ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது
சட்டப்படியான நடவடிக்கைகள் தேவை
திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
சென்னை, ஏப்.30- ஜாதிவெறியைத் தூண்டி கலகம் விளைவிப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
தீர்மான எண் (1)
இரங்கல் தீர்மானம்
30.4.2013 செவ்வாயன்று சென்னை பெரியார் திடலில் - துரை சக்ரவர்த்தி நிலையத்தில் திராவிடர் கழகத் தலைவர் மான மிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தினத்தந்தி அதிபரும், தமிழ்ப் பத்திரிகை உலகில் தனி சாதனை படைத்தவருமான டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் (76) அவர் களின் மறைவிற்கும் (19.4.2013).
தி.மு.க. தொழிற்சங்கத் தலை வரும், மக்களவை முன்னாள் உறுப்பினரும், சுயமரியாதை வீரருமான செ. குப்புசாமி (வயது 87) மறைவு (19.4.2013) அவர் களின் மறைவிற்கும் இச்செயற் குழு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்ட வீரரும், பெரியார் உரைகளை ஒலிநாடா மூலம் பதிவு செய்து தமிழர்களுக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த வருமான திருச்சி து.மா. பெரியசாமி (வயது 80) அவர் களின் மறைவிற்கும் (12.03.2013), திருவாரூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர், சீரிய இயக்க வீரர், குடவாசல் வீ. கல்யாணி அவர் களின் மறைவிற்கும் (15.3.2013) இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மான எண் (2)
ஜாதி உணர்வைத் தூண்டுவதற்குக் கண்டனம்!
(அ) தாழ்த்தப்பட்ட - மக் களுக்கு எதிராக ஜாதி உணர் வைத் தூண்டும் சக்திகளுக்கு இச்செயற்குழு தனது கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள் கிறது. ஜாதி வெறியை ஊட்டித் தவறான திசைக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்போரைப் புறந் தள்ளுமாறும் இச்செயற்குழு பிற்படுத்தப்பட்ட மக்களைக் கேட்டுக் கொள்கிறது.
தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத் தப்பட்டோர் ஒற்றுமை சமூக நீதிக் கண்ணோட்டத்தில் மிகமிக முக்கியமானது என்ற உணர் வைத் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஊட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடுவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது. ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண் டுமென்று தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை
(ஆ) ஜாதி ஒழிப்புத் திசையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட் டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதால், இதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுத்து வெற்றிப் பெறச் செய் வதில் நமது பணியை முடுக்கி விடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. மே 4-இல் நடைபெற இருக்கும் இளை ஞரணி மாநில மாநாட்டில் அதற்கான போராட்டத் திட்டத்தை அறிவிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மான எண் (3)
இராஜபாளையம் மாநில இளைஞரணி மாநில மாநாடு
இராஜபாளையத்தில் வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில இளைஞரணி மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிப் பெறச் செய்ய முனைப்புக் காட்டுமாறு கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
பெரியார் பிஞ்சு முதல் முதியோர் வரை குடும்பம் குடும்பமாக வருமாறு இச்செயற்குழு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறது.
1 comment:
Could have been better if the caste violence perpetrators have been named in this post. Or because it was not a brahmin who instigated the violence the persons have not been named? Oh that is rationalism you see, selective naming and blaming.
Post a Comment