- ஜோயா ஹாசன்
இந்த கட்டுரையை எழுதிக் கொண் டிருக்கும்போதும் கூட, சகிப்புத் தன்மை அற்ற ஒரு சூழல் நாட்டில் வளர்ந்து வருவதற்கு எதிராக, சாகித்திய அகாதமி அளித்த விருதுகளை அரசிடம் திருப்பித் தருவதற்காக 40 க்கும் மேற்பட்ட எழுத் தாளர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் பற்றிய பிரச்சாரம் இன்ன மும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பதற்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தில் மேலும் மேலும் பல கலைஞர்கள், ஓவியர்கள், படத்தயாரிப்பாளர்கள்,
அறிவியலா ளர்கள், வரலாற்றாசிரியர்கள் பெருமள வில் கலந்து கொண்டனர். மக்களின் அரசமைப்புச் சட்டப்படியான உரிமை களைப் பறிக்கும் அல்லது மீறும் நிகழ் வுகள் தொடர்ந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை எதிர்த்துதான் இந்த அக்டோபர் போராட்டங்கள் வெடித்தன. இதற்கான முக்கியமான ஒரே ஒரு காரணத்தைக் குறிப்பிட்டுக் கூறுவது எளிதானதல்ல என்ற போதிலும், டாட்ரி வெட்டிக் கொல்லப்பட்டது பலருக்கும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றே கூறலாம்.
சகிப்புத்தன்மையற்ற ஒரு புதிய கலாச்சாரம் உருவாகி வருவதையும், நாள்தோறும் வளர்ந்து வரும், மக்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் வெறுப்பு மற்றும் பகை உணர்வு என்ற பெருவெள்ளத்தைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதை யும் பற்றிய பல கேள்விகளை, தாத்ரியில் அக்லக் வெட்டிக் கொல்லப்பட்டதும், புகழ் பெற்றிருந்த பகுத்தறிவாளர்,
எழுத்தாளர் கல்புர்கியும், அதற்கு முன்பு பகுத்தறிவா ளர்கள் தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரேயும் கொல்லப்பட்டதும், கவலை அளிக்கும் பல கேள்விகளை எழுப்பு கிறது. மதக் களங்கங்கள் அல்லது மதக் கோட்பாடுகள், கருத்துகள் பற்றி எந்த ஒரு அறிஞராவது, கலைஞராவது கேள்வி கேட்டாலோ, அவர்களது உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை ஆகியவை வன்முறை அச்சுறுத்தல் களுக்கு உள்ளாகின்றன.
இத்தகைய வெறுப்புணர்வு, பகை யுணர்வு அரசியலைச் சுற்றி அன்றாடம் நடைபெற்று வரும் வன்முறை நிகழ்வு களை ஆட்சியாளர்கள் கண்டு கொள் வதேயில்லை என்பதே பிரச்சினையின் ஒரு பகுதியாகும். அரசு மிகுந்த மெத் தனத்தைக் காட்டி வருகிறது. பிரதமரை விட்டுத் தள்ளுங்கள், இவற்றினைக் கண்டித்து, அவற்றிற்கு எதிராக ஓர் அமைச்சர் கூட பேசவில்லை. இந்த நிகழ்ச்சி வருந்தத்தக்கது என்று காலம் கடந்து பிரதமர் கூறிய போதிலும், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பது மாநிலத்தின் கடமை என்பதால், இதில் மத்திய அரசு செய்வதற்கு ஏதுமில்லை என்று கூறியது பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
தீவிர மதக் கருத்து கொண்டவர்கள், துணிவு பெற்றுவிட்டனர்
ஆனால், கல்புர்கியும், அக்லக்கும் கொல்லப்பட்டது சாதாரணமான குற் றங்கள் அல்ல. இதிலுள்ள பிரச்சினையே, பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளதா அல்லது அந்த அரசுக்கு உள்ளதா என் பதல்ல; மதத் தீவிரக் கருத்து கொண்ட வர்களைத் துணிவு மிகுந்தவர்களாக ஆக்கும் அளவுக்கு நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது என்பதுதான் பிரச்சினையே.
அச்சம் மற்றும் மதக் கசப்புணர்வை உருவாக்குவதை நோக்க மாகக் கொண்டு இத்தகைய குற்றங்களில் சங் பரிவாரங்களும், கோட்பாட்டாளர் களும், தொண்டர்களும் நேரடியாக ஈடு பட்டு வெற்றி பெற்றுள்ளனர் என்பதை இந்தத் தருணத்தில் மறந்து விடக்கூடாது. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கூட தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக் கப்படலாம் என்ற அச்சமே இன்றி, இத்தகைய வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு உதவி செய்து ஊக்குவித்துள்ளனர்.
வளர்ந்து வரும் அமைதியின்மை, பகுத் தறிவு மீது மேற்கொள்ளப்படும் கோட் பாட்டுத் தாக்குதல் பற்றிய நிகழ்வுகளையோ , இவற்றுக்கு எதிராக இது வரை நடந்த போராட்டங்களையோ பட்டியலிடும் நோக்கம் நமக்கில்லை. நமது கவனமெல்லாம் இவற்றை விட அதிக ஆர்வமளிக்கும் மற் றொரு பிரச்சினையின் மீதுதான் குவிந்திருக் கிறது. இந்தப் போராட்டங்களுக்கு என்ன தான் பதில் கிடைக்கிறது என்பதே அந்தப் பிரச்சினை. பலரும், பல விதங்களில் தங் களது எதிரொலிப்பைக் காட்டியுள்ளனர்.
மோடி பிரதமராவதற்கு வெகுகாலம் முன் பாகவே அவரை எதிர்த்து வந்த காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட போராட்டம்தான் இது என்று, தகவல் ஒலிபரப்புத் துறையை தன் வசம் வைத்திருக்கும் நமது நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். சங்கம் மற்றும் இந்து மதத்தைப் பற்றி நீண்ட காலமாகவே சகிப்புத்தன்மை அற்றவர்களாக இந்த அறி ஞர்கள் இருந்து வருகின்றனர் என்று ராஷ் டிரிய சுயம் சேவக் சங்கம் தாக்குதல் தொடுத்தது.
அரசமைப்புச் சட்டப்படியான வாக்குறுதிகள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை இலக்காகக் கொண்டு நடத்த தூண்டிவிடப் பட்ட ஒரு பிரச்சாரத்துக்கு ஆதரவு அளிப் பதன் மூலம் இந்த அறிஞர்கள் இரட்டை வேடம் போடுவதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் கீழ் மாபெரும் ஊழல் புகார்களினால் நாடே அதிர்ந்திருந்தபோதும், நாட்டில் நெருக்கடி நிலை நடைமுறைப்படுத் தப்பட்ட போதும், 1984 இல் டில்லியில் நடந்த கலவரங்களின்போதும்,
அயோத்தியா கருத்து வேறுபாடுகள் தோன்றியபோதும் இவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தனர் என்று கூறி, போராட்டக்காரர்களின் கடந்த கால வரலாறு பற்றிய ஆதாரங்களை அவர்கள் கேட்டனர். இப்போராட்டங்கள் நேரடியான போராட்டங்கள் என்ற போதிலும் இது வேறு வகையான அரசியல் என்று இப்போராட்டங்களை அருண்ஜெட்லி அழைத்தார். மதக் கலவரம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் பற்றி அரசு செயலற்று இருப் பதற்கு எதிராக அறிஞர்கள், கலைஞர்கள்,
எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடும்போது, அவர்கள் ஓர் அரசியல் அறிக்கை வெளியிடுவதாகவே அது ஆகும். அவ்வாறு செய்யும்போது எந்தக் கட்சியின் சார்பாகவும் அவர்கள் செயல்பட வில்லை; வாழ்வதற்கு, கருத்து வெளிப்பாட்டுக்கு, மாறுபட்டு சிந்திப்பதற்காக வாக்குறுதி அளிக் கப்பட்டுள்ள அரசமைப்புச் சட்டப்படியான உரிமைகளுக்காக அவர்கள் பேசுகின்றனர். அரசமைப்புச் சட்டப்படி அளிக்கப்பட்டுள்ள இத்தகைய சுதந்திரங்களுக்கு எதிரானது அவர்களின் பெரும்பான்மையினத் தத்து வம், மதசகிப்புத் தன்மையின்மை, சுதந்திர மான கருத்து வெளிப்பாடு பற்றி சற்றும் மரியாதை இல்லாமல் இருப்பது என்ற மய்ய நம்பிக்கைகள் எல்லாம்.
