- மஞ்சை வசந்தன்
திருமா வளவன் அவர்களே திகைக்க வேண்டாம், மலைக்க வேண்டாம், சோர வேண்டாம்! ஆசிரியத்தின் வெற்றி காற்றடைத்த பலூன் போன்றது! அதன் உருவத்தைக்கண்டு மலைக்க வேண்டாம். அதைத்தகர்க்க ஒரு சிறு குண்டூசி போதும்! சிற்றூசியின் சிறு முனைப் பட்டாலே அத சிதறிப்போகும்! பி.ஜே.பி. பெற்றிருப்பது வளர்ச்சியல்ல வீக்கம்! மக்கள் மயங்கியதன் விளைவு. தெளி வூட்டினால் எதிரியின் வளர்ச்சி சிதறிப் போகும்! நாம் குண்டூசி போன்றவர்கள்! என்று திருமாவளவனுக்கேயன்றி, தமிழி னத்தின் மலைப்பையும், திகைப்பையும் தகர்க்கும் வகையில் பேசினார் தமிழர் தலைவர்.
ஆம் உண்மை. அன்றைய கூட்டத் தில் தா.பாண்டியன், சு.ப.வீ, அவர்கள் அருணன் ஆற்றிய உரைகளும் இறுதி யில் ஆசிரியர் ஆற்றிய உரையும் ஒளி, ஒலி பதிவாக்கப்பட்டு நாடுமுழுவதும் மலிவு விலையில் விற்கப்படவேண்டும், ஒலிபரப்பப்பட வேண்டும். தமிழகம் முழுக்க இப்படிப்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். காலம் கடத்தாது சூட்டோடு சூடாய் பி.ஜே.பி. யின் இந்துத்வா சமஸ்கிருத திணிப்பு பற்றிய கேட்டினை விளக்கி மக்களை விழிப் படையச் செய்து, மதவாத சக்திகளை மண் கவ்வ செய்ய தீவிரமாய் செயல் பட்டாக வேணடும்.
இந்திய அளவில் மதச்சார்பற்ற தலைவர்களை உடனடியாக ஒன்றி ணைத்து ஒரு வலுவான எதிரணியை அமைக்க வேண்டும். அதைச் செய்யும் தகுதியும் ஆற்றலும் தமிழர் தலைவர்க்கே உண்டு. அதை அவர் செய்ய வேண்டும் என்று மனித நேயப்படி நாங்களும் இன உணர்வாளர்களும் எதிர்பார்க்கிறோம், வேண்டி நிற்கிறார்கள்! தமிழர் தலைவர் சாதிப்பார்.
பி.ஜே.பி. ஆட்சி மத்தியில் வந்த நாள் முதல் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு சிக்கலை வேண்டுமென்றே உருவாக்கி வருகின்றனர்.தப்பு என்று தெரிந்தே அதைத் தொடர்ந்து அவர்கள் செய்வதற்கு இருகாரணங்கள்1) மக்களின் எதிர்ப்பு, எழுச்சி எந்த அளவிற்கு இருக்கிறது. மற்றக் கட்சியி னரின் கிளர்ச்சி எந்த அளவிற்கு இருக் கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு சோதனையாக இச்செயல்களைச் செய்கின்றனர்.2) வளர்ச்சி, எழுச்சி, வேலைவாய்ப்பு, லஞ்ச ஒழிப்பு, கருப்புப்பண மீட்பு, நாட்டு முன்னேற்றம் என்று பொய்யான ஏமாற்று வாக்குறுதிகளைத் தந்து ஆட்சிக்கு வந்தவர்கள், அவற்றை நிறைவேற்ற முடியாத நிலையில், அவற்றிற்குப் பதில் கூற வக்கில்லாமல் போனதால் எதிர்க் கட்சியினரையும், மக்களையும் திசை திருப்பி அவர்களது கவனத்தை வேறு வகையில் கொண்டு செல்ல இச்செயல் களைத் திட்டமிட்டு செய்கின்றனர்.ஆக ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்துவருகின்றனர். இவற்றைச் செய்ய சுப்ரமணியசாமி போன்ற கையாட்களை, சாமியார்களை, கட்சிக்காரர்களைப் பயன் படுத்துகின்றனர்.
இப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது எழுப்பும் சிக்கல்கள் கூறும் கருத்துக்கள், அவர்களுடைய சொந்தக் கருத்துக்களோ, வாய்தவறி சொல்லி விட்டவையோ அல்ல. இவை அனைத் தும் ஆர்.எஸ்.எஸ். இன் அடிப்படை இலக்குகள். அவர்கள் எப்படியாவது நி றவேற்றத் துடிக்கும் செயல்திட்டங்கள்.கையாட்கள் எழுப்பும் சிக்கல்கள் பெரிதாகி கிளர்ச்சி, போராட்டம் என்று எதிர்ப்பு வலுக்கும்போது மன்னிப்பு என்ற மோசடியில் தப்பிக்க முயலுகின் றனர். இந்திய நாட்டின் சட்டத்திற்கு எதிராகப் பேசிய இவர்களைத் தண்டிப் பதோ, கண்டிப்பதோ இல்லை.
மாறாக ஊக்குவிக்கப்படுகின்றனர். உயர்வளிக் கப்படுகின்றனர்.எனவே ஆர்.எஸ்.எஸ்.பரிவார அமைப்புகள் செய்ய முயலுகின்ற, நிறைவேற்றத் துடிக்கின்றவற்றை மக்கள் எந்த அளவிற்கு எதிர்க்கிறார்கள், எதிர்க் கட்சிகள் எப்படி சேர்ந்தெழுகிறார்கள் என்பதைக் கண்டறிய ஒரு சோதனை முயற்சியாக இவை செய்யப்படுவதால், முளையிலே களைதல் என்பதைப் போல வாயளவில் அவர்கள் சொல்லும் போதே கடும் எதிர்ப்பைக் காட்ட வேண்டியது அதுவும் நாடு முழுமைக்கும் காட்ட வேண்டியது மதச்சார்பற்ற சக்திகளின் கட்டாயக் கடமையாகும்.குறிப்பாக இம்முயற்சிகள் அனைத்தும் ஆரிய பார்ப்பனர்கிள் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சி என்பதால், அவற்றைத் தொடக்கத் திலேயே துடைத்தெறிய வேண்டிய கடமை பெரியார் தொண்டர்களுக்கு உண்டு என்பதால், அதை முழுக்க உணர்ந்த தமிழர் தலைவர் அவர்கள், நொடிப்பொழுதும் தாமதிக்காது எதிரி களின் முயற்சிகளை முறியடிக்க மக்க ளிடையே மதச்சார்பற்ற அணியிடையே விழிப்புண்டாக்கி, எதிர்ப்பை வலுப்படுத்தி வருகிறார். அதன் விரிவாக்கமாக, மதச்சார்பற்ற கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து வலுவான எதிர்ப்பைக் காட்ட 12.12.2014 அன்று கீதையைத் தேசிய நூலாக்கும் முயற்சிக்குக் கண்டனக் கூட்டம் பெரியார் திடலில் தமிழர் தலைவர் தலைமையில்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் தி.க.வுடன் கைகோர்த்து, அதன் உற்சாகப் பெருக்கில் கர்ச்சித்தார் அவர் உரை இன உணர்வுப்படி கடமையாய் அமைந்த தோடு, எதிரிகளின் சூழ்ச்சியை சிதறடித்த தோடு, அவர்களைக் கலங்கடிக்கவும் செய்தது.சுப.வீ. அவர்கள் வழக்கம்போல் பொருள் பொதிந்த, உணர்வுமிக்க கேலி கலந்த உரையாற்றி தன் கண்டனத்தை தெரிவித்து விழிப்பூட்டினார்.அருணன் உணர்வு பிழம்பாய் ஆரியத் தின் வீரியத்தை வீழ்த்தும் நுட்பங்களைப் பேசினார், கருத்துக் கனல் வீசினார்.
அடுத்து வந்த விடுதலைச் சிறுத்தை களின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையில் உணர்வு கொந் தளிக்கும்,
எழுச்சி எரிமலையாய் எகிறும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் எதிரிகளின் வளர்ச்சியும், வியூகமும், முயற்சியும், செயல்பாடுகளும் வலுவாய் நிற்பதாய் கற்பித்துக் கொண்டு கலங்கினார்.ஆரியத்திற்கு எதிராய் வீரியத்துடன் பேச வேண்டியவர் ஏனோ விரக்தியில் பேசினார்.
அவர் எதிரியின் சூழ்ச்சியை சதியை, ஆதிக்கத்தை எதிர்க்க ஆர்த் தெழுவதில் சளைத்தவர் அல்ல. ஆனால் அன்றைக்கு கலங்கினார். எதிரியிடம் பயந்தல்ல, எதிரியின் வளர்ச்சி, சூழ்ச்சி ஆட்சி பற்றிய கவலையில்!இக்காட்சி பாரதப்போரில் அர்ச்சுனன் கலங்கி நின்றதுபோல் இருந்தது. அவரது உரையைக் கூர்ந்து கவனித்த தமிழர் தலைவர், அடுத்துவந்த தமதுரையில் திருமாவளவன் அவர்களின் மயக்கத்தை, தயக்கத்தை, மலைப்பைத் தகர்த்து அவரை வீறுகொள்ளச் செய்யச்செய்தார்.
அர்ஜூனன் சோர்ந்து நின்ற நிலையில் கண்ணன்
எழுச்சியூட்டியதாகச் சொல்லப்படும் பாரதப் போரின் காட்சியை இது ஒத்திருந்தது.
திருமா வளவன் அவர்களே திகைக்க வேண்டாம், மலைக்க வேண்டாம், சோர வேண்டாம்! ஆசிரியத்தின் வெற்றி காற்றடைத்த பலூன் போன்றது! அதன் உருவத்தைக்கண்டு மலைக்க வேண்டாம். அதைத்தகர்க்க ஒரு சிறு குண்டூசி போதும்! சிற்றூசியின் சிறு முனைப் பட்டாலே அத சிதறிப்போகும்! பி.ஜே.பி. பெற்றிருப்பது வளர்ச்சியல்ல வீக்கம்! மக்கள் மயங்கியதன் விளைவு. தெளி வூட்டினால் எதிரியின் வளர்ச்சி சிதறிப் போகும்! நாம் குண்டூசி போன்றவர்கள்! என்று திருமாவளவனுக்கேயன்றி, தமிழி னத்தின் மலைப்பையும், திகைப்பையும் தகர்க்கும் வகையில் பேசினார் தமிழர் தலைவர்.
ஆம். அன்றைக்கு ஆசிரியர் ஆற்றிய உரை மலைத்து நிற்கும் எழுச்சி தமிழர்களுக்கு செய்யப்பட்ட வீரா உபதேசம் ஆக அமைந்தது. பகவத் கீதையை எதிர்க்கும் மேடையில் நிகழ்ந்த இக்காட்சி எவ்வளவு இயற்கைப் பொருத்தம் பாருங்கள்!
அன்றைய கூட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அதைப் பற்றி மறுநாள் காலை தொலைக்காட்சியில் தோழர் குமரேசன் விளக்கமாக எடுத்துரைத்தார். அது தமிழகம் முழுவதும் நிகழ வேண்டும் என்றும் கூறினார்.
இந்திய அளவில் மதச்சார்பற்ற தலைவர்களை உடனடியாக ஒன்றி ணைத்து ஒரு வலுவான எதிரணியை அமைக்க வேண்டும். அதைச் செய்யும் தகுதியும் ஆற்றலும் தமிழர் தலைவர்க்கே உண்டு. அதை அவர் செய்ய வேண்டும் என்று மனித நேயப்படி நாங்களும் இன உணர்வாளர்களும் எதிர்பார்க்கிறோம், வேண்டி நிற்கிறார்கள்! தமிழர் தலைவர் சாதிப்பார்.
No comments:
Post a Comment