நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் சிலை வைக்கப்படும் என்று மத்திய - மாநில அரசுகள் அளித்த ஒப்புதல் என்னவாயிற்று? என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாடாளு மன்றத்தில் தலைவர்கள் சிலை நிறுவுவது குறித்து காரசார மான விவாதம் நடைபெற்றது. (20.6.2016) இந்த நேரத்தில் 13 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவு ஒன்றை நினைவூட்டுவது நமது கடமையாகும்.
மக்களவை உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினருமான மதுரையைச் சேர்ந்த தோழர் மோகன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுத்து மூலம் முன்வைத்தார்.
தேசியத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்கள் மற்றும் சிலைகள் நிறுவுவதற்கான இணைப்புக்குழு அதற்கு ஒப்புதலும் அளித்து அது தொடர்பாக தோழர் மோகன் அவர்களுக்கு கடிதமும் எழு தியது.
சிலையை எந்த இடத்தில் எப்பொழுது நிறுவுவது என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்தக்கடிதத்தில் குறிப்பிடவும்பட்டி ருந்தது. மேலும் அந்தக்குழு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது.
முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் 9 அடி உயரத்தில் தாமிரம், ஈயம், வெள்ளீயம், மற்றும் துத்தநாகம் ஆகியவை கலந்து கருப்பு, பழுப்பு நிறத்தில் சிலை செய்யப்பட உள்ளது என்றும் அச்சிலையை தமிழ்நாடு அரசு வழங்க முடிவு செய்துள்ளது என்றும் செய்திகள் வெளிவந்தன.
இது குறித்து அப்பொழுதே வரவேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டோம் (விடுதலை 22.9.2003). ஆண்டுகள் 13 ஓடிவிட்டன, மத்திய, மாநில அரசுகள் எடுத்த அந்த முடிவினை இதுவரை செயல்படுத்தாதது ஏன்?
தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்குமா? எங்கே பார்ப்போம்?
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.6.2016
.
-
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கின் பின்னணி என்ன?
- தாழ்த்தப்பட்ட சமூக மக்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!
- திராவிட இயக்கத்தின் சாதனையைப் பாரீர்!
- அரசியல் கண்ணோட்டமின்றி ஆட்சி செயல்பாடு அமையட்டும் கடந்தமுறைகையாண்ட அணுகுமுறையில் மாற்றம் ஏற்படட்டும்!
- மதச் சார்பற்ற இந்தியத் துணைக் கண்டத்தில் இந்துத்துவா கல்வித் திட்டம் அரங்கேற்றமா?
-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாடாளு மன்றத்தில் தலைவர்கள் சிலை நிறுவுவது குறித்து காரசார மான விவாதம் நடைபெற்றது. (20.6.2016) இந்த நேரத்தில் 13 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவு ஒன்றை நினைவூட்டுவது நமது கடமையாகும்.
மக்களவை உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினருமான மதுரையைச் சேர்ந்த தோழர் மோகன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுத்து மூலம் முன்வைத்தார்.
சிலையை எந்த இடத்தில் எப்பொழுது நிறுவுவது என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்தக்கடிதத்தில் குறிப்பிடவும்பட்டி ருந்தது. மேலும் அந்தக்குழு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது.
முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் 9 அடி உயரத்தில் தாமிரம், ஈயம், வெள்ளீயம், மற்றும் துத்தநாகம் ஆகியவை கலந்து கருப்பு, பழுப்பு நிறத்தில் சிலை செய்யப்பட உள்ளது என்றும் அச்சிலையை தமிழ்நாடு அரசு வழங்க முடிவு செய்துள்ளது என்றும் செய்திகள் வெளிவந்தன.
தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்குமா? எங்கே பார்ப்போம்?
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.6.2016
.
- இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கின் பின்னணி என்ன?
- தாழ்த்தப்பட்ட சமூக மக்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!
- திராவிட இயக்கத்தின் சாதனையைப் பாரீர்!
- அரசியல் கண்ணோட்டமின்றி ஆட்சி செயல்பாடு அமையட்டும் கடந்தமுறைகையாண்ட அணுகுமுறையில் மாற்றம் ஏற்படட்டும்!
- மதச் சார்பற்ற இந்தியத் துணைக் கண்டத்தில் இந்துத்துவா கல்வித் திட்டம் அரங்கேற்றமா?
- யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கின் பின்னணி என்ன?
No comments:
Post a Comment