Thursday, November 5, 2015

62 சதவிகித மக்கள் மோடி அரசின்மீது கடும் அதிருப்தி! அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் ஏடு படப்பிடிப்பு



லாரிகளை மடக்கிக் காவல்துறை கைது செய்கிறது
62 சதவிகித மக்கள் மோடி அரசின்மீது கடும் அதிருப்தி!
அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் ஏடு படப்பிடிப்பு
யாதவ்நகர், நவ.4_ 62 சதவிகித மக்கள் மோடி அரசின்மீது அதிருப்தி கொண்டுள்ளனர் என்று அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் ஏடு கூறுகிறது.
இந்தியாவில் மாட்டுக்கறி உண்போரிடமிருந்து பசு மாடுகளைக் காப்பதற்காக தனியே இந்து கால்நடைப் பாதுகாப்புப் படையினர் செயல்பட்டு வருவதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
வணிக நோக்கில் மாடுகளை லாரிகளில் கொண்டு செல்பவர்களை மாட்டுக் கடத்தல்காரர்கள் என்று கூறி, அவர்கள் செல்லும் வழிகளில் இந்த பசுப் படையினர் காத்திருக்கிறார்கள்.
மத ரீதியிலாக சிலைகளைச் செய்துவருபவரான  ராஜேந்திர பிரசாத் (வயது35) கூறுகையில், நான் ஒரு இந்து. பசுக்களைப் பாதுகாப்பது என்னுடைய கடமை யாகும். நான் எவர் ஒருவரையும் பசுக்களை கடத்திச் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன் என்கிறார். 80 சதவிகித இந்துக்கள்
விவசாய வேலையில் உள்ளவர் என்று கூறும் விஜேந்திர பிரசாத் (வயது 22) கூறுகையில், ஒன்று நாங்கள் சாகவேண்டும். அல்லது அவர்கள் சாக வேண்டும். ஆனால், நாங்கள் ஒருவரையும் மாட்டுக் கறியைச் சாப்பிட விட மாட்டோம் என்கிறார்.
இந்தியாவில் 120கோடி மக்கள் தொகையில் சற்றே றக்குறைய 80 விழுக்காட்டளவில் இந்துக்கள் உள் ளனர். இந்துக்கள் பலரும் பசுவைப் புனிதமாக நம்பு வதால், மாட்டுக்கறியை சாப்பிடுவதில்லை என்கிறார் கள். மாட்டுக்கறியை சாப்பிடுவதையும், இறைச்சிக்காக பசுக்களை வெட்டுவதற்கும் பல மாநிலங்கள் தடை செய்துள்ளன.
நாட்டின் அரசியலில் பிரச்சினைக்குரியதாகவே எப்போதும் இப்பிரச்சினையைக் கொண்டுள்ளனர்.
ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒருவர் மாட்டுக்கறியை சாப்பிட்டதாக சந்தேகப்பட்டு ஒரு கும்பல் கொன்று போட்டது. இவ்விவகாரம் நாடு முழுவதும் பெருமளவிலான விவாதங்களை ஏற்படுத்தியது. மாட்டுக்கறி தொடர்பான பிரச் சினைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்துள்ளன. இந்தி யாவில் உள்ள சமூக அமைப்புகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் சகிப்புத்தன்மையை வலியுறுத்தி வருகின்றனர். பசு பாதுகாப்பு படைக்குழுவின் 12 பேரில் பிரசாத் மற்றும் சிங் ஆகிய இருவரும் உள்ளனர். மாட்டி றைச்சி குறித்த கண்காணிப்புக்கான குழுக்கள் நாடுமுழுவதும் இயங்கிவருகின்றன.
அத்துமீறக்கூடிய அமைப்பாக இந்து படைப்பிரிவு  கடத்தல்காரர்களுக்காக தெருக்களில் இரவு நேரங் களிலும், பகல் நேரங்களில் வயதான பசுக்களை பரா மரிக்கும் பணிகளில் பசுக்கள் காப்பகங்களில் பணியாற்றி வருகிறார்கள். மதசார்பற்ற இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் பசுவைப் பாதுகாக்க வழிகாட்டுகிறது. மாநிலங்கள் பசுக்களைக் கொல்வதில் தடைகளை மீறுபவர்களுக்கு
தண்டனைகளை நடைமுறைப்படுத்து கின்றன. அரசுகள் செயல்படாத நிலை யில் இந்து அமைப்பினர் தாமாகவே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள் கின்றனர்.
