Monday, June 13, 2016

உள்ளுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கும் பகைவன்

- சந்தீப் பாம்சாய்


பொருளாதார நிலையில் மிகவேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக நாம் இருக்கிறோம் என்ற உண்மையில் மனநிறைவடைந்துள்ள நாம், நம்மைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கட்டமைப்பு பிரச்சினைகள் பற்றிய நினைவே அற்றவர்களாக உள்ளோம். கடந்த இரண்டாண்டு கால ஆட்சியில் மத்திய பா.ஜ.க.அரசு  எந்த ஒரு உருப் படியான சீர்திருத்தக் கருத்தையும் முன்வைத்து நடை முறைப்படுத்தவில்லை. செயலற்று சோர்ந்து போயிருக்கும் நமது பொருளாதார நிலைக்கு மூச்சுக்காற்றை அளித்து புத்துயிரூட்டும் எந்த ஒரு நடவடிக்கையையும் அது மேற்கொள்ளவில்லை. பெரும்பான்மையினரின் ஆதிக்கம் என்ற தங்களது கருத்துக்காகத் தங்களுக்குக் கிடைத்த தேர்தல் வெற்றியினால் குருடாகிப் போன பா.ஜ.க. ஒருமித்த முறையில் ஆட்சி செலுத்தாமல் பகுதி பகுதியாக செலுத்தி வந்த ஆட்சியின் காரணமாக, நிலையாக இல்லாமல் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் பொருளாதாரத்தின் பல்வகைப்பட்ட  தன்மையை உணர்ந்தறிந்து பின்பற்ற இயலாத பா.ஜ.க. ஆட்சி,  தனது இரண்டாண்டு கால ஆட்சி யின் போது எந்த நிலையிலும் சீர்திருத்தத்திற்குத்  தாங்கள் தயாரா இருப்பதை துணிவுடன் காட்டிக்கொள்ளவில்லை. 
அண்மையில் நடந்தேறிய அகண்ட பசிபிக் பெருங்கடல் நாடுகளின் பங்களிப்பு மற்றும் ஒருங்கிணைந்த வட்டார பொருளாதார பங்களிப்பு ஒப்பந்தங்களின்போது நடை பெற்ற கருத்தரங்கில், அயல்துறை வணிகத்தில் மிகச் சிறந்த சிந்தனை ஆற்றல் கொண்ட இந்தியர்களில் ஒருவர், பா.ஜ.க. மத்திய அரசைப் பற்றி விமர்சிக்கும்போது எந்த சொற் களையும் மிச்சம் வைக்காமல் தனது கருத்தை இவ்வாறு  படம் பிடித்துக் காட்டியுள்ளார்: இந்த உயர்ந்த வட்ட மேசையில் தனக்கு ஒரு இடம் கிடைத்த அளவுக்கு மட்டுமே மகிழ்ச்சி அடைந்திருந்ததே அல்லாமல்,  சரியாகத் திட்டமிட்டு, மற்றவர்களை மனநிறைவடையச் செய்யும் வழியில் பேசி தனது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள இந்தியா  தவறிவிட்டது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.  காங்கிரஸ் கட்சியின் விரோதமனப்பான் மையைப் பற்றி கோபாவேசத்தோடு குற்றஞ்சாட்டி, தனது நட்புணர்வுக் கருத்தில் பா.ஜ.க. முழுமையான மனமயக்கத் தில் ஆழ்ந்திருந்தது   அதைவிட மோசமாக தோன்றியது.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியோ தன் மீது பூசப்பட்ட ஊழல் சாயத்தைத் துடைத்தெறிய முடியாமல், தொடர்ந்து செல்வாக்கு இழந்து கொண்டே வருகிறது. என்றாலும் நேரு-காந்தி பாரம்பரியத்துக்கு எதிராக பா.ஜ.கட்சியினால் உருவாக்கப்பட்ட கோபத்தை எதிர்கொண்டு கையாள வேண்டிய கடமை இந்த பழம்பெரும் கட்சியான காங் கிரசுக்கு உண்டு. இதன் காரணம் என்னவென்றால்,  பா.ஜ. கட்சியின். நோக்கம், காங்கிரசின் இன்றைய நேரு-காந்தி பாரம்பரியத் தலைவர்களை மதிப்பிழக்கச் செய்வது மட்டுமல்லாமல்,  நேருவின் தியாக வரலாற்றையே திருத்தி எழுதி, இந்தியாவின் தற்போதைய முன்னேற்றத்தில் அவ ருக்கு இருக்கும் பங்களிப்பை இல்லாமல் செய்வதும் தான்.”

