பாஜக அரசு நவம்பர் 26-ஆம் தேதியை அரசியல்சாசன நாளாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. அனைத்து அமைச்சரகமும் இந்த விழாவைக் கொண்டாடவேண்டும் என்றும் இந்த நாளில் அம்பேத்கர் குறித்த கட்டுரைகள் மற்றும் சொற் பொழிவுகள் அனைத்துஅமைச்சரவை ஊழியர்களின் பங்களிப்போடு நடை பெறவேண்டும் என்று திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சியாம் பிரசாத் முகர்ஜி ஜெயந்திக்கு அடுத்து முக்கியத்துவம் கொடுக்கும் விழாவாக இந்த விழாவைப் பார்க் கிறார்கள். இதில் மிகவும் வியக்கத் தக்கது என்னவென்றால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஏன் திடீரென அம்பேத்கர் மீது இந்த அளவு பாசத்தைப் பொழிகிறார்கள் என்று நினைக்கத் தோன்றும்.
முக்கியமாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் சில இந்து அமைப்புகள் தலித் அமைப் புகளின் தலைவர்களை அழைத்துக் கொண்டு டிசம்பர் 6 ஆம் தேதி புனித நதிகளில் அம்பேத்கரின் திதியை கொண்டாடும் திட்டத்தில் இறங்கியுள் ளார்கள். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் இந்தச் செயல்மூலம் அம்பேத்கரின் இந்துமத எதிர்ப்பைக் குழிதோண்டிப் புதைத்து அவர் இந்துக்களுக்கு என்றும் ஆதரவாக இருந்தார் என்னும் மனநிலையை மக்களிடையே உருவாக்க தந்திரமான காரியத்தைச் செய்து வருகிறார்கள்.
பாஜகவினர் ஏற்கனவே காந்தி பிறந்த தினத்தின் மாண்பைச் சீர் குலைக்கும் வகையில் அவரது நினைவுதினத்தில் தூய்மை இந்தியா என்னும் திட்டத்தைத் துவக்கி அவரையும் குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்று நினைத்தனர். ஆனால் மக்கள் மனதில் இருந்து காந்தியையும் அவரது புகழையும் அகற்ற முடியவில்லை. இந்து வெறியனான நாதுராம் கோட்சே காந்தியைச் சுட்டுக்கொன்ற போது தரையில் விழுந்த காந்தியின் மூக்குக் கண்ணாடியை எடுத்து அதை தூய்மை இந்தியா திட்டத்தின் அடை யாளமாக வைத்துக் கொண்டனர்.
இதே போல் நேருவின் பிறந்த நாளை மாணவர் குழந்தைகள் தின மாக கொண்டாடவேண்டிய அரசு மோடி தினமாக மாற்றிவிட்டது, இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மோடியின் பேச்சுக்கள் பெரிய திரையில் ஒளிபரப்பானது, இதன் மூலம் நேருவின் முகத்தை மறைத்து தனது பெயரை முன்னிறுத் தும் தந்திரமும் மோடி திறம்படச் செய்தார். அரசின் அனைத்து விளம்பரங் களில் இருந்தும் 14 நவம்பர் அன்று நேரு படம் அகற்றப்பட்டுவிட்டது, காந்தி நேருவிற்கே இந்த நிலை என்றால் முன்னாள் பிரதமர்களாக இருந்து தீவிரவாதத்திற்காக உயிரைப் பலி கொடுத்த இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி பற்றிய கேள்வியே இங்கு எழக் கூடாது.
எந்த ஒரு நாட்டிலும் அந்த நாட்டின் தேசத் தலைவர்கள் மிகவும் முக்கியமான வர்கள் ஆவர், அந்த நாட்டை நினைவில் கொள்ளும் போதே அந்த நாட்டின் தேசத் தலைவர்கள் மக்களின் மனதில் தோன்று வார்கள். இந்தியா போன்ற நாட்டில் காந்தி, நேரு போன்ற தலைவர்கள் மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தவர்கள்.
