப் போவதாகவும் கேள்விப் பட்டோம். இது உண்மையாய் இருக்குமானால் இதை மனதார அனுமதிக்க லாமா? என்பதே தான் இப்போதைய நமது கேள்வி. நாட்டில் உள்ள பண நெருக்கடி எவ்வளவு? ஏழைகள் தொழிலாளர்கள் வேலை யில்லாமல் கூலி இல்லாமல் பிள்ளை குட்டிகளுடன் பட்டினி கிடந்து தொல்லைப்படுவது எவ்வளவு? உதாரணமாக எம். எ. எம். ரயில்வே தொழிலாளர்கள் வேலையில்லாத காரணத்தால் சிலரால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டு அவரவர்கள் வீட்டு அடுப்பில் பூனைக்குட்டிகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களது பிள்ளைகுட்டிகள் பட்டினி யால் மடிகின்றன.
ஏன் என்று கேட்க நாதியில்லை. ஆனால், சோம்பேறிப் பார்ப்பனர்களுக்குத் தின்று கொழுக்க என்று சமாராதனைக்குப் பதினாயிரக்கணக்கான ரூபாய் கொள்ளை போகின்றதுடன் வேகின்ற வீட்டில் பிடிங்கினது லாபம் என்பது போல் வேலை நிறுத்தத்தை ஆதரவாய் வைத்துக் கொண்டு தாங்கள் பெரிய மனிதர்களாகவும் நோகாமல் சட்ட சபைக்குப் போகவும் சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதைத் தவிர வேறு என்ன நடக்கின்றது என்று கேட்கின்றோம்.
தேசியப் பத்திரிகைகள் தொழிலாளர்களிடத்தில் சுயமரியாதைக் கொள்கைளைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து விட்டு தங்கள் பத்திரிகையில் சங்கராச்சாரி பிரசாரத் திற்கு தினம் 5 கலமும், சீர்திருத்த ஆச்சாரிக்கு தினம் 10 கலமும் இடம் ஒதுக்குவதைத் தவிர மற்றும் இதில் பிரவேசித் தால் தங்களுக்கு ஏதாவது தலைமை தானம் கிடைக்குமா என்றும் மீன்கொத்தி குருவிபோல் பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்கின்றன என்று கேட்கின்றோம்.
ஆகவே நாம் முடிவாகச் சொல்லுவதென்ன வென்றால், கள், சாராயக் கடை மறியலை விட, அன்னியத்துணி மறியலை விட மற்றும் கோவில் பிரவேதத்திற்கு உயிர் விடுவதை விட, சங்கராச்சாரி கொள்ளையையும், அட்டூழியத்தையும், அவர் பார்பனரல்லாத மக்களை இழிவுபடுத்திப் பிரசாரம் செய்வதை யும் அடக்கு வதற்குப் பாடுபடுவதே முக்கிய கடமை என்று சொல்லுகின்றோம். ஏனெனில் இது நமது சமுகத்திற்கே அவமானம்! அவமானம்!! அளவு கடந்த அவமானம்!!!
குடிஅரசு - தலையங்கம் - 18.12.1932

.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மக்களின் திருவிழா! சென்னை புத்தகத்திருவிழா! எதைக்காட்டுகிறது இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள்?
- பிற ஏட்டிலிருந்து.... நீதித் துறையிலும் தொடரும் எண் விளையாட்டு..?
- உள்ளுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கும் பகைவன்
- எடை மேடை சேது காப்பியம் - 7 திருப்புமுனைக் காண்டம்
- மோடி அளிப்பதாக உறுதி அளித்த நல்லாட்சி எங்கே? அருண்ஷோரி சாடுகிறார்
No comments:
Post a Comment