கடந்த தங்களின் 24 மாத கால மத்திய ஆட்சியில், தங்கள் அரசு மிகமிக அற்புதமாக செயல்பட்டிருப்பதாக நரேந்திர மோடியும், பா.ஜ.க.வும் பெருமை பட்டுக் கொள்ளக் கூடும். ஆனால் நிதர்சனமான உண்மை அதற்கு மாறானதாகும்.. லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் பா.ஜ.க. ஆட்சியில் சாட்டப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டாலும், கடந்த இரண்டாண்டு காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்காக எவர் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. நாடகத்தனமாக நடந்த கைதுப் படலங்களுக்குப் பின்னும், விசாரணைப் படலங்களுக்குப் பின்னும் எவர் ஒருவரும் லஞ்ச ஊழலுக்காக தண்டிக்கப் படவில்லை.  ரங்டா சகோதரர்களுக்கு சிறை தண்டனை அளிக்கப் பட்டதுடன், மத்திய புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த புகழ் பெற்ற நிலக்கரி ஊழல் வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. ஆனால் அவர்களும் இப்போது பிணையில் சிறைக்கு வெளியில்தான் உள்ளனர்.

ரயில்வே, நெடுஞ்சாலை, நிலக்கரி மற்றும் மின்னாற்றல் துறைகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் கடமை உணர்வு மிகுந்த செயலாற்றல் காரணமாக, இத் துறைகளில் முன்னேற் றங்கள் ஏற்பட்டுள்ளன. எல்.இ.டி., பெஹால், ஜன்தன் மற்றும் டி.ஈ.டி. ஆகியவை மிகச் சிறந்த நிர்வாக சீர்திருத்தத் திட்டங்களாகும். ஆனால், இத் துறைகளில் தீவிரமான மாற்றம் எதனையும் உடனடியாக மேற்கொள்வதற்கான ஆர்வத்தை பா.ஜ.க. அரசு எந்த விதத்திலும் காட்டவில்லை. அய்க்கிய முற்போக்குக் கூட் டணி அரசினால் போடப்பட்ட முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு பா.ஜ.க.அரசுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது என்பது உண்மைதான். ஆனால், அதிகாரிகளின் மாற்றங்கள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டதும், உயர் அதிகாரிகள் மரியாதை இன்றி நடத்தப்பட்டதும்,  மன உணர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவி செய்ய வில்லை.  ஒரு வேளை, கொள்கை முடக்கத்தின் இடத்தை, அதிகாரிகளின்   முடக்கம்   பிடித்துக் கொண்டிருக்கக் கூடும். உயர்நீதிமன்றம்,  தலைமைக் கணக்குத் தணிக்கை யாளர், லஞ்ச ஊழல் ஆணையர், குற்றவியல் விசாரணை ஆணையர், மத்திய புலனாய்வுத் துறை மற்றும் நீதிமன் றங்கள் மிகஉறுதியான நிர்வாகக் கட்டமைப்பை உலுக்கிக் கொண்டிருந்தன.
தனது நேர்முக உதவியாளர் போன்ற தனிப்பட்ட அதிகாரிகளை நியமிப்பதற்கு அகில இந்தியப் பணி அதிகாரிகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தனக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுத்து நிதின் கட்காரி நியமித்துக்கொண்டதும் அனைவரும் அறிந்ததே. வளர்ச் சியைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கும் கூட, மிகுந்த வேகத் துடன் செயல்படும்படி கேட்டுக் கொள்ளப்படுவதை அதிகாரிகள் எதிர்க்கும் நிலை உருவாகி உள்ளது. டீசல் விலை மீதான அரசின் கட்டுப்பாட்டை நீக்கி, உலகளாவிய கச்சா எண்ணெய் விலையுடன்  இணைத்து டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ள எண்ணெய் நிறுவ னங்களுக்கு  அனுமதி அளிக்கும் அரசியல் உணர்வு மிகுந்த கொள்கையை உருவாக்கியதன் மூலம் பா.ஜ.க.  மக்களின் மாபெரும் எதிர்ப்பினைப் பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆட்டோ பொருளா தாரத்தின் மீது மிகப்பெரிய கேட்டினை உருவாக்கும் என்பதை உணர்ந்த உறக்க மயக்கத்தில் இருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கூட,  உள்நாட்டுப் பற்றாக் குறையைச் சரிசெய்து கொள்ள டீசல் விலையை மாதா மாதம் 50 காசுகள் உயர்த்தும் நடை முறையை பின்பற்றத் தொடங்கியது.