சத்ய பால் ஆச்சார்யா எனும் பள்ளி ஆசிரியர் கூறும்போது, எங் களின் கடவுள்கள், பெண் கடவுள்கள் பசுவின் உடலில் குடியிருக்கிறார்கள். எங்கள் பசுக்கள் எவ்வளவு காலத் துக்கு ஆரோக்கியமாக இருக்கின் றனவோ அதுவரை எங்கள் நாகரிகம் செழிப்பாக இருக்கும். சட்டங்களை நடைமுறைப்படுத்த சில நேரங்களில் அரசின் கரங்களைப் பலப்படுத்த வேண்டி இருக்கிறது.
அண்மையில் வன்முறைகள் கடந்த செப்டம்பரில் வெடிக்கத் தொடங்கின. டில்லி அருகே மாட்டிறைச்சியைச் சாப்பிட்டார் என்கிற சந்தேகத்தின் பேரில், ஒரு கும்பலால் 50 வயதான முசுலிம் முதியவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்து இழுத்துசென்று வீட்டுக்கு வெளியே தள்ளி, அவர் சாகும்வரை செங்கற் கலால் அடித்தே கொல்லப்பட்டார். அம்முதியவர் வீட்டில் குளிர் சாத னப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியை காவல்துறையினர் ஆய்வுக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி னார்கள். ஆய்வு முடிவில் வெள ளாட்டிறைச்சி என்று தெரிய வந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக மேலும் ஒரு வன்முறைக்கும்பல் பசுக்களைக் கொண்டு செல்பவராகக் கருதி மலைகள் நிறைந்த மாநில மாகிய இமாச்சலப்பிரதேசத்தில் ஒரு லாரி ஓட்டுநரை  சரமாரியாகத் தாக்கி உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் பசு வைக்கொன்றார் என்கிற புரளியைக் கொண்டு முசுலிம் இளைஞரை ஒரு கும்பல் எரித்து விட்டது.
மாட்டுக்கறி பிரச்சினையில் தம் எதிர்ப்பைக் காட்டிட, முசுலிம் சட்ட மன்ற உறுப்பினர் மாட்டுக்கறி விருந்து நடத்தினார் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத் துக்கு உள்ளேயே சரமாரியாகத் தாக்கினார். அதற்கான படப்பதிவுகள் உள்ளன.
62 சதவிகிதத்தினரின் கருத்து
அண்மையில் வெளியான அவுட் லுக் இதழ் நடத்திய வாக்கெடுப்பில் 62 விழுக்காட்டினர் கூறும்போது, மாட்டுக்கறி தொடர்பான கொலை கள்மூலம் மோடியின் உருவத்தையும், பாஜகவையும் தோலுரித்துக் காட்டி விட்டார்கள்என்று குறிப்பிட்டுள் ளார்கள். இந்தியா டுடே இதழின் தலை யங்கத்தில், குறுகிய மனப்பான்மை யுடன் உள்ள அரசியலாக பசு திட் டம் மற்றும் வகுப்பு வாத எச்சரிக் கைகளும் மோடி கூறுகின்ற வளர்ச் சித் திட்டங்களுக்கான செயல்களில் தடைகளாக உள்ளன என்று குறிப் பிட்டுள்ளது. மேலும், அத்தலையங் கத்தில், கடந்த ஆண்டு மோடியிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததற்கு பொருளாதார வளர்ச்சி என்று கூறியதன்றி, இந்து மதத்தில் காலாவதி யாகிவிட்ட பழக்க வழக்கங்களை மீண்டும் திருப்பிக் கொண்டுவருவதற் காக அல்ல என்று குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையின் ஒத்துழைப்பு
பசுப் பாதுகாப்புக் குழுவினர் கூறுகையில், இந்தியா முழுவதும் பாஜக அரசு எங்களுக்கு தெம்பூட்டுவதாக இருக் கிறது என்கின்றனர். விசுவ இந்து பரிஷத் பன்னாட்டுக் குழுவைச் சேர்ந்தவரும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராம்கர் நகரில் பசுப் பாதுகாப்புக் குழுவின் தலை வராக உள்ள நவால் கிஷோர் ஷர்மா கூறுகையில், எப்போதெல்லாம் பாஜக ஆட்சி இருக்கிறதோ, அப்போதெல் லாம் எங்களுக்கு சாதகமாக இருக் கிறது. நாங்கள் காவல்துறையினரிடம் பசு மாடுகள் கடத்தப்படுவது குறித்து  புகார் கொடுத்தால், எங்கள் புகாரை மிகவும் கவனமாகக் கேட்பார்கள் என்றார்.
ஷர்மா தலைமையிலான குழு ரகசிய உளவாளிகளைக் கொண்டு பரந்த வலையமைப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவர்கள், கடைக்காரர் கள் உள்ளிட்டவர்கள் நெடுஞ் சாலைகளில் போக்குவரத்தைக் கண் காணித்து தகவல்களைத் தெரிவிப் பார்கள். சில கடத்தல்காரர்கள் சட்ட விரோத துப்பாக்கிகளுடன் இருப் பார்கள். பேருந்துகள், லாரிகள், ஆம்புலன்ஸ்களிலும்கூட பசுக்களை கடத்திச் செல்வார்கள். ஷர்மா கூறுகையில், எங்கள் பணி மிகவும் கடினமானதாகும் என்றார். மத பேதங்களை ஏற்படுத்திவிட்டதாக 19 வழக்குகள் ஷர்மாமீது உள்ளன. மேலும், பசுக்கடத்தல் வழக்கில் சாட் சியாக மற்ற 10 வழக்குகள் உள்ளன.
நள்ளிரவில் நெடுஞ்சாலையிலும், கிராம சாலைகளிலும் ஒன்று கூடு வார்கள். ஆணிகள், பெரிய தடிகளு டன் லாரிகளை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். லாரி வரும்போது முதல் வேலையாக டயர்களை ஆணி களைக்கொண்டு பதம் பார்ப்பார்கள். இப்படி அவர்கள் திரண்டிருப்பதைக் காணும் லாரி ஓட்டுநர்கள் அதிரடி யாகத் தங்கள் வழியை மாற்றிச் செல்லும்போது, காவல்துறையின ருக்குத் தெரிவிக்கப்படும். ஒரு மணி நேரத்துக்கும் மேலான துரத்தல் களுக்குப்பின்னர் கடைசியில் காவல் துறையினர் அந்த லாரிகளைப் பிடிப்பார்கள். காவல்துறையினர் லாரியில் இருந்த இரண்டு பேரையும் கைது செய்து, லாரியைப் பறிமுதல் செய்வதுடன், மாடுகளை காப்பகத்துக்கு அனுப்பி விடுவார்கள். இதுபோல் உள்ளூர் காவல்நிலையத்தில் மட்டும் 6 வழக் குகள் பதிவாகி உள்ளன.
தொலைபேசி வாயிலாக இறைச்சிக் கூட மேலாளரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அரியானா அருகாமை மாநிலங்களில் மாட்டுக் கறியை விற்பதை மறுத்தார்கள். இதெல்லாம் முசுலிம்களுக்கு எதிராக செய்யப்படுகின்ற பிரச்சாரங்கள் என்றார். பிரச்சினை அதிகமாக இருந்துவருவதால் அவர் தன் பெயரை வெளியிடவேண்டாம் என்று கூறி விட்டார்.
ஏழைகளுக்கான உணவு மாட்டுக்கறியே!
கிராமத்தில் உள்ள மற்றவர்கள் கூறுகையில் ஏழைகளுக்கான உணவு மாட்டுக்கறிதான் என்கிறார்கள்.
அரியானாவில் சமூகநலக்குழுவை நடத்திவருபவரான யூனூஸ் ஆல்வி என்பவர் கூறும்போது, ஏழை முசுலீம் குடும்பத்தினர் மாட்டுக்கறியைத்தான் சாப்பிட முடியும். காரணம் கோழி, ஆட்டுக்கறி அதிக விலை என்பதால் தான். ஆனால், நீண்ட காலத்துக் குப்பிறகு இப்போது முசுலீம் மதத் தலைவர்கள் மாட்டுக்கறியை சாப்பிட வேண்டாம் என்கிறார்கள். இந்துக் களின் மத உணர்வுகளை இசுலாம் பெயரில் புண்படுத்தவேண்டாம் என்கின்றனர். மேலும், பசுக்களை இறைச்சிக்காக கொல்வது என்பது சட்ட விரோதமாக அறிவிக்கப்பட் டுள்ளது என்றார்.
பிரசாத், சிங் மற்றும் பிற பசுப் பாதுகாப்பு படையினர் இரவு முழுவதும் காத்திருக்கின்றனர். எந்த லாரியும் மாடுகளை ஏற்றி வரவில்லை. விடியும்போது, உளவு சொல்பவர் கூறும்போது,  படையினரைக்கண்டு கொண்ட கடத்தல்காரர்களும் இரவு முழுவதும்  அந்தப்பகுதிக்கு வரவே இல்லை என்று கூறினார். ஆனாலும் அதுவும் வெற்றிதான். தொலைக்காட்சி கடை உரிமையா ளரும், படையைச் சேர்ந்தவருமான  பாபுலால் பிரஜாபதி கூறுகையில், ஒரேயொரு மாட்டை கொண்டு செல்வது என்றாலும் அவர்கள் உயிரைப்பணயம் வைத்தே செல்ல வேண்டும்.  இதன்மூலம் நாங்கள் எவ் வளவு வலிவுடன் இன்றைக்கு இருக் கிறோம் என்பதை உணர்த்தும் என்றார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...