இன்றைய தினமலரில் இப்படியொரு தலைப்பு கொடுத்து மானமிகு கலைஞர் அவர்களை வசை பாடித் தீர்த்திருக்கிறது.
இந்தியை யாரும் படிக்க வேண்டாம் என்று எந்தத் தலைவரும் சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால் சென்னையில் இந்தி பிரச்சார சபை இருந் திருக்குமா?
கட்டாயமாக்கக் கூடாது என்பதுதான் திராவிடர் இயக்கத்தின் நிலைப் பாடு - அரைவேக்காடுத் தனமாக எழுதலாமா?
கலைஞருக்குத் திறந்த மடல் எழுதலாம். அந்த யோக்கியதை இருக் கிறதோ இல்லையோ யாரும் எழுதலாம்தான். பைத்தியக்காரன் ஒருவன்கூட கிறுக்க உரிமை உண்டுதான் அதில் உள்நோக்கம் இல் லாமல் எழுத வேண்டும் என்பது அடிப்படை அறிவு நாணயம்.
சமர்ச்சீர் கல்வி தர மற்றதாம். அதனை எல் லோரையும் படிக்க வைத்து நல்ல அம்சங் களையும் கெடுத்துக் குட் டிச் சுவர் ஆக்கிவிட்டா ராம் கலைஞர்.
சமச்சீர் கல்வி ஏதோ கலைஞராகப் பார்த்து முடிவு செய்ததல்ல; கல்வி யாளர்களின் கருத்துக் களையெல்லாம் கேட்டு, அதன் அடிப்படையில் தான் பாடங்கள் தயார் செய்யப்பட்டன.
இந்தச் சிண்டர் களுக்குக் கோபம் ஏன் தெரியுமா? எல்லாருக்கும் சமமான கல்வி திட் டத்தை அளித்ததுதான்.
எல்லாரும் சமம் என் பதை ஏற்றுக் கொள்ளாத கூட்டம் அல்லவா? அத னால்தான் எல்லார்க்கும் சமமான கல்வியைக் கொடுத்தால் குமட்டிக் கொண்டு வருகிறது அவாளுக்கு! இப்படி எல்லாம் மானமிகு கலைஞர்மீது மானாவாரியாக புழுதி வாரி தூற்றும் இந்த நடு நிலையாளர்கள் கொலைக் குற்றத்தைத் தலையில் சுமந்து இன் னும் காஞ்சி மடத்தின் அதிபராக, சங்கராச்சாரி யாராக லோகக் குருவாக திரிந்து கொண்டு இருக்கிறாரே ஒரு காம - கோடி - அதை பற்றி ஒரே ஒரு வரி எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
திராவிடர் இயக்கம் என்ற போர்வையிலே அண்ணா பெயரையும் இணைத்துக் கொண்டு சொர்க்கவாசல் சென்று வரும், அம்மையாரைப் பற்றி வீசம் வரி எழுதச் சொல்லுங்கள் பார்க்க லாம். (சொர்க்கவாசல் என்று அண்ணா எழுதி யது படமாகக் கூட வந்துள்ளது).
தினமலரில் எழுதி யவர் முன்னாள் காவல் துறை அதிகாரியாம். அப்படியென்றால் காவல் துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்தபோது எவ்வளவுப் பூணூல் தன மெல்லாம் செய்திருப்பார் நினைத்துப் பாருங்கள்!
- மயிலாடன்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
1 comment:
மானமிகு கலைஞரின் மனைவி தயாளு அம்மையார் முதல் தளபதியின் மனைவி துர்கா வரை கோவில்களிலேயே தவம் கிடப்பது பற்றி உமது கருத்து ..? தயவு செய்து பதிலளிக்கவும். நானும் சுயமரியாதைக்காரன் தான் , எனது ஊரில் இதுவரை சுயமரியாதை திருமணங்கள் மட்டுமே நடந்துள்ளன . நாங்கள் செய்வது முட்டாள்தனமோ என்று கூட சில சமயங்களில் தோன்றுவதுண்டு !!. ஏனெனில் கலைஞர் வீட்டில் உள்ளவர்களை விடவா நமக்கு பகுத்தறிவு மிகுதி ? அவர்கள் அர்த்தமில்லாமல் இதை செய்வார்களா..?
Post a Comment