நேரடி அந்நிய முதலீட்டினை 26 விழுக்காட்டில் இருந்து 49 விழுக்காட்டிற்கு உயர்த்துவதற்கான மசோதா நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருந்தது இறுதியில் பயனளிக்கத் தொடங்கியுள்ளதுடன், மற்ற துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டு சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப் பட்டன. கடந்த 18 மாத காலமாக உலக அளவிலான கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்த நிலையில் இருந்த போதிலும், உள்நாட்டு நுகர்வு உயர்வதற்குத் தேவையான ஊக்கமோ, உந்துதலோ ஏற்படவே இல்லை. நேரடி அந்நிய முதலீட்டு வரத்துகள் மறுபடியும் ஒரு முறை மேல்நோக்கிச் சென்றன. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக நாட்டு மக்கள் துன்பத்திற்கு உள் ளாகியுள்ள நிலையில்,  சமூகத் துறை மற்றும் கிராமப்புறத் துறைகளில் நிதிஒதுக்கீடும் செலவினமும் அதிகரித்துள்ளன. இந்த நடவடிக்கைகளின் மூலம் கிராமப்புறங்களுக்கு நிதி ஒதுக்கீடும் செலவினமும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,  பருவக்காற்று மழை இந்த ஆண்டு குறித்த அளவில் பெய்து   நாட்டில் நிலவும் வறட்சியையும், பஞ்சத்தையும் போக்கும் என்ற நம்பிக்கைக்கு இடம் இருக்கிறது. அவ்வாறு நேர்ந்தால், நாட்டின் பொருளாதார நிலை வளர்ச்சியின் அடுத்த படிக்கு உயரக்கூடும்.

தொடர்ந்த வரி உயர்வினால் மக்களை அச்சுறுத்துவதும்,  ஆர்.பி.அய். ஆளுநருடன் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருப்பதும்,  வேலை வாய்ப்புகளில் வளர்ச்சி என் பதே இல்லாத நிலையும், பலமற்ற குறைந்த அளவிலான தனியார் முதலீடுகளும், மேலவையில் (மாநிலங்கள் அவை) போதிய அளவு எண்ணிக்கையிலான உறுப்பினர் களின் பலம் இல்லாத நிலையிலும் மசோதாக்களை நிறை வேற்ற காட்டப்படும் உத்வேகமும், சங்கத்தின் மதிகெட்ட சில்லறைப் பரிவாரங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலாமையும்,  நாட்டில் மக்களிடையே வளர்ந்து வரும் சகிப்புத் தன்மை இன்மையும்,  எதிர் கட்சிகளைத் தங்களின் திட்டத்திற்கு ஒத்துழைக்கச் செய்வதற்கான இயலாமையும் ஆகிய இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குடிமகனிக் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கருப்புப் பணத்தை வெளிக் கொணர்வதற்கான உருப்படியான செயல்திட்டம் எதுவும் மேற்கொள்ளப்படாதது, வரிவிலக்கு அளிக்கும் நடைமுறை தொடரக்கூடாது என்று உச்சநீதி மன்றம் தெளிவாக ஆணை பிறப்பித்த பிறகும் மேற்கொள் ளப்படும் தொடர்ந்த வரிவிலக்கு முயற்சிகள், பெரிய அளவிலான சீர்திருத்தம் எதனையும் மேற்கொள்ளுவதில் காட்டப்படும் மெத்தனம்  அல்லது ஆர்வமின்மை ஆகிய அனைத்தும் அரசுக்கு பெருமை சேர்ப்பவையாக இல்லை. பா.ஜ.க. அரசின் பெயருக்கு பெரும் அளவில் தீங்கு விளைவிப்பது, பெரும்பான்மையினரின் அதிகாரத்தை, ஆற்றலைப் பயன்படுத்தி  இந்துத்துவ செயல்திட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த முயல்வதேயாகும்.
இந்தியா என்பது பல்வேறுபட்ட பிராந்தியங்களைச் சேர்ந்த, பல்வேறுபட்ட இனங்களையும், கலாச்சாரங்களை யும் சார்ந்த மக்களைக் கொண்டதுதான் என்பதை நரேந்திர மோடி கட்டாயமாக உணரவேண்டும்.  இம்மக்களில் பெரும்பாலோர் வளர்ச்சி, வளமை என்னும் பிரமிட்டின் அடித்தளத்தில் இருப்பவர்கள் ஆவர். அங்கு ஒவ்வொரு வரின் பாதையிலும்,  ஏமாற்றம் நிறைந்த தேக்கத்தைக் கடந்து செல்லும்போது,  ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்பவர்கள்தாம். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பழைய செயல் திட்டங்களையே பா.ஜ.க. புதிய பெயர்களிட்டு ஒரு வியாபாரத்தைப் போலவே தொடர்ந்து பா.ஜ.க. நடத்தி வருகிறது. இந்தியாவுக்கான ஒரு புதிய கருத்தும், லட்சியமும், இலக்கும் இன்னமும் உருவாகாமலேயே உள்ளது வருந்தத்தக்கதே ஆகும்.

மோடியைப் பொருத்தவரை, மக்கள் அவரிடமிருந்து அதிக அளவிலான செயல்பாட்டை எதிர்பார்த்திருந்தனர்; ஆனால், மோடி செய்து முடித்திருக்கும் செயல்பாடுகள் மிகமிகக் குறைவானவையே.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’ 08-06-2016
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்





இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...