- ஈழத்தில் 90 தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்களமயமாக்கப்பட்டு இருக்கின்றன
- ராஜபக்சே இந்தியா வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரல் எப்படி இருக்கும்?
4 ஆம் தேதி டெசோ கூட்டத்தில் முடிவு செய்யப்படும்!
தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி
டில்லியில் பல்வேறு நாட்டுத் தூதர்களைச் சந்தித்து சென்னை திரும்பிய டெசோ அமைப்பு குழுவினர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தளபதி மு.க. ஸ்டாலின், பேரா. சுப. வீரபாண்டியன், டி.ஆர். பாலு எம்.பி., தொல். திருமாவளவன் எம்.பி., ஆகியோர் டெசோ அமைப்பின் தலைவர் கலைஞரை சந்தித்து பொன்னாடை அணிவித்தனர். (சென்னை, 30 .1.2013)
சென்னை, ஜன. 31 - 90 தமிழ் ஊர்களின் பெயர் களை சிங்கள மொழியில் மாற்றம் செய்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரல் - அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை வரும் 4ஆம் தேதி சென்னையில் கூடவிருக்கும் டெசோ அமைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார் -டெசோ தலைவர் கலைஞர் அவர்கள்.
சென்னை, ஜன. 31 - 90 தமிழ் ஊர்களின் பெயர் களை சிங்கள மொழியில் மாற்றம் செய்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரல் - அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை வரும் 4ஆம் தேதி சென்னையில் கூடவிருக்கும் டெசோ அமைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார் -டெசோ தலைவர் கலைஞர் அவர்கள்.
டில்லி சென்று திரும்பிய `டெசோ குழுவினரின் சந்திப் புக்குப் பின் தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி!
புதுடில்லியில் பல்வேறு நாட்டுத் தூதர்களைச் சந்தித்து `டெசோ அமைப்பின் தீர்மா னங்களை வழங்கிவிட்டு சென்னை திரும்பிய தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை யிலான குழுவினர் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை நேற்று (30.1.2013) மாலை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து விளக்கம் அளித்தனர். இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கலைஞர் அவர்கள், டெசோ குழுவினர் டில்லி சென்று குடியரசுத் தலைவர், வெளிநாட்டுத் தூதர் களைச் சந்தித்து ஈழத் தமிழர்களின் துன்ப வாழ்வில் விடியல் காண்பதற்கான கருத்துக்களை - திட் டங்களை விளக்கியுள்ளனர். இதில் அமெரிக்கா முக்கியப் பங்காற்றும், அதற்கு அழுத்தம் கொடுக் கவே தூதர்களைச் சந்தித்துள்ளனர் என்றும் ராஜபக்சே இந்தியா வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரலைக் காட்ட அதன் அணுகுமுறை எப்படி அமைய வேண்டும் என்பதை டெசோ குழு தீர் மானிக்கும். ஈழத் தமிழர்களின் விடிவு காலத்தை விரைவுபடுத்து வதற்கான தொடர் நடவடிக்கைகள் பற்றி வரும் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள `டெசோ இயக்கம் ஆலோசனை செய்து முடிவெடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் செய்தியா ளர்களிடம் கூறியதாவது : -
தி.மு.க. தலைவர் கலைஞர் :- டெசோ வகுத்த திட்டப்படி, இந்த அமைப்பிலே உள்ள குழு வினர் டில்லி சென்று, அங்குள்ள வெளி நாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர்கள் நிலை குறித்த விளக்கங்களையும், அவர்களின் துன்ப வாழ்வு விடியல் காண் பதற்கான கருத்துக்களையும், திட்டங்களையும் டெசோ இயக்கத்தின் சார்பில் விளக்கியிருக்கிறார்கள்.
டில்லி சென்ற இந்தக் குழுவில் தளபதி மு.க. ஸ்டாலின், தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கழகத் தலைவர் தொல். திருமா வளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன், திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற தி.மு. கழகக் குழுவின் தலைவருமான டி.ஆர். பாலு ஆகியோர் சென்று திரும்பியுள்ளார்கள். இவர்கள் மான்டி நீக்ரோ, யு.எஸ்.ஏ., ரஷ்யா, இத்தாலி, மலேசியா, எஸ்டோனியா ஆகிய நாடுகளின் தூது வர்களைச் சந்தித்து டெசோ இயக்கத்தின் தீர்மானங் களையும் கருத்துக்களையும், ஈழத் தமிழர்களின் விடிவுகாலத்தை விரைவுபடுத்து வதற்கான முயற்சி களில் குறிப்பிடப்பட்ட இந்த நாடுகளும் உதவிக் கரம் நீட்ட வேண்டுமென்று கேட்டுக் கொண்டி ருக்கிறார்கள். சென்று திரும்பியுள்ள குழுவினர் வருகிற 4ஆம் தேதி நடைபெறவுள்ள டெசோ இயக்கத்தின் கூட்டத்தில் இவற்றை விளக்கி தொடர் நடவடிக் கைகள் பற்றி டெசோ இயக்கம் முடிவெடுத்து அறிவிக்கும்.
நான் குறிப்பிட்ட மற்ற நாடுகளின் தூதுவர்கள் அன்னியில், இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அவர்களையும் சந்தித்து, அவருடைய ஆதரவையும் கோரியுள்ளார்கள்.
விஸ்வரூபம் படப் பிரச்சினை:
விஸ்வரூபம் படப் பிரச்சினை:
விளக்கமளித்து நீண்ட கட்டுரை!
செய்தியாளர் :- விஸ்வரூபம் படப் பிரச் சினையால் கமல்ஹாசன் இந்தியாவை விட்டே வெளியேறப் போவதாகச் சொல்லியிருக்கிறாரே?
கலைஞர் :- நான் இதைப் பற்றி முரசொலியில் நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன். அதைப் படித்தால் விளக்கம் பெறலாம்.
செய்தியாளர் :- காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டு மென்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால் அதைப் பற்றி எந்தவித மான எதிர்ப்பும் பெரிதாக இல்லாமல் வேறு விஷயங்களில் அரசின் கவனம் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?
கலைஞர் :- உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் எல் லாம், அதனுடைய விளைவுகளைப் பற்றித் தான் சொல்ல முடியுமே தவிர, நீதிமன்றத்தின் தீர்ப்பு களைப் பற்றி விமர் சிக்க இயலாது, கூடவும் கூடாது.
செய்தியாளர் :- கடந்த அய்.நா. மன்றத்தில் இலங்கை பற்றி இயற்றப்பட்ட தீர்மானத்திற் கும், வரும் மார்ச் மாதத்தில் மனித உரிமை ஆணையத்தில் எந்த விதமான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று டெசோ மூலம் வலியுறுத் தப்படுமா?
கலைஞர் :- அதைப் பற்றியெல்லாம் 4ஆம் தேதிக்குப் பிறகு சொல்கிறோம்.
செய்தியாளர் :- அமெரிக்க நாட்டுத் தூதரைச் சந்தித்தபோது, டெசோ குழுவினருக்கு எந்த மாதிரியான வரவேற்பு இருந்தது?
கலைஞர் :- அமெரிக்கா முக்கியப் பங்காற் றும் என்று எதிர்பார்க்கிறோம், நம்புகிறோம். அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காகத்தான் இப்போது தூதுவரைச் சந்தித்திருக்கிறோம்.
செய்தியாளர் :- மத்திய அரசு பத்ம விருதுகளை அளிப்பதில் தென்னகம் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. பாடகி ஜானகி அம்மையார் அந்த விருதையே மறுத்திருக்கிறாரே?
கலைஞர் :- அந்த விவரங்கள் எனக்குத் தெரி யாது. அந்த விருதைப் புறக்கணித்த இசையரசி ஜானகி அம்மையாரிடம்தான் முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
செய்தியாளர் :- அந்த அம்மையார் தெரிவித்த; தாமதமாக இந்த விருது கிடைத் திருக்கிறது என்ற கருத்துடன் நீங்கள் உடன்படுகிறீர்களா?
கலைஞர் :- நான் அதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் செய்தி யாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
இந்நிகழ்வின்போது திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தி.மு.க. நாடா ளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன் சுகவனம் மற்றும் தி.மு.க. சென்னை மாவட்டச் செய லாளர் ஜெ. அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.
ராஜபக்சே வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரல் எப்படி இருக்கும்?
ராஜபக்சே வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரல் எப்படி இருக்கும்?
செய்தியாளர் :- கடுமையான எவ்வளவோ எதிர்ப்புகளையும் மீறி ராஜபட்சே இந்தியாவிற்கு வரப்போவதாகத் திட்டமிட்டிருக்கிறார். அப்போது டெசோ இயக்கம் என்ன செய்யும்?
கலைஞர் :- இப்போது தமிழீழத்தில் தமிழ் மொழி, பண்பாடு - இவற்றையெல்லாம் அறவே ஒழிப்பதற்கு சிங்கள அரசு திட்டமிட்டு, அதற்கு அடையாளமாக இதுவரையிலே ஏறத்தாழ 90 ஊர்களின் தமிழ்ப் பெயர்களை, சிங்களப் பெயர்களாக மாற்றியிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களை ஏற்கெனவே கொன்று குவித் ததற்கு ஈடான செயலாகவே இந்தப் பெயர் மாற்றங்களை நாங்கள் கருதுகிறோம். எனவே எங்கள் எதிர்ப்புக் குரலைக் காட்ட ராஜபட்சே வரும்போது எங்கள் அணுகுமுறை எப்படி அமைய வேண்டும் என்பதை டெசோ குழு தீர்மானிக்கும்.
செய்தியாளர் :- மொத்தம் 47 நாடுகளின் தூதுவர்களைச் சந்திக்கப் போவதாகச் சொல்லப்பட்டது. மீதமுள்ள நாடுகளின் தூதுவர்களையும் சந்திக்கும் திட்டம் இருக்கிறதா?
கலைஞர்:- முதற்கட்டமாக தற்போது இந்த நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்திருக்கிறார்கள். அதற்கடுத்த கட்டங்களில் மற்ற நாடுகளின் தூதுவர்களையும் இந்தக் குழுவிலே உள்ளவர்கள் சந்திப்பார்கள்.
செய்தியாளர்:- புதிய தலைமைச் செயலகத்தில் அவசரமாக இன்றைய தினம் மருத்துவமனையைத் தொடங்கியிருக்கிறார்களே?
கலைஞர்:- தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற இதுபோன்ற காரியங்களைப்பற்றி, நான் என்ன சொல்ல முடியும்?
No comments:
Post a Comment