Thursday, February 25, 2016

கிறித்தவர்களைச் சீண்டும் இந்துத்துவாவாதிகள்


மும்பை, பிப்.24_ ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த இந்துவாகச் சித்திரித்து, மராத்தி மொழியில் எழுதப் பட்ட புத்தகம், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட உள்ளது.

 இந்துத்துவ சிந்தனையாளரான வி.டி.சாவர்க்கரின் சகோதரர் கணேஷ் சாவர்க்கர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதுகுறித்து வீர சாவர்க்கர் நினைவு அறக்கட் டளையின் தலைவர் ரஞ்சித் சாவர்க்கர், மும்பையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வி.டி.சாவர்க்கரின் சகோதரர்கள் எழுதிய படைப்பு களைப் பாதுகாத்து, பிரசுரம் செய்யும் பணியை எங்கள் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த ‘விஸ்வகர்மா-பிராமண’ இனத்தைச் சேர்ந்தவராகச் சித்திரிக்கும் ‘கிறிஸ்தவ பரிச்சய்’ என்ற மராத்தி புத்தகத்தை சாவர்க் கரின் மூத்த சகோதரர் கணேஷ் சாவர்க்கர், கடந்த 1946ஆம் ஆண்டு வெளியிட்டார்.  அந்தப் புத்தகம், வி.டி.சாவர்க்கரின் நினைவு நாளான வரும் 26ஆம் தேதி மீண்டும் வெளியிடப்பட உள்ளது.

இந்தப் புத்தகத்தில், சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிறிஸ்துவை மக்கள் காப்பாற்றி, இமயமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலிகைச் செடிகளைக் கொண்டு அவருக்கு சிகிச்சையளித்துக் காப்பாற்றியதாக வும், பின்னர் காஷ்மீரில் ஏசு மறைந்ததாகவும் கூறப் படுகிறது. தற்போது அரபு நாடுகளாகவும், பாலஸ் தீனமாகவும் இருக்கும் நிலப்பரப்புகள் அந்தக் காலத்தில் இந்துக்களின் பகுதிகளாக இருந்தன. மேலும், யோகா பயில்வதற்காக ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்துள்ளார்.

ஏசு கிறிஸ்துவின் உண்மையான பெயர் கேசவ் கிருஷ்ணா என்றும், தமிழ் அவரது தாய் மொழி என்றும், அவர் கருப்பாக இருந்ததாகவும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்றார் ரஞ்சித் சாவர்க்கர்.

இதுதொடர்பாக, மும்பையைச் சேர்ந்த மூத்த கிறிஸ் தவப் போதகர் வார்னர் டிசவுசா கூறுகையில், “இத்தகைய புத்தகங்களால், கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் தளர்ச்சி அடையாது’’ என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...