பிஜேபியின் ம.பி. ஆட்சியில் என்ன நடக்கிறது?
மர்ம மரணங்கள் - மேலும் மேலும் மர்ம மரணங்கள்!
கடந்த மூன்று நாட்களில் தினமும் ஒருவர் மரணம்
கடந்த மூன்று நாட்களில் தினமும் ஒருவர் மரணம்
போபால்\டில்லி, ஜூலை 6_ - மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி கடந்த 15 ஆண்டு களாக நடந்து வருகிறது. இந்த ஆட்சியில், மருத் துவம் பொறியியல் நுழை வுத் தேர்வு மற்றும் அரசுப் பணியாளர் ஆணையத்தில் (வியாபம்) அதிக அளவு ஊழல் நடந்துள்ளதாக காங் கிரஸ் குற்றம் சாட்டியது. இந்த ஊழல் தொடர்பான சாட்சிகள் மற்றும் ஊழலில் பங்கு வகித்த பலர் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின் றனர். ஜூன் 30 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் இந்த ஊழலில் சாட்சியாக உள்ள ஒருவரும், குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஒருவரும் சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்தனர்.
இந்த நிலையில் வியாபம் ஊழல் தொடர் பாக செய்திசேகரித்துக் கொண்டிருந்த ஆஜ்தக் என்ற பிரபலசெய்தி (தொலைக்காட்சி) நிகழ்ச் சித் தொகுப்பாளர் மரண மடைந்தார். பிரபல செய்தித் தொகுப்பாளரான அக்ஷ்ய சிங் தலைநகர் டில்லியில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம் மேக் என்ற நகரத்தில் கடந்த வாரம் மரணமடைந்த மருத்துவர் தோமரின் குடும்பத்தின ரிடம் நேர்காணல் நடத்தி கொண்டிருக்கும் போது பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடன் சென்ற ஒளிப்பதிவாளர் கூறும் போது: எங்களிடம் பேசிக் கொண்டு இருக்கும்போது திடீரென வாந்திஎடுக்க ஆரம்பித்தார். நாங்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தோம், அடுத்த சில நிமிடங்களில் மயக்க மடைந்தார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் என்று கூறினார். இந்த நிலையில் அவர் கொண்டு வந்த ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போய் விட்டன. இந்த மரணம் தொடர் பாக சிறப்பு புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ள தாக சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். மருத்துவமனை முதல்வர் மரணம் இந்த நிலையில் ஜபல் பூர் மருத்துவமனை முதல் வர் அருண் சர்மா டில்லி யில் உள்ள அய்ந்து நட் சத்திர விடுதி ஒன்றில் பிணமாக மீட்கப்பட்டார். சனிக்கிழமை இரவு டில்லி வந்த இவர் நேற்று பத்திரி கையாளர் ஒருவரை சந்திப் பதாக இருந்தது. இந்த நிலையில் காலைவரை அவர் அறைதிறக்கப்பட் டாத காரணத்தால் சந் தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை மாற்றுச்சாவி போட்டுத் திறந்து பார்த்தபோது படுக்கையறையில் இறந்து கிடந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் மருத் துவரின் பிணத்தைக் கைப் பற்றி பிரேத பரிசோ தனைக்கு அனுப்பியுள்ளனர்.
இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர் உடலில் எந்த இடத்திலும் காயம் இல்லை, ஒரு வேளை மாரடைப்பு ஏற் பட்டு மரணமடைந்திருக்க லாம் எதுவிருந்தாலும் பிரேதபரிசோதனைக்குப் பிறகுதான் தெரியவரும் என்றார். மரணமடைந்த அருண் சர்மா வியாபம் ஊழலில் மிகவும் முக்கிய நபராவார், இவர் தலைமையில் நடந்த மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் பல் வேறு முறைகேடுகள் நடந் தது குறித்து இவர்மீது விசாரணை நடந்து வரு கிறது. நேற்று சந்தேகத் திற்கிடமான முறையில் மரணமடைந்த பத்திரிகை யாளர் அக்சய் சிங் திங்கள் அன்று இவரைச் சந்திப்ப தாக தனது அலுவலகத் தில் கூறியிருந்தார். காவல்துறை பெண் ஆய்வாளர் மரணம் இந்தத் தொடர் மர ணத்தை அடுத்து ஞாயிறு மாலை சாகர் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் அனாமிகா குஷ்வாக தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் பிண மாக மீட்கப்பட்டார்.
இவர் வியாபம் ஊழல் மூலம் நடந்த முறைகேட் டின் மூலம் காவல்துறை அதிகாரியானவர். நீச்சல் மற்றும் தடகள வீராங் கனையான அனாமிகா குளத்தில் குதித்து இறந் திருக்க வாய்ப்பில்லை. அவரை கொலை செய்து குளத்தில் வீசியிருக்க வேண்டும் என்று அவரு டன் பணிபுரிந்த சிலர் கூறியுள்ளனர். இருப்பினும் காவல்துறை இதை தற் கொலை என்றே பதிவு செய்துள்ளது. கொலை செய்ப்பட்ட பத்திரிகையாளரின் உடல் உடனடியாக எரியூட்டப்பட்டது சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த பத்திரிகையாளர் உடல் சாதாரண உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகு உடனடியாக எரியூட்டப் பட்டது. முக்கியமாக இது போன்ற சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்தவர்களின் உடலை நீதிபதிகள் முன்னிலையில் மருத்துவ நிபுணர்கள் பரிசோதனை செய்யவேண்டும் ஆனால் அக்ஷய் சிங்கின் உடல் மத்தியப்பிரதேச போபால் மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்த பிறகு முழு அறிக்கை வரும் முன்பே உடனடியாக எரியூட்டப் பட்டு விட்டது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பால் ஆபத்து என்பதா?உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலிருந்து இந்தப் பகுதியை தமிழக அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்!
- பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்
- இந்து மதத்தால் ஏற்பட்ட விபரீதம்!கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி வேறுபாடா?
- மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குமழைக்காக பூஜை செய்ய உத்தரவிடுவதா?
- கடவுள், மதங்களுக்குக் கல்தா! இவற்றில் நம்பிக்கையற்றவை உலகில் 11 நாடுகள்
No comments:
Post a Comment