இவர் களை மக்கள் மனதில் இருந்து அவ்வளவு எளிதில் நீக்கிவிடமுடியாது. ஆனால் பாஜக அரசு எப்படியும் இவர்களை மக்கள் மனதில் இருந்து நீக்கவேண்டும் என்று பல சூழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது. இப்படி மக்களின் நினைவில் வாழும் தலைவர்களை திட்டமிட்டு அவமானப் படுத்தி வரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்து மதத்தில் பிறந்ததே அவமானம் என்று கூறி பவுத்த மதம் மாறிய அம்பேத்கரின் பெருமையை கொண்டாடுவதை சந்தேகக் கண் கொண்டே பார்க்க வேண்டும்.
அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட பிறகு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கூறிய கருத்து என்ன தெரியுமா? மனுதர்மத்தை விட அரசியல் சாசனம் பெரிதல்ல என்று கூறிய அமைப்பும் அதன் அரசியல் பிரிவான பாஜகவும் இன்று அரசியல்சாசன நாள் கொண்டாடு கின்றன. இதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மூவர்ணக் கொடியை தீட்டுபட்ட கொடி என்றும், மூவர்ணம் நாட்டிற்கு அபச குணம் நிறைந்த கொடியாகும், என்றும் கூறியது அவ்வளவு எளிதில் மறந்துவிட இயலாது. இந்திய அரசுச் சின்னமான அசோகச் சின்னத்தையும், கொடியின் நடுவில் இருக் கும் அசோகச் சக்கரத்தையும் இந்து மதத்தை இழிவு படுத்திய பவுத்த மதச் சின்னம் அதை அகற்றவேண்டும் என்று லால்கிருஷ்ண அத்வானி கூட கூறினாரே!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவின் ஆன்மாவிற்கு ஒப்பாக பார்க்கப்படுகிறது. அம்பேத்கர் அரசியல் சாசனத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது பேசியதாவது, ஒரு பகுதிமக்கள் தங்களின் பிரதிநிதிகளாக தங்களுள் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டுமே, ஒழிய புத்திஜீவி என்று கூறிக்கொள்பவர்களை அல்ல என்று கூறியுள்ளார்.
அம்பேத்கர் இதன் மூலம் என்ன கூறவருகிறார் என்றால் மெத்தப் படித்த வர்கள் மட்டும் அரசியலில் இருக்கலாம் என்ற நிலை மிகவும் ஆபத்தானது, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள் ளும் மக்கள் பிரதிநிதிகள் தான் அரசிய லுக்குத்தேவை என்றும் இவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் இதன் மூலம் அரசியலில் சாதாரண மக்களின் அதி காரத்தை உறுதிப்படுத்தினார். இதன் மூலம் மக்களுக்கு அரசியல் சாசனத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை எழுந்தது. சுதந்திர இந்தியாவில் காமராஜர் போன்ற தலைசிறந்த தலை வர்களை மக்கள் பிரதிநிதியாக்கியது, இதே போல் இந்தியா முழுவதும் பல்வேறு சிறந்த தலைவர்கள் உருவாகினார்கள்.
ஆனால் பாஜக அரசு மக்களாட்சி மாண்பின் இந்த அடித்தளத்தை உடைத்து மீண்டும் மனுவாதி ஆட்சியைக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறது, முக்கியமாக அரியானா, குஜராத், ராஜஸ் தான் போன்ற மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர் கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று புதிய சட்டம் கொண்டுவர முயல்கிறது.
இது நமது அரசியல்சாசனச் சட்டத்தின் ஆன்மாவையே கொலைசெய்யும் சூழ்ச்சி யாகும். ராஜஸ்தான் அரியானா போன்ற மாநிலங்களில் இன்றளவும் படித்த வர்களின் எண்ணிக்கை மிகவும் குறை வாகவே உள்ளது. மேலும் கிராமங்களில் ஆதிக்கஜாதியினர் மாத்திரமே 10 ஆம் வகுப்பைத் தாண்டுகின்றனர். இதர ஜாதியினர் குழந்தைப்பருவத்தில் இருந்தே விவசாயக் கூலிகளாக மாற்றப்டுகின்றனர். சுதந்திரத்திற்குப் பிறகு 60 ஆண்டு காலமாக நீடித்த சாதாரண குடிமகனின் அரசியல் உரிமையை கேவலப்படுத்தும் செயலை எந்த அரசும் செய்யத்துணிய வில்லை, ஆனால்இந்து அமைப்புகளும் பாஜகவும் அம்பேத்கர் மீதான வன்மத்தை வேட்பாளர்களுக்கு கல்வித்தகுதி என்ற சிக்கலை ஏற்படுத்தி தீர்த்துக்கொள்ள முயல்கிறது.
