உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த ஆணையின் சுருக்கம்
சிறீரங்கத்தில்
நவம்பர் 4ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்தவிருந்த பொதுக் கூட்டத்திற்குக்
காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திருச்சி
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எம்.சேகர் தொடுத்த வழக்கின்மீது மாண்பமை
நீதியரசர் திரு. ஆர். சுதாகர் பிறப்பித்த ஆணையின் சுருக்கம் வருமாறு:
இந்திய
அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 19(1)(ய) -படி மனுதாரருக்குரிய
பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், மாற்று
இடத்தில் பொதுக் கூட்டம் நடத்த இசைவளிக்க காவல்துறை தயாராக உள்ளதாகக்
கூறப்பட்டது.
மனுதாரரின்
சார்பாக வழக்காடிய திரு. வீரசேகரன், கழகத் தலைவர் கி.வீரமணி, பாப்பா நாடு
எஸ்.பி. பாஸ்கர் உட்பட சேகரைத் தவிர்த்து நான்கு பேர் கூட்டத்தில்
பங்கெடுப்பதாகவும், யாரையும், தனிப்பட்ட முறையிலோ, மற்ற வழியிலோ, தாக்கிப்
பேச மாட்டார்கள்;
அதனால் சமூக அமைதி பாதிக்கப்பட மாட்டாது என்பதற்கும்
தான் உறுதியளிப்பதாகக் கூறினார். அது பதிவு செய்யப்பட்டது.
மேலும் பொதுக்
கூட்டம் நடத்துவ தற்கு மூன்று இடங்களைத்தான் கூறுவதாகச் சொல்லி 1) உழவர்
சந்தை, 2) சந்தனகிரி, 3) மற்றும் திருவானைக்காவல் ஆகிய இடங்களைச் சொன்னார்.
மேலிட உயர் அலுவலர்களுடன் ஆலோசனை செய்த பிறகு, திராவிடர் கழகத்திற்கு
4.11.2012 அன்று பொதுக்கூட்டம் நடத்த திருவானைக்கோவில் திடலைப் பயன்படுத்த
அனுமதி அளித்தனர்.
No comments:
Post a Comment