இது போன்ற நிகழ்வுகள் இதற்கு முன் னரும் கூட நடந்திருக்கின்றன. அப்போதெல் லாம் ஏன் இவர்கள் போராடவில்லை என்று கேட்கப்படுகிறது. பன்முகத்தன்மை, பேச்சு சுதந்திரம், கருத்து மாறுபடுதல் ஆகியவற் றின்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது இது முதல் முறையல்ல என்பது உண்மை தான். காங்கிரஸ் ஆட்சியின்போது இந்த சுதந்திரங்களின் மீதெல்லாம் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துதான் வந்திருக்கின்றன. என்றாலும் அவற்றிற்கு எதிரான போராட் டங்களுக்கும் அப்போதும் குறைவில்லை.
அரசியல் ஆதரவு திரட்டல், எதிர்ப்பு இயக் கங்கள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்து வந்தவள் என்பதால், தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் தேர்ந்தெடுத்து வெளிப்படுத்தப்படும் எதிர்ப்புகள் என்றும், கடந்த காலங்களில் இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்களே நடக்கவில்லை என்றும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் பேசு வதைக் கேட்பதும், எழுதுவதைப் படிப்பதும் எனக்கு வியப்பளிப்பதாக உள்ளது. குறைந்த நினைவாற்றல் கொண்டவர்களுக்கும், சம கால இந்திய வரலாறு பற்றி அதிகமாக அறிந்திராதவர்களுக்கும், நெருக்கடி நிலை காலந்தொட்டு, 2012 டிசம்பர் வரையிலான காலம் வரை, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை அதிர வைத்த பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடை பெற்றது போன்ற போராட்டங்கள், பேரணிகள் எண்ணற்றவையாகும் என்று நினைவு படுத்துவது முக்கியமானதாகும்.
கடந்த முப்பதாண்டு காலமாக, தனிப் பட்ட முறையிலும், பலர் சேர்ந்து ஒன்றாகவும், வாக்கு வங்கி நோக்கம் ஒன்றையே கருத்தில் கொண்டு அயோத்தியா -ஷாபானு வழக்கில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட முரண்பட்ட நிலைகளை எதிர்த்து பல எதிர்ப்பு இயக் கங்கள் பல போராட்டங்களை நடத்தி வந் துள்ளன; ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பை மாற்ற முயன்றது, சல்மான் ருஷ்டியின் சாத்தான் பாடல்கள் நூலுக்கு தடை விதித்தது ஆகியவற்றை இதற்கு சில எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி,
சகிப்புத் தன்மை இன்மைக்கும், அநீதிக்கும் எதிராக தங்களின் குரலை உயர்த்திக் கண்டித்த இயக்கங்களின் போராட்டங்களில், அவ்வப் போது அறிஞர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வந்திருக்கின்றனர். எழுத்தாளர் களுக்கு ஆதரவாக தங்களுக்கு அரசால் அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பித் தரும் உறுதிமொழியில் கையொப்பமிட்ட 300 கலைஞர்களில் பலரும் கடந்த காலத்தில் சஹமத் என்ற ஒரு கலைஞர்கள், அறிஞர் களின் அமைப்பு நடத்திய பல போராட்டங் களுக்கும் ஆதரவு தந்துள்ளனர். மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், கருத்து வெளிப்பாட்டுரிமை மற்றும் இதர ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் ஆதர வாகத் தொடர்ந்து பேசி பல போராட்டங் களை நடத்தியது இந்த அமைப்பு.