இதே மோடி குஜராத் முதல்வராக இருந்த போது கிராமங்களில் தேர்தலே இல்லாமல் பெரும்பான்மையானவர்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவர் களே பஞ்சாயத்து தலைவர்களாக இருக்கட்டும் இதனால் தேர்தல் செலவுகள் மிச்சமாகும் என்று கூறி அதற்கு சம்ரஸ் கிராம் மஞ்ச் என்று பெயரும் வைத்தார், தேர்தல் இலலா மல் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறையை ஆதரிக்கும் கிராமங் களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப் படும் என்றும் கூறினார்.
ஒரு புறம் தேர்தலுக்காக கல்வித் தகுதி, மறுபுறம் தேர்தலே இல்லாமல் ஆதிக்கஜாதியினர் கிராமப் பஞ்சா யத்து தலைவர்களாக தேர்தெடுக்கும் முறை போன்ற அரசியல் சாசனச் சட் டத்தைக் கொலைசெய்யும் நடவடிக் கைகளில் இறங்கிய பாஜக இன்று அரசியல்சாசன நாளை மிகவும் விமர்சையாகக் கொண்டாடுகிறது. நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மாநிலங்களவையே தேவையில்லை என்றும் மாநிலங்களவையின் அனுமதி யின்றி அரசின் சட்டங்கள் நிறைவேற் றப்படவேண்டும் என்று கூறினாரே ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத் தின் முன்பு மனுவின் சிலை உள்ளதே, அப்படி என்றால் என்ன சொல்ல வருகிறார்கள்.
இன்றளவும் சட்டம் மனுநீதிப்படிதான் செயல்படும் அரசியல் சாசனப்படி அல்ல என்று தான மறைமுகமாகக் கூறுகிறார்கள். 2015 இந்திய வரலாற்றில் தலித் துகள், சிறுபான்மையினர் போன் றோருக்கு மிகவும் மோசமான ஒரு ஆண்டாக அமைந்துவிட்டது, அரசி யல் சாசனம் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கான அனைத்து உரிமைகளையும் வரையறைசெய்து மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது, அரசியல் சாசனத்தில் கூறப்பட்ட உரி மைகளை எந்தச் சட்டம் கொண்டு வந்தும் தடைசெய்ய முடியாது, ஆனால் அரசியல் சாசனத்தை எள்ளளவும் ஏற்காத ஒரு கட்சி இன்று ஆட்சியில் இருந்துகொண்டு சிறுபான் மையினருக்கு
எதிராகவும் தலித்து களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது, மோடி முதல் பாஜக கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப் பினர்கள் என அனைவருமே தாங்கள் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமா ணத்தை மீறி செயல்பட்டு வருகின் றனர். இந்தியா என்னும் குடியரசு நாட்டை இந்து ராஷ்டிரமாக, மனு தர்மத்தை இந்த நாட்டின் சட்ட நூலாக மாற்ற முனைப்புக் கொண்டு செயல் பட்டு வரும் பாஜகவும் அதன் தாய மையமைப்பும் அரசியல் சாசன நாளைக் கொண்டாடுவதன் பின்புலத் தில் கடுமையான சூழ்ச்சி ஒளிந்துள் ளது என்பதை அனைவரும் மனதில் வைக்கவேண்டும்.
நன்றி: BBC.com
ஆங்கில இணையதளத்திலிருந்து A. Ananth
- 26.11.2015
ஆங்கில இணையதளத்திலிருந்து A. Ananth
- 26.11.2015
தமிழில்: சரவணா ராசேந்திரன்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment