ஊழல், ஊழல் என்று ஊளையிட்டவர்கள்மீதே ஊழல் புகார்
பா.ஜ.க., தலைவர் நிதின்கட்காரி மீதான ஊழல் விசாரணை இறுகுகிறது
மும்பை, அக்.26- பா.ஜ. கட்சி ஒரு வித்தியாசமான கட்சி என்று கூறிக் கொள்ளும் அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட் காரிமீது ஏற்கெனவே பல ஏக்கர் விவசாய நிலங்களை அபகரித்த தாக எழுந்த புகாரை அடுத்து தற்போது அவருக்கு சொந்தமான மின் மற்றும் சர்க்கரை ஆலை நிறுவனத்திற்கு வந்த நிதிகள் மற்றும் அந்த நிறுவனத்தில் முத லீடு செய்த நிறுவனங் கள் குறித்து வருமான வரித்துறையினர் விசா ரணையை துவக்கியுள் ளனர்.
பாரதிய ஜனதா கட்சி யின் தேசிய தலைவர், நிதின் கட்காரி. மகா ராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர், அம் மாநில முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான, அஜித் பவாருடன் சேர்ந்து, பல ஏக்கர் விவ சாய நிலங்களை அப கரித்ததாக, சமூக ஆர் வலர் அரவிந்த் கெஜ்ரி வால் புகார் தெரிவித்தார்.
இந்த விவகாரம், பெரிய அளவில், சர்ச் சையை ஏற்படுத்திய நிலையில், கட்காரிக்கு எதிராக, பத்திரிகை களில், மற்றொரு ஊழல் புகார் தெரிவிக்கப்பட் டது.
அதில், நிதின் கட் காரிக்கு சொந்தமான, புர்டி மின் மற்றும் சர்க்கரை ஆலை நிறு வனத்தில், அய்டியல் ரோடு பில்டர்ஸ் குரூப் நிறுவனம், ஏராளமான அளவில் முதலீடு செய் துள்ளதோடு, நிறைய கடனும் கொடுத்து உள்ளது' என, தெரிவிக் கப்பட்டது. மகாராஷ் டிராவில், பா.ஜ., தலைமையிலான ஆட்சி, 1995 முதல் 1999 வரை பதவி வகித்த போது, பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தவர், நிதின் கட்காரி.அவரின் பதவிக் காலத்தில், ஏராளமான கான்ட் ராக்ட்களை, அய்டியல் ரோடு பில்டர்ஸ் நிறுவ னம் பெற்றது. அதற்குப் பிரதிபலனாகவே, கட் காரியின் நிறுவனத்தில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. போலி பெயரில் முதலீடு அத்துடன் வேறு பல நிறுவனங்களும், போலி பெயரில், கட்காரி நிறு வனத்தில், பெருமளவு முதலீடு செய்துள்ளன என்றும், பத்திரிகை செய் தியில் கூறப்பட்டது.
வருமான வரித்துறை விசாரணை
இந்தக் குற்றச்சாற்றுக் களை, கட்காரி மறுத் துள்ளார். அதேநேரத் தில், இந்தக் குற்றச் சாற்றுக்கள் தொடர் பாக, "கம்பெனிகள் விவகாரத் துறை விசா ரணை நடத்தும்' என, மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச் சர், வீரப்ப மொய்லி கூறினார்.அதன்படி, விசாரணையை துவங்கி யுள்ளதாக, கம்பெனிகள் விவகாரத் துறை உயர் அதிகாரி ஒருவர், நேற்று (25.10.2012) தெரிவித்தார். இந்நிலையில், நிதின் கட்காரிக்கு சொந்த மான, புர்டி மின் மற்றும் சர்க்கரை ஆலை நிறு வனத்திற்கு, வந்த நிதிகள் மற்றும் அந்த நிறு வனத்தில், முதலீடு செய்த நிறுவனங்கள் குறித்த விசாரணையை, வருமான வரித் துறை யினர் துவக்கியுள்ளனர். இதுதொடர்பாக, வரு மான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறி யதாவது: புர்டி மின் மற்றும் சர்க்கரை ஆலை நிறுவனத்திற்கு வந்த நிதி ஆதாரங்கள் மற்றும் அந்த நிறுவனத்தில், முதலீடு செய்த, 18 கம்பெனிகள் குறித்து விசாரணையை துவக்கி யுள்ளோம். பல போலி நிறுவனங்கள் பெயரில், புர்டியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது, மேலோட்டமாக நடந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.புர்டி நிறுவனத்தில் முதலீடு செய்த நிறுவனங்கள் தொடர்பான ஆவணங் களை திரட்டும் பணி யில், மும்பை மற்றும் புனே வருமான வரித் துறை அதிகாரிகள் ஈடு பட்டுள்ளனர். முதலீடு செய்த நிறுவனங்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவோம்; தேவைப் பட்டால், கட்காரியை யும் அழைத்து விசாரிப் போம். விசாரணை முடிந்த பின், மத்திய நேர்முக வரிகள் வாரியத் தில், அறிக்கை சமர்ப் பிக்கப்படும். இவ்வாறு வருமான வரித் துறை உயர் அதிகாரி கூறினார்.
பயணம் ரத்து
இதற்கிடையில், நிதின் கட்காரி நேற்று தன் டில்லி பயணத்தை ரத்து செய்தார். "கட் காரிக்கு உடல் நிலை சரியில்லாததால், அவர் தன் டில்லி பயணத்தை ரத்து செய்துள்ளார்' என, அவரது தனி உதவி யாளர் கூறினார். ஆனால், ஊழல் புகாரால் எழுந்த பரபரப்பு காரண மாகவே, கட்காரி, தன் டில்லி பயணத்தை ரத்து செய்துள்ளதாக, பா.ஜ., வட்டாரங்கள் கூறின.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா திடீர் பதவி விலகல்
- ஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் சாவு
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் டெங்கு காய்ச்சல் பரவியது: பொதுசுகாதாரத்துறை தகவல்
- தவறிய அழைப்பு கொடுங்கள் Missed Call: Demand Justice in Sri Lanka
- சீருடை பணியாளர்களுக்கு அடுக்குமாடி வீடுகள்: ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்
- சென்னை காவல்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
- அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா நாளை வாக்களிக்கிறார்
No comments:
Post a Comment