இவர்களில் சில தனிப்பட்டவர்கள் இதற்கு முன்பு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போரா டாதவர்கள் என்பதாலேயே, தற்போது எதிர்ப்பு தெரிவித்து போராடுவதற்கான உரிமை இப்போது அவர்களுக்கு இல்லாமல் போய்விடாது. அரசு விரும்பும் ஒரு காலத் தையும், பிரச்சினையையும் போராட்டக் காரர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவது போலவே இந்த வாதம் இருக்கிறது. இந்தப் போராட்டங் களுக்கும்; காங்கிரஸ் கட்சிக்கோ வேறு எந்த கட்சிக்மோ தொடர்பேயில்லை. காங்கிரஸ் கட்சிதான் இப்போராட்டங்களைத் தூண்டி விட்டது என்று பா.ஜ.க. தலைவர்கள் திரும்பத் திரும்பக் கூறி வருவது, காங்கிரஸ் கட்சிக்கு தேவையற்ற மரியாதையை சேர்ப்பதுடன், இதுவரை அவர்களிடம் இல்லாமல் இருந்த சமூக ஆதரவைத் திரட் டும் ஆற்றல் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளதென கருத்தளிப்பதுமாகும்.
மேலும், தனிப்பட்டவர்களைத் தேர்ந் தெடுத்துக் கொண்டு அவர்களை சிறுமைப் படுத்துவதன் மூலம் போராட்டத்தை மதிப் பிழக்கச் செய்து, அரசின் மீது கூறப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல் தவிர்ப் பது பா.ஜ.க.வைப் போன்ற ஒரு பழம்பெரும் கட்சிக்கு அழகானதல்ல. போராட்டத்தின் நோக்கத்திலிருந்து, போராட்டக் காரர்களின் அரசியல் நோக்கங்களுக்கு மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயலாகும் அது. ஒரு நிலையில் அது தனிப்பட்டவர்களின் போராட்டமாகவும், மற்றொரு நிலையில், பொதுவாக நிலவி வரும் சகிப்புத் தன்மை யின்மையைப் பற்றிய ஓர் ஒட்டுமொத்த நாகரிக சமூகத்தின் போராட்டமாவும் அது இருந்தது.
ஏமாற்றம் அடைந்த உயர்நிலை மக்களின் ஒரு கலவரம் என்று இந் நிகழ்ச்சியை அரசால் சாதாரணமாக ஒதுக்கித் தள்ளி விடவும் முடியாது. ஹிந்து ஆங்கில நாளிதழின் அக்டோபர் 30 ஆம் நாளிட்ட தலையங்கத்தில் தெரி வித்துள்ளபடி, போராட்டக்காரர்களின் மீது தனிப்பட்ட குற்றங்களை கூறுவதன் மூலம், மத்திய அமைச்சர்களாலும், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்களாலும், நாகரிக சமூகம் தொடங்கியுள்ள ஒரு பேச்சு வார்த்தைக்கு சமாதானம் அளிக் காமல் தப்பித்துக் கொள்ள முடியாது. நாகரிக சமூக மக்கள் பேசிக்கொண்டும், கேட்டுக் கொண்டும் உள்ள கேள்விகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பா.ஜ.கட்சியின் அரசியல் செயல்திட்டங்களுடன் நெருங் கிய தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப் புகளின் பேச்சு மற்றும் செயல்பாடு களுக்கு சவால் விடும் தன்மை கொண் டவையாகும்.
உருவாகி வரும் இயக்கம்
அக்டோபர் போராட்டங்கள் எதிர் காலத்தில் ஓர் இயக்கத்தின் வடிவத்தை மேற்கொள்ளவும் செய்யலாம். அறி ஞர்கள், வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர் கள், கலைஞர்கள் 2015 நவம்பர் ஒன்றாம் தேதி அன்று புதுடில்லியில் கூடி, பகுத் தறிவு, ஜனநாயகம் மற்றும் கலப்பு கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, அவர்கள் ஏற்பாடு செய்து நடத்திய நிகழ்ச்சியான பிராதிரோத் (எதிர்த்துப் போராடுதல்) பற்றி பொது மக்கள் தெரிவித்த கருத்தில் அத்தகைய இயக்கம் தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதெனத் தோன்றியது. இந்தியாவில் பன்முகத்தன்மைக்கும் மற்றும் தாராள மான எண்ணங்களுக்கும் இடமளிக்கப் படுவதைப் பாதுகாப்பதன் தேவையை ஆதரித்துப் பேசி வரும் நாகரிக சமூகத் தின் பல்வேறுபட்ட பிரிவினர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மொத்தத்தில், பெரிய போராட்டங்கள் உருவாகி வரும் நிலையில், அன்றாடம் அவர்களின் எதிர்ப்புக் குரல் வலுவ டைந்து கொண்டே வருகிறது. இவை குறிப்பிடும் பொதுமக்களின் மனநிறை வின்மையை அங்கீகரிக்கும் ஒரு பொறுப்பு அரசுக்கு உள்ளது. நீண்ட தொரு காலத்தில் அது வெற்றி பெறு கிறதா அல்லது தோல்வி அடைகிறதா என்பதல்ல இப்போதைக்கு உடனடியாக எதிர்கொள்ளவேண்டியுள்ள பிரச்சினை. வலதுசாரி கலாச்சார அரசியலுக்கு எதிராக தற்போது நிலவும் அசவுகரியத் தைப் பற்றியும், அதனால் மேற்கொள்ளப் படும் வன்முறைக் கலாச்சாரம் பற்றியும் பேசும் அரசைப் பற்றி ஓர் அகன்ற பிரிவினரால் பகிர்ந்து செய்யப்பட்ட விமர்சனங்களை பிரதிபலிப்பவையே நாகரிக சமூகத்தால் தொகுக்கப்பட்டு அரசிடம் கேட்கப்படும் இக் கேள்விக் கணைகள். பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து மாறுபாடு மீதான தாக்குதல்கள், இந்தியா மீது ஒரு மதவாத செயல்திட் டத்தைத் திணிக்கும் ஒரு திட்டமிடப் பட்ட, ஒருங்கிணைந்த இயக்கத்தின் ஒரு பகுதியே என்பதைப் பற்றி அறிந்து ஏற்றுக்கொள்ளும் அங்கீகார உணர்வு அதிகரித்து வருகிறது.
இப்போது கேள் விக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினை பேச்சு சுதந்திரம் மட்டுமல்ல; பன்முகத் தன்மை, குடியுரிமை மற்றும் உரிமைகள் பற்றிய பிரச்சினைகளும்தான். இவை அனைத்தும், தனது வாத, சகிப்புத் தன்மை பாரம்பரியத்தை பெரிதும் மதிக் கும் இந்தியக் குடியரசின் அடிப்படைக் கொள்கைகளும், கருத்துகளுமே ஆகும். விரும்பத்தகாத கோட்பாடுகள் மற்றும் அரசியல் பற்றிய அய்யமற்ற, உறுதியான விமர்சனத்தை வெளிப் படுத்தத் தூண்டும் வளர்ந்து வரும் அறிவுப் பூர்வமான எதிர்ப்பை ஒரு தார்மீக சக்தியாக ஒன்று திரட்டி மாற்றுவ தற்கான கேள்விகளைக் கேட்பதற்கும், மீண்டும் அதிகாரத்தை எடுத்துக் கொள் வதற்குமான நேரமிதுவே ஆகும்.
நன்றி: தி ஹிந்து 04-11-2015
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment