பேனா இல்லை!
புயல்
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக -தேவை யான நிவாரணப் பணிகளைச்
செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை - மற்றும் வழிகாட்டும்
கருத்துக்களைக் கூற வந்த திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்
நடைமுறைக் கண்ணோட்டத் தோடு சிலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
பணிகளைச்
செய்யாமல் இருப் பதற்குச் சாக்குப் போக்குகள் சொல்லக் கூடாது; பேனா இல்லை,
பேப்பர் இல்லை என்றெல்லாம் கதையளக்கக் கூடாது என்று கூறிய ஆட்சியர், எந்த
நேரத்திலும் கைப் பேசியை அணைத்து வைக்கவும் கூடாது என்றும் உத்தர விட்டுள்
ளார்.
பரவாயில்லை; அடி மட்டத்தி லிருந்து பணியாற்றி வந்திருப்பாரோ - அரசு அதிகாரிகளை இந்த அளவுக்குப் புரிந்து வைத்துள்ளாரே!
#####
இல்லை... இல்லை...
இந்த
ஆட்சியில் அடிக்கடி உணரக் கூடிய ஒன்று உண்டு என்றால், அது இல்லை இல்லை
என்கிற பாடம்தான்.. மாமல்லபுரம் சதுரங்கப்பட்டினத்தில் நேற்று காலை முதல்
மின்சாரம் கிடையாதாம். வேறு வழியில்லாமல் மக்கள் சாலை மறியலில்
ஈடுபட்டுள்ளனர். கேட்டால் முதல்வர் சொல்கிறார். மின்சாரத்தைப் பற்றிக்
கவலைப் படுகிறவர்களைவிட லட்சம் மடங்கு கூடுதலாக முதல் அமைச்சர்
கவலைப்படுகிறாராம். பொது மக்கள் கவலைப்படலாம்; ஆட்சியில் உள்ள வர்களும்
அதேபோல சொல்லி விட் டால் போதுமா? கவலையோடு காரியத்தைச் செய்து காட்ட வேண்
டாமா?
#####
தினமலர்
யாரைப்
பற்றிப் பேசினாலும், எழுதினாலும் தினமலருக்கு அவ்வளவு கோபம் வராது; ஆனால்
பிஜேபியைப் பற்றி ஏதாவது சொல்லி விட்டால் போதும்; அக்கணமே மூக்கைப்
பொத்துக் கொண்டு சுருக்கென்று கோபம் வெடித்துக் கிளம்பி விடும்.
பி.ஜே.பி.
ஒன்றும் ஊழலுக்கு எதிரான கட்சியல்ல; எங்களை எதிர்ப்பதற்கு ஊழலைக்
கருவியாகப் பயன்படுத்துகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா சொல்லி
விட்டாராம். விட்டேனா பார் என்று வில்லெடுத்துப் புறப்பட்டு விட்டது
வேதியமலர்.
காங்கிரசும்,
ஊழலும் பிரிக்க முடியாத ஒட்டிப் பிறந்த இரட்டை யர்களாக ஆகி விட்டதால்
உங்களை எதிர்க்கிறதும், ஊழலை எதிர்க் கிறதும் ஒண்ணுதான்!னு பா.ஜ.க.
நினைச்சிருக்கலாம் என்கிறது தினமலர்.
அதுசரி,
பி.ஜே.பி. ஒன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியில் லேன்னு சோனியா
சொல்லியிருக் கிறாரே - அதற்கு ஏன் மறுப்புக் கூற முடியவில்லை தினமலரால்!
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? பி.ஜே.பி.யை ஊழல் குட்டையிலிருந்து கரையேற்ற முடியாதே!
எடியூரப்பா
இருக்கட்டும்; பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் நிதினே நிலை குலைந்து
போய் விட்டாரே, ஊழலில் சிக்கிய பி.ஜே.பி. தலைவர் குஜராத் தேர்தல்
பிரச்சாரத்துக்கு வரக்கூடாது என்று தடை உத்தரவு போடப்பட்டுள்ளதே.
ஆற்றுமணல்
அள்ளுவதில் முறை கேடாக நடந்து கொண்டதாக டவுட் தனபாலே சிக்கியிருக்கிறதே -
இந்த லட்சணத்தில் அடுத்தவர்கள் மீது ஊழல் புகாரரா?
#####
மம்...தா!
மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பேனர்ஜி அதிரடி அரசியல்காரர் என்று பெயரெடுத் தவர். அது எப்படியோ போகட்டும்.
கொல்கத்தாவில்
காளி துர்கா பூஜை விசேடம்! அரசு ஊழியர் களுக்குப் பண்டிகைப் பணம்கூட
இந்தக் காளி பூஜை விழாவுக்குத் தான். இதில் இடதுசாரிகளும் விதிவிலக்கல்ல. 6
நாட்கள் விடுமுறையை நான்கு நாட்களாகக் குறைத்ததுதான் முதல் அமைச்சர்
புத்ததேவ் பட்டாச்சார்யா செய்த ஒரு நல்ல காரியம்.
விடுவாரா மம்தா? இடது சாரி என்று நினைத்தாலே நெருப்பில் விழுந்ததுபோல துடி துடிப்பாரே!
அவர்கள்
என்ன நான்கு நாட்களாகக் குறைப்பது! நான் உத்தரவிடுகிறேன். அரசு ஊழியர்களே
துர்கா பூஜைக்காக உங்களுக்கு 10 நாட்கள் அரசு விடுமுறை என்று வரம்
தந்துள்ளார்.
10
நாட்கள் அரசு விடு முறை என்றால், அம்மாநிலத்தில் அரசு என்ற ஒன்றே இல்லை -
அரசு ஊழியர்களுக்கு அல்ல -அரசுக்கே விடுமுறை (ளுரளயீநளேடி) என்று
பொருளாகாதா? பொருளாதாரப் பிரச்சினையி லிருந்து சட்டம் - ஒழுங்குப் பிரச்
சினை வெடித்துக் கிளம்பாதா?
இதில்
ஒரு வேடிக்கை என்ன வென்றால், அரசு ஊழியர்கள் அங்கு என்ன சொல்லுகிறார்கள்
தெரியுமா? எங்களுக்குப் பத்து நாட்கள் விடுமுறை எல்லாம் வேண்டாம்.
எங்களுக்கு அளிக்கப் படாமல் நிலுவையில் உள்ள அகவிலைப் படியை கொடுத்தால்
போதும் (மம்...தா!) என்று கொடி பிடிக்கின் றனர். அதனைத் திசை திருப்ப தானே
இந்த வேலை என்பது அரசு ஊழியர்கள் தெரிந்து கொள் ளட்டும்.
@@@@
ஹெல்மட்...டு
ஹெல்மட்
அணிந்தவர்களுக்குத் தான் பெட்ரோல் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேசத்தில்
அரசு உத்தரவிட்டுள்ளது. சபாஷ், சரியான ஆணை. நாடு தழுவிய அளவில் இப்படி ஒரு
சட்டம் வந்தால் கூட வரவேற்கத்தக்கதுதான்.
ஏதோ
யாருக்காகவோ ஹெல்மட் அணிவதாக இரு சக்கர வாகனக்காரர்கள் நினைக்கிறார் களே
தவிர தங்கள் உயிர் பாது காப்புக்காகத்தான் என்பதை மறந்து விடுகிறார்களே -
அதுதான் பரிதாபம்.
அதுசரி, அப்படி எல்லாம் சரியாக உணர்ந்து கொள்வார்கள் என்றால் நாட்டில் சட்டம் எதற்கு? ஆட்சி முறைதான் எதற்கு?
No comments:
Post a Comment