பாசிசப் பாம்பின் பயங்கரம்
மாடு திருடியதாகப் புரளி தொடர்கிறது! தொடர்கிறது!!
முசுலீம் தலைமை ஆசிரியர் படுகொலை!
மாடு திருடியதாகப் புரளி தொடர்கிறது! தொடர்கிறது!!
முசுலீம் தலைமை ஆசிரியர் படுகொலை!
புதுடில்லி, நவ.7_ அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் இதழ் இந்தியா வின் மதசகிப்புத்தன்மை யற்ற நிலைகளால் ஏற் பட்டுவரும் இந்துத்துவாக் கும்பலின் வன்முறை வெறியாட்டங்கள், கொலைகள் குறித்து வெளி யிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
அரசியல் ரீதியாக தேசிய அளவில் விவா தத்தை ஏற்படுத்திவருவது நாட்டில் அதிகரித்து வரும் மதசகிப்புத்தன்மை யற்ற நிலைதான்.
2.11.2015 அன்று பசு மாட்டைத் திருடியதாக ஏற்பட்ட புரளியை அடுத்து முசுலீம் முதியவரான தலைமையாசிரியர் இந்துத்துவக் கும்பலால் சரமாரியாகத் தாக்கப் பட்டு கொல்லப்பட்டார். பசு மாடு இந்து மதத்தில் புனிதமாகக்கருதப்படுவதுதான் காரணமாக கூறப்படுகிறது.
கடந்த ஆறு வாரங் களில் மாட்டைக் கொல் வது, திருடுவது அல்லது கடத்துவது என்கிற பெயரால் இந்துக்கள் முசுலீம்களைக் கொன்று வருவதில் இச்சம்பவம் நான்காவதாக நடந்துள்ளது.
கடந்த ஆறு வாரங் களில் மாட்டைக் கொல் வது, திருடுவது அல்லது கடத்துவது என்கிற பெயரால் இந்துக்கள் முசுலீம்களைக் கொன்று வருவதில் இச்சம்பவம் நான்காவதாக நடந்துள்ளது.
வடகிழக்கு இந்தியா வில் மணிப்பூர் மாநிலத் தில் மொகம்மத் ஹஸ்மத் அலி (வயது 55) எனும் முசுலீம் முதியவர் உச்செ கான் மொய்பா தோங்காங் என்ற கிராமத்தில் இரத்த வெளளத்தில் பிணமாகக் கிடந்தார். மொகம்மத் ஹஸ்மத் அலி (வயது 55) கெய்ராவ் மாக்டிங் எனும் கிராமத்தின் தலைவர் ஆவார். அவருக்கு மண மாகி 3 குழந்தைகள் உள் ளனர்.
காவல்துறையைச் சேர்ந்த மூத்த காவல் அதிகாரி நபா கண்டா கூறும்போது, இப்போது நடந்துகொண்டிருப்பது முற்றிலும் தவறானது. மக்களே தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக் கொள்கிறார்கள். கும்பலின் கட்டுப்பாட்டில் நீதி முடங்கி உள்ளது. அதனா லேயே பல பிரச்சினை களை நாங்கள் சந்தித்து வருகிறோம். எங்களால் இயன்ற அளவில் சரி யானவற்றைச் செய்திட முயன்றுவருகின்றோம் என்று கூறினார்.
கொலைகள்! கொலைகள்!!
மாடுகளை வெட்டக் கூடாது என்றும், மாட்டி றைச்சியை வைத்திருக்கவே கூடாதென்றும் காத்திட அரசியல் ரீதியி லான கொள்கைகள் மற் றும சட்டங்களுக்கி டையே உள்ள முரண் பாடுகளின் பின்னணியில் அவற்றுக்கு எதிராக கொலைகள் அண்மையில் நடை பெற்று வந்துள்ளன.
பிரதமராக உள்ள மோடி இந்துத்துவ பாஜக அரசிடம் நாடுமுழுவதும் தீவிரமாக மாட்டுக்கறிக் குத் தடைகோரியவண் ணம் உள்ளது.
டில்லி காவல்துறை மோடியின் மத்தியஅரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. டில்லியில் உள்ள கேரள இல்லத்தில் நுழைந்து பசு மாட்டுக்கறி உணவு அளிக்கப்படு கிறதா என்று வேட்டை நடத்தியது. கடைசியில் எருமைக்கறியே உணவாக அளிக்கப்பட்டது தெரிய வந்தது. 4.11.2015 அன்று டில்லியில் புனிதப்பசுவை இழிவுபடுத்ததுவதாகக்கூறி எதிர்க்கட்சியினரைத் தாக்கி பாஜகவினர் பிரச் சாரத்தில் ஈடுபட்டனர். பிசாராவில் 28.9.2015 அன்று முகம்மத் அக்லக் எனும் முதியவர் மாட் டிறைச்சியை சாப்பிட்ட தாக புரளி கிளப்பிவிட்டு, இந்து வன்முறைக்கும்ப லால் அடித்தே கொல்லப் பட்டார்.
அடுத்த சில வாரங்களில் இந்து வன் முறைக்கும்பல் முசுலீம் இளைஞர் லாரியை ஓட்டிச் சென்றபோது மாட்டுக்கறியை லாரியில் எடுத்துச் செல்வதாக புரளி ஏற்படுத்தி, லாரியை தீவைத்துக்கொளுத்திய தில், முசுலீம் இளைஞர் உடல்தீயில் கருகி உயிரி ழந்தார். 14.10.2015 அன்று வட இந்தியாவில் இமாச் சலப்பிரதேசத்தில் முசுலீம் ஒருவர் மாடுகளைக் கடத் திச் செல்வதாகக்கூறி இந்து வன்முறைக் கும்பல் தாக்கி கொன்றுள்ளது.
இதுபோன்ற மற்ற அண்மையச் சம்பவங்கள், இந்துத்துவாவாதிகளால் வெடிக்கின்ற வன்முறை கள், வெறிச்செயல்களால் கலாச்சாரம் மற்றும் அர சியல் ரீதியிலான பெரும் பின்னடைவு நாடுமுழுவ தும் ஏற்பட்டுவருகிறது. இதனைத் தொடர்ந்து, ஏராளமான எழுத்தாளர் கள், முன்னணி இலக்கிய வாதிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட இலக்கியத் துக்கான விருதுகளைத் திருப்பி அளித்தனர். கல்வியாளர்கள், நூற்றுக் கணக்கிலான அறிவியலா ளர்கள், திரைப்பட நடிகர் கள்,
இயக்குநர்கள் உள் ளிட்ட பலரும் நாட்டில் ஏற்பட்டுள்ள சகிப்புத் தன்மையற்ற நிலையை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். 3.11.2015 அன்று காங்கிரசு கட்சி யின் தலைவர் சோனியா காந்தி மற்றும் நீண்ட காலமாக மோடியை அரசி யல் ரீதியாக எதிர்த்துவருப வர்கள் இணைந்து நாட் டையே அச்சத்துக்குள் ளாக்கிவரும் சூழல்கள், சகிப்புத்தன்மையற்ற நிலை மற்றும் அச்சுறுத் தல்கள் ஆகியவற்றைக் கண்டித்து டில்லியில் ஊர்வலத்தை நடத்தியுள் ளார்கள்.
இந்துத்துவாவாதிகளின் வெறியாட்டம்
இந்துத்வாவாதிகளின் வெறியாட்டங்களைத் தொடர்ந்து, மோடி உரிய பொறுப்புடன் பதில் அளிக்க முடியாமல் திணறிவருகிறார். கவன மாகப் பேசும்படி எச்சரித் தும் உள்ளார். அதே நேரத்தில் பரவிவரும் எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் உருவாகிவரும் முரண்பாடுகள் ஆகிய வற்றை கேலி செய்யுமள வில் இருந்துவருகிறார்கள். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தம்முடைய முக நூலில், சகிப்புத்தன்மை யற்ற கொள்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள் ளவர் மோடி. காங்கிரசு, இடதுசாரி சிந்தனையா ளர்கள் மற்றும் செயற் பாட் டாளர்கள் இந்நிலையை உருவாக்கி உள்ளார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் குறிப் பிடும்போது, இந்த நிலை இருவிதமாக உள்ளது. முதலாவதாக எவ்வித சீர் திருத்தங்களையும் செய்து விடாமல், மோடி அர சுக்கு நற்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்று நாடாளுமன்றத்தை முடக் குவது, இரண்டாவதாக, கட்டமைக்கப்பட்ட, திட்டமிட்ட பிரச்சாரங் களை உருவாக்கி, இந்தியா முழுவதும் சமூகக் குழப் பம் ஏற்படுத்துவது என் றும் குறிப்பிட்டுள்ளார்.
அலியின் இறப்பில் புலனாய்வு அதிகாரி களுக்கு இன்னமும் எது வும் பிடிபடவில்லை. ஆனால், காவல்துறையைச் சேர்ந்த காண்டா கூறு கையில், 2.11.2015 அன்று காலை பிரஜேந்திரா என் பவர் தன்னுடைய வீட் டுக்கு வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட் டுள்ளார். என்ன வென்று வெளியே சென்று பார்த்த போது, முதியவர் ஒருவர் உடல் நடுக்கத்துடன் நடுங்கிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்த பிரஜேந் திரா, அம்முதியவர் தன் னுடைய வீட்டிலிருந்து பசுவின் கன்றை திருடுவ தற்காக வந்தவர் என் றெண்ணி, சத்தம் போட்டு கூட்டத்தைக் கூட்டி உள்ளார்.
என்ன ஏது என்று அம்முதியவரிடம் எவ்வித விசாரணையும் செய்யாமலேயே அந்தக் கூட்டம் சரமாரியாகப் பந்தாடி தாக்கியதால், அலி அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்று காண்டா குறிப்பிட்டுள் ளார். பிரஜேந்திரா கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் அக்கொலையில் தம்முடைய பங்கை ஒப் புக்கொண்டார். மேலும், முதியவர் அலியைத் தாக் கிக்கொன்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் குறித்த விவரங்களையும் தெரிவித் துள்ளார்.
காவல் நிலையம் முற்றுகை
கெய்ராவ் மாக்டிங் கிராமத்தில் அலியின் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். காவல் நிலையத்தில் ஆவேச மடைந்த அக்கிராமத்தி னர் முற்றுகையிட்டு எதிர்ப்பபைத் தெரிவித் துள்ளனர். மேலும் இம் பால் நகரை இணைக்கும் முக்கிய சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிமக்கள் குழுவை அமைத்து சுதந்திரமான புலனாய்வு விசாரணை நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி யுள்ளனர்.
குடிமக்கள் குழுவின் தலைவரான மொகம்மத் ராசா உத் தின் கூறும் போது, மதிப்புக்குரிய தலைமை ஆசிரியராக இருந்துள்ளவர், அவர் குடும்பத்தில் பொறியாளர் களும், மருத்துவர்களும் இருக்கிறார்கள். அவர் எப்படி பசுவின் கன்றை திருட வந்தார் என்று கூற லாம்? அவர் கிராமத்தில் உள்ள எவரிடமும் எவ் விதத்திலும் சண்டை போடாதவர். பெருந் தன்மை மிக்கவரான அலிமீது, மதரசாவுக்கு வரும் குழந்தைகள் மிகுந்த அன்புகொண்டிருந்தனர் என்றார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- தொழில் நிறுவனங்களின் நலன்கள்- மதவாதக் கொள்கைகள் இரண்டும் சேர்ந்ததுதான் புதிய கல்விக் கொள்கை
- பெரியாரையும், லீ குவான் இயூ-வையும் படியுங்கள்! இளையர்களுக்கு சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் அறிவுரை
- 62 சதவிகித மக்கள் மோடி அரசின்மீது கடும் அதிருப்தி! அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் ஏடு படப்பிடிப்பு
- கோயிலில் கோவிந்தா!
- மதுவிலக்குப் பற்றிப் பேசும் மடாதிபதியே! தீண்டாமை குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
No comments:
Post a Comment