ஆரியர்கள் நமது தேசத்தில் குடியேறி வந்து ஜாதி கோட்பாடுகளை உண் டாக்கியபோது, இப்போது பறையர், பஞ்சமர், ஆதி திராவிடர்களென்னும் திராவிடர்கள் இசையாமல், பல துன்பங்களுக்குட்பட்டு கொண்டு, தனியே சேரி என்னும் தங்கள் கிராமங் களையுண்டாக்கி கோயில், குளம் குரு கிராம தலைவர் (நாட்டாண்மைக்காரர்) பஞ்சாயத்தார், வண்ணான், அம்பட்டன், சுடுகாடு, இடுகாடு, விதவா விவாகம், விவாக சம்பந்த விலக்கு முதலியவையுடன் கிராமங் களில் தனி சமுதாயமாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
***
1895ஆம் வருஷத்தில் அச்சம்பவம் நேரிட்டது. அதவாது லண்டன் நகரில் சிவில் சர்வீஸ் பரீஷை நடந்து கொண்டிருந்தது. அந்த பரீஷையில் தேருகிறவர்கள் ஆங்கிலேயரே, அவர்கள் தான் கலைக்டர்களாகவும், இன்னும் தேச பரிபாலனத்தில் உத்தரவாதமான உயர்ந்த பதவிகளினின்று தேச பரிபாலனஞ் செய்து கொண்டு வந்தார்கள். அந்த பரீஷை இந்தியாவிலும் நடைபெற வேண்டுமென பிரிட்டிஷ் பார்லிமெண்டில் காங்கிரஸ்காரர்கள் ஒர் மசோதா சமர்ப்பித்தார்கள். அந்த பரீஷையானது இந்தி யாவிலும் நடந்தால் ஜாதி இந்துக்கள், உயர்தர உத்தி யோகங்களை வகித்து ஏழை ஜாதியாரானவர்களை தீண் டாதார் என்று இம்சிப்பார் களென பறையர் மகா ஜன சபையார் (இதன் செயலாளர் இரட்டைமலை சீனிவாசன்) சென்னை வெசிலியன் மிஷன் காலேஜ் ஆலில் 1893ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி ஒரு பெருங் கூட்டம் கூடி அந்த மசோதாவை எதிர் மறுத்து 112 அடி நீளமுள்ள ஒரு மனுவில் 3412 கையொப் பங்கள் சேகரித்து ஜெனரல் சர்ஜார்ஜ் செஸ்னி (நிமீஸீவீக்ஷீ நிமீஷீ. சிலீமீஸீமீஹ்) என்னும் பார்லிமென்ட் மெம்பரைக் கொண்டு சமர்ப்பித்தார்கள். அதனைக் கண்ட காங்கிரஸ் காரர் தங்கள் மனுவை பின்னித்துக் கொண்டார்கள். அதன்பின் கீழ்தர உத்தியா கங்களிலிருந்து மேல் தர உத்தியோகத்தை வகிக்க யோக்கியதையுள்ளவர்களை நியமிக்கலாமென இந்திய செக்ரேட்டிரியார் உத்தர வளித்தார்.
***
கிராமங்களில் இவ்வின குடியானவர்கள் நிலை மையை திட்டமாய் குறித்த தோடு சென்னை நகரத் திலுங்கூட மைலாப்பூரில் அய்க்கோர்ட் ஜட்ஜாக விருந்த ஓர் இந்தியர் வசிக்கும் வீட்டுக்குச் சமீப மாயுள்ள பிராமணர் தெரு வில் பறையர் உள்ளே வரக் கூடாது என்ற விளம்பரப் பலகையொன்று இருப்பதாகவும், இந்துக்கள் ஸ்தாபித்து இருக்கும் பச்சையப்பன் கலா சாலையில் இவ்வினத்துப் பிள்ளைகளைச் சேர்ப்ப தில்லை என்றும் மனுவில் கண்டிருந்தது. அந்த பலகையெடுபட்டு போகவும் கலாசாலையில் பிள்ளை களைச் சில காலத்திற்கு பிறகு சேர்க்கவும் இம் மனுவே காரணம் (ஆதாரம்: இரட்டை மலை சீனிவாசன் ஜீவிய சரித்திர சுருக்கம் பக்.25-271)
- மயிலாடன்
குறிப்பு: இன்று இரட்டை மலை சீனிவாசன் அவர் களின் பிறந்தநாள் (7.7.1860).
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment