தமிழகத்தில் சமூக நீதி - இடஒதுக்கீட்டிற்காக
திராவிட இயக்கங்கள் போராடிப் பெற்ற வெற்றியின் பாதையில்
ஜெயலலிதா அரசு வீசிடும் தடைக் கற்கள்
கவிஞர் கனிமொழி எம்.பி.,
தலைவர், தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை
கவிஞர் கனிமொழி எம்.பி.,
தலைவர், தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை
அடிமைகளைப்போல் நடத்தப்பட்டவர்கள், கல்வி என்றால் அவர்களின் காதுகளில் ஈயத் தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்ற காட்டு மிராண்டிக் காலங்களை இப்போதுதான் இந்தியா கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்து சமூக நீதியை சில நேரங்களில் கடைபிடிக்கத் தொடங்கி யிருக்கிறது.
நீதிக்கட்சியில் தொடங்கி தலைவர் கலைஞர் வரை அந்தப் போராட்டம், அதன் அரசியல் மாற்றங்களும் நுணுக்கங்களும் கண்காணிக்கப்பட்டு தொடர்ந் தாலும், அதற்கு எதிரான குரல்கள் என்றும் ஓய்ந்ததே இல்லை. அவை ரகசியத் தளங்களில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும். இடஒதுக்கீட்டிற்கான எதிர்ப் பிரச்சாரங்கள் இன்று தனது ஊடகமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையே பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது. சில ஊடகங்களும், திறமைக்கு மரியாதை, தகுதித்தேர்வு என்ற கருத்துக் களை, அதன் சரித்திர ரணங்களைப் புரிந்து கொள் ளாமல் முன்வைக்கிறார்கள். Brain Drain பற்றி இன்று கவலைப்படுபவர்களுக்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் கல்வி என்ற உரிமை மறுக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், பெண்கள் இவர்களின் மூளைகள் எல்லாம் விரயம் செய்யப் பட்டது நியாயமாகத் தெரிகிறதா?
இப்படித்தான் நம்மோடு நம்மிடையே வாழ்ந்து, ஒடுக்கப்பட்டவர்களின் வாக்குகளைப் பெற்று, நம்மவர்களாலேயே சமூகநீதி காத்த வீராங்கனை என்று வாழ்த்தும் பெற்றிருக்கக்கூடிய நாளைய இந்தியப் பிரதமர் கனவில் இருக்கும் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் நம் தோள்களின் மீது ஏறி நின்று கொண்டு, தன் பாரம்பரியப் பகையை, பழிவாங் கலை, அரங்கேற் றிக் கொண்டிருக்கிறார்.
வழிவழியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர் களையும், காலம் காலமாக அத்தனை வாய்ப்பு களையும் தனதாக்கிக் கொண்டவர்களையும் ஒரே அளவுகோல் கொண்டு மதிப்பிட முடியாது என்ற காரணத்தால், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், தலித்துகள், பெண்கள், இஸ்லாமியர், பழங்குடி யினர், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு சமூகப் பாதுகாப்பாக இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மூன்று தலைமுறையாக அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் உயர்ஜாதி குடும்பத்துப் பிள்ளையையும் கிராமத்து வீதிகளில் நடக்கக் கூட உரிமையற்ற வீட்டுப் பெண்பிள்ளையையும் ஒரே அளவுகோலால் அளக்க முடியுமா? என்ற கேள்விக்கு விடைதான் இடஒதுக்கீடு. ஆனால் அதை நாம் அயரும் நேரம் பார்த்து ஒழிப்பதையே கொள்கையாகக் கொண்டது அ.தி.மு.க அரசு.
ஆசிரியர் தகுதித் தேர்வுகளில்
தமிழகத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வுகளில், அரசியல் சாசன உரிமையான இடஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்படாததோடு, அதனைத் தொடர்ந்து நடைபெற்றுள்ள ஏறக்குறைய 19,000 ஆசிரியர் பணி நியமனங்களிலும், அரசு சட்ட விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. முது நிலை ஆசிரியர் பணி நியமனத்திலும், உயர்நீதி மன்ற உத்தரவுக்குப் பிறகும் மீண்டும் மோசடி நடை பெற்றுள்ளது. இதுவரை இந்தியாவிலேயே நடைபெறாத அளவிற்கு, இந்த மோசடிகள் நேர்த்தியாக நடத்தப்பட்டிருக்கின்றன. இதைப் பற்றி விரிவாக விடுதலையில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான கல்வித் தகுதியோடு தொடர் புடைய தேர்வு இது. அதாவது முன்பெல்லாம் பி.எட் பட்டம் அல்லது ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் பெற் றால் போதுமானது, அவரை ஆசிரியராக நியமனம் செய்யலாம். ஆனால், இப்போது இந்தத் தேர்விலும் வெற்றி பெற்றால்தான், ஒருவர் ஆசிரியர் பணி நியமனத்திற்குத் தகுதியுடையவராக முடியும் என்று மத்திய அரசின் கட்டாயக் கல்விச்சட்டம் (2010) அறிவித்துவிட்டது.
கல்லூரி ஆசிரியர்களுக்கான NET மற்றும் SLET தேர்வுகள் எப்படியோ; அப்படித் தான் டி.இ.டி. தேர்வும். இத்தகைய தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், பணிநியமனம் பெறுகிறவரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இவற்றைப் பதிவு செய்துகொள்ளலாம். அதுவும் இவை அரசு சார்ந்த நிறுவனங்களால் வழங்கப்படுபவை. எனவே இட ஒதுக்கீடு என்னும் அரசியல் சாசன அம்சம், இதில் கண்டிப்பாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்.
வகுப்பு வாரி தேர்ச்சி மதிப்பெண்கள் நிர்ணயிக்கவில்லை
இந்த தகுதித் தேர்வை தமிழகத்தில் நடத்திய சுர்ஜித் சௌத்ரி (ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர்) இதற் கான தேர்வு முடிவுகளை வெளியிட்ட போது, வகுப்பு வாரியாக தனித்தனித் தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயிக்கவில்லை.
தமிழகத்தில், கடந்த ஜூலை- 12 (2012) மற்றும் அக்டோபர்- 14 (2012) ல் நடைபெற்ற, இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும் இடஒதுக்கீடு முற்றிலும் வழங்கப்படவில்லை. இந்தியா முழுவதும், மற்ற மாநிலங்களில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு களிலும் கல்லூரி ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் தகுதித் தேர்வுகளிலும் இடஒதுக்கீடு, அவை தொடங்கிய காலம் முதல் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவிகித இடஒதுக்கீட்டு விகிதாச்சாரத்தின்படி, கீழ்க்காணும் வகையில் இடஒதுக்கீடு பின்பற்றப் படுகிறது:
மேற்கண்ட இந்த 69% போக, எஞ்சியிருக்கும் 31ரூ எல்லோருக்கும் பொதுவானதாகும்.
அதாவது இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 69ரூ இடங்கள் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், தாழ்த் தப்பட்டோர், பழங்குடியினர், இஸ்லாமியர் போன்றவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும், மீதம் உள்ள 31ரூ எல்லோருக்கும் பொதுவானது.
இதில் இடம் பெறு வது என்பது மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே. 95ரூ மதிப்பெண் பெறும் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி, தான் பெற்றிருக்கக் கூடிய உயர்ந்த மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த 31% இல் இடம் பெறும் தகுதி பெறுகிறாள். ஆனால் அ.தி.மு.க அரசு நடத்திய தேர்வில் 31% பொதுப் போட்டி இடங்களும் உயர்ஜாதியினருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதன் விளைவாக ஒடுக்கப்பட்டவர்கள், விதவைகள், மாற்றுத்திற னாளிகள் என 50,000க்கும் மேற்பட்டோர் இடஒதுக் கீட்டின்படி தகுதி இருந்தும் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். இவர்களில் 15,000 பேருக்கு அரசு ஆசிரியப் பணி உரிமை (காலியாக இருக்கும் பணி யிடங்கள் ) மறுக்கப்பட்டிருக்கிறது. மேலும் டி.இ.டி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, ஆசிரியர் நிய மனம் குறித்த எந்த ஒரு அரசு உத்தரவோ அல்லது அறிவிப்போ அரசிதழில் வெளியிடப் படாமல் ஏறக்குறைய 21,000 பணியிடங்கள் நிரப்பப்பட் டுள்ளன.
இதனால் ஏறத்தாழ தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆசிரியர் கள் இல்லாமல் திண்டாடும் நிலை உருவாக்கப்பட் டிருக்கிறது. எந்தக் குழந்தைகளின் கல்விக்காக தந்தை பெரியாரும், திராவிட இயக்கங்களும், அறிஞர் அண்ணாவும், அண்ணல் அம்பேத்காரும், தலைவர் கலைஞரும் போராடினார்களோ, வெற்றி பெற்றார் களோ, அந்த வெற்றிப்பாதையில் அம்மாவின் அரசு தடைக்கற்களை சாதுர்யமாக வீசி இருக்கிறது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு(தகுதித் தேர்வு அல்ல) 27.05.2012 அன்று நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் 27.7.2012 அன்று வெளியிடப்பட்டன. இந்தப் பட்டியலில்தான் பொதுப்போட்டியில் வரவேண்டிய உயர் ஜாதியினர் தவிர்த்த பிறரை அவரவர் இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்கு மாற்றியிருந்தார்கள். அதாவது உயர் ஜாதியினரை மட்டும் GT என்று குறிப் பிட்டு, நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் மற்ற வர்களை BC, MBC, SC, ST என்று குறிப்பிட்டிருந் தார்கள். இதன் மூலம் 31% பொதுப்போட்டி இடங்களை மொத்த மாக உயர்ஜாதியினருக்கே ஒதுக்கி விடும் சதி இது.
இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் இந்த முறையானது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழக ஆசிரியர் தேர்வுவாரியத் தலைவர் சுர்ஜித் சௌத்ரி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவால், அண்டை மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து கண்டுபிடிக்கப்பட்ட முறை என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
ஆந்திராவில்
ஆனால், நம் அண்டை மாநிலமான ஆந்திராவில், இதே ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளில், இடஒதுக்கீட்டைப் பின்பற்றி, தகுதி மதிப்பெண் களாக, உயர்சாதியினருக்கு 60% மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50ரூ மதிப்பெண் களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 40% மதிப்பெண் களுமாக வகுப்புவாரியாக நிர்ணயம் செய்திருப்பது, அந்தக் குழுவின் கண்களுக்குத் தெரிய வில்லையா? அல்லது தெரிந்தே தெளிவாக எடுக்கப்பட்ட முடிவா இது?
சட்டமன்றத்திலும், அறிக்கைகளிலும் ஒவ்வொரு வாக்கியத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் ``என் ஆணையின்படி என மிகுந்த தன்னடக்கத்தோடு சொல்லிக்கொள்ளும் முதல்வர், அவரது ஆணை யின்றி ஒரு அணுவும் அசையாத ஆட்சியில் அவருக் குத் தெரியாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இப்படிப்பட்ட துரோகம் இழைக்கப்பட்டிருக்குமா என்பது தெரியவில்லை. இந்தச் சதியை மறைக்க அவர்கள் நடத்தி இருக்கும் நாடகம் சிலாகிக்கப் படவேண்டியது. மிக நுட்பமானது.
பொதுப்பிரிவில் தேர்வில் வெற்றி பெற்ற மாண வர்களை, அதாவது 60 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் வாங்கியவர்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்படுவார்கள். ஆனால் சௌத்ரி அவர்கள் 142 மதிப்பெண்கள் வாங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சித்ரா, 118 மதிப்பெண்கள் வாங்கிய காதர் மீரான் சித்திக் (BCM), 110 மதிப்பெண்கள் வாங்கிய சுரேஷ் (SC) இவர்களை எல்லாம் ஜாதியைக் குறிப் பிட்டு இடஒதுக்கீட்டுப் பட்டியலுக்கு மாற்றியிருக் கிறார். இது வெளியே தெரியாமல் இருக்க தேர்வுப் பட்டியலில் தேர்வு பெற்றவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, வரிசை எண்களையும் ஜாதிப் பிரிவையும் மட்டுமே குறிப்பிட்டு, இடஒதுக்கீடு அடிப்படை யில் தேர்வு பெற்றோர்களின் மொத்தப் பட்டியலை வெளி யிடாமல், அவரவர் தனித்தனியாகத் தெரிந்து கொள்வது போல வெளியிட்டு, எல்லாம் சட்டப்படி நடந்திருப்பது போல் ஒரு மாயையை உருவாக்கி யிருக்கிறார்கள்.
இதைப்பற்றி சட்டம் என்ன சொல்கிறது என்று பார்த்தோமானால்,
``பாலோஜி பதவாத் அண்டு அதர்ஸ் என்ற வழக் கில் நீதிபதிகள் எ.பி. சின்ஹா மற்றும் சிரியக் ஜோசப் வழங்கிய தீர்ப்பில்;
“The reserved category candidates have two options. If they are meritorious enough to compete with the open category candidates, they are recruited in that category. The candidates below them would be considered for appointment in the reserved categories.”
இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வருபவர் களுக்கு இரண்டு வழிகளில் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஒன்று இடஒதுக்கீட்டு முறை மற்றது பொதுப்பட்டியல். இந்த இரண்டு வழிகளில் ஒன்றைத்தான் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் அடைத்திருக்கிறார்கள். இந்தத் தேர்வு வெறும் தகுதி நிர்ணயத் தேர்வுதான், வேலை நியமனத் தேர்வு இல்லை என்று நாம் எளிதாக இதை நினைத்துவிட முடியாது. ஏன் என்றால் ``தகுதி நிர்ண யம் என்று முளையிலேயே நம் வாய்ப்புகளை அழித்து விட்டால் பிறகு வேலை நிர்ணயம் என்ற பயிரைப் பற்றி கவலைப் படத் தேவையில்லை என்ற பெரிய திட்டத் தின் முதற்படியாகவும் இது இருக்கலாம்.
நீதிமன்றத் தீர்ப்பு
இந்த சதியைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்ற வழக்கில், 01.10.2012 இல் நீதியரசர் நாகமுத்து வழங்கிய தீர்ப்பில், ஆசிரியர் தேர்வு வாரியம் இட ஒதுக்கீட்டை முறையாகப் புரிந்துகொள்ளாமல், பின்பற்றாமல் பட்டியல்கள் வெளியிட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். எனவே அந்தப் பட்டியலை ரத்து செய்தார்.
“From the above facts. It is crystal clear that the Teachers Recruitment Board has not understood the method to be followed while making selection as against Open quota, Vertical reservations for Backward Classes, Most Backward Classes, Scheduled Castes, Scheduled Tribes and the Horizontal reservations as laid down in the judgements cited herein before.”(தீர்ப்பின் ஒரு பகுதி)
அ.தி.மு.க ஆட்சி, ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் பொதுப் பிரிவில் மற்ற ஜாதியினர் அதா வது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் இடம் பிடித்துவிடக்கூடாது என்று தன்னு டைய அறிவுத் திறமையைப் பயன்படுத்தி, பொதுப் பிரிவில் மற்ற ஜாதியினர் உள்ளே வராமல் பார்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான இடஒதுக்கீட்டிலும் கைவைத்து, மிகப்பெரிய மோசடி வேலையைச் செய்துள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டு மென்றால், நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாத இடஒதுக்கீட்டு உரிமையில் அம்மையார் ஜெயலலிதாவின் ஆணையின் கீழ் இயங்கும் அரசு தலையிட்டிருக்கிறது.
- நன்றி: முரசொலி, 12.4.2013
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment