Sunday, September 9, 2012

அந்தமான் வாழ் தமிழர் நிலை


பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன்பு சென்ற தமிழர்கள் பொதுவாக வணிகம் செய்வதற்காக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பீஜித்தீவு, மொரிசியஸ், தாய்லாந்து, இந்தோ சீனா, பர்மா ஆகிய நாடுகளில் குடியேறி யுள்ளனர். பிறகு ஆங்கிலேயர்கள் வசம், இந்த தீவுகள் இருந்த காரணத்தால் உலகம் போற்றும் தேயிலை, காப்பி, ரப்பர் மற்றும் வாசனைப் பொருள்கள் பயிர் செய்ய இந்தியர்களைக் குறிப்பாக தாய்த் தமிழகத்திலிருந்தும் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஆவர். இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு இலங்கை வடக்கு, கிழக்குப் பகுதியில் பூர்வீகமாகக் குடியேறியவர்களைதவிர, மற்றவர்கள் 18,19,20ஆம் நூற்றாண்டில் குடிபெயர்ந்தவர்கள்தான். இதுபோலவே அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் மக்கள் குடியேற்றப்பட்டு தற்போது சிற்பபாக  வாழ்ந்து வருகின்றனர்.
உலகபந்தில் அந்தமான், நிக்கோபர் தீவுகளின் அமைப்பு:
அந்தமான் நிக்கோபர் தீவுகள் வங்கக்கடலில் தெற்கு வடக்காக 700 கி.மீ. நீளமும், கிழக்கு மேற்காக சராசரி 250 கி.மீ. அகலத்திலும் அமைந்துள்ளது. தீவுகள் பெரிய மற்றும் சிறிய அளவிலும், குன்றுகள், திட்டுகள் என 572 உள்ளடக்கியதாகும். இதல் 38 தீவு களில் மட்டும் மனிதர்கள் குடியிருந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த தீவுகளில் தட்பவெப்பநிலை தமிழகத்தை போலவே இருந்தாலும் ஆண்டு முழுவதும் ஈரக்காற்று வீசுவ துடன் மழை பொழிவும் மிக அதிகம். ஆண்டுக்கு 3180 செ.மீ. மழை பெய்வதால் வளமான காடுகள் நிறைந்த தீவுகள் ஆகும். விண்ணைத் தொடும் அடர்ந்த காடுகள், விதவிதமான 1000 ஆண்டு வயது மரங்கள், பல வகை மூலிகைகள் உடைய கண்கவர் நிறைந்த பகுதி ஆகும். எங்கு பார்த்தாலும் தீவைச்சுற்றி கருநீல கடற்பரப்பு, அலைமோதும் கடலோரம், சூரிய ஒளிக்குளியலுக்கு அயல்நாட்டி னரையும் கவர்ந்துள்ள கடற்கரை, துள்ளி விளையாடும் புள்ளிமான்கள், அடர்ந்த தென்னந்தோப்பு, துள்ளி விளையாடும் மீன்கள், அரிதான பறவைக் கூட்டம், டால்பின் போன்ற மீன்கள் இந்த தீவை அழகுபடுத்தி யுள்ளன.
இந்தியர்கள் குடியேற்றம்:
ஒரு காலத்தில் அந்தமான் என் றாலே குற்றவாளிகளின் குடியிருப்பு என்பதாக இருந்தது. ஆங்கிலேயர்கள் கல்கத்தா வில்லியம் கோட்டை ஆட்சிமன்ற உறுப்பினர்கள் அந்த மானில் குடியிருப்பு அமைக்க முடிவு செய்து ஆர்க்கிபால்டுபிளேயர் தலை மையில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் இருந்துபோது 1857ஆம் ஆண்டு வங்கத்தில் ஏற்பட்ட சிப்பாய் கலகத்தின் காரணமாக கலகக்காரர் களை அந்தமானுக்கு நாடு கடத்த முடிவு செய்து 1858-_இல் மார்ச்சு 10-இல் 500 பேர்களும் பிறகு 733 குற்றவாளி களும் 25 பேர்கள் தம் குடும்பத்துடனும் குற்ற குடியிருப்பு என்ற திட்டத்தின் கீழ் இந்த தீவில் வாழத் தொடங்கினர்.
1866இல் வேதப்பன் சாலமன் என்ற பாதிரியார் என்ற தமிழர்தான் பள்ளி துவங்கி கல்விஅறிவு கொடுத்து உயர் கல்விக்கு இரங்கூனுக்கு அனுப்பியும் வைத்துள்ளார்.
அதிகப்படியான வடஇந்தியர்களையே பீனல் செட்டில்மெண்ட் எனும் திட்டத்தின்கீழ் குற்றவாளிகளும், அவர்களின் குடும்பத்தினர்களையும் அந்தமானுக்குக் கொண்டு வந்தனர். சுமார் 1000 பேர்வரை தனிமைச் சிறையில் அடைத்து வைத்தும், அந்தத் தீவை மேம்படுத்த, சாலைபோட, வனத்தை மேம்படுத்த, கல்உடைக்க, பயிரிட, நிலத்தைப் பண்படுத்த, மரங்களை வெட்டி பயன்படுத்த போன்ற காரியங்களுக்காக இவர்களை பயன்படுத்தி வேலை செய்யாதவர்களை சவுக்கடி கொடுத்து கொடுமைப்படுத்திய நினைவுச் சின்னமாக தற்பொழுது இந்திய தொல்பொருள் இலாக்காவின் வசம் உள்ள அந்தமான் தனிமை சிறைச் சாலையாகும். 1906ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட தனிமை சிறைச்சாலை யில் சுதந்திர போராட்டத்தை ஒடுக்க எடுக்கப்பட்ட முயற்சியில் அந்தமான் சிறையில் அடைத்தனர். மொத்தம் ஏழு வரிசையாக, மூன்று அடுக்காக மய்யத்தில் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு சுற்றுலாச் செல்பவர் களை வியப்பிற்கும், சோகத்திற்கும் ஆட்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இரவில் தினம் மாலை 6 மணிக்கு இந்தியிலும், 7 மணிக்கு ஆங்கிலத்திலும் காட்டப்படும் ஒலி, ஒளி காட்சியின் மூலம் இதன் துயர சரித்திரம் அறிய முடிகிறது.
1942இல் அந்தமான் தீவு இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர் வசம் வந்த காரணத்தினால் இந்தியர் கள், குறிப்பாக சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களை எதிர்க்க படை தயார் செய்யும் தளமாக மாறியது. ஆனால் 1945இல் மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்து இந்தியச் சுதந்திரத்திற்கு பிறகு மூன்றாவது முறை இந்தியப் பூமியாக மாற்றப்பட்டது. அதன்பிறகுதான் தமிழ்நாட்டிலிருந்து தொடர்ந்து அந்த தீவுகளில் குடியேறத் துவங்கியுள்ளனர்.
1921-ல் கேரளாவில் மலபார் பகுதியில் நடைபெற்ற மாப்ளாக் கிளர்ச்சியாளர் களைக் கைது செய்து தைரியமாக இருந்த 1400 குடும்பத்தினர் குடிய மர்த்தப்பட்டு விடுதலைக்கு பிறகு நிரந்தர குடிமக்களாக ஆகியுள்ளனர். அடர்ந்த காடுகளை அழிப்பதற்காக பர்மாவிலிருந்து கரேன் எனப்படும் மொழி பேசுவோர் இங்கு வந்தவர்கள் விவசாயிகளாக நிரந்தரமாகக் குடி யிருந்து வருகின்றனர். பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கைதிகள் 1966இல் அந்த அரசால் அழைத்து போனவர்கள் போக எஞ்சியுள்ளவர்கள் பொங்கிசாங் பகுதியில் உள்ளனர். வடஇந்தியாவில் கொள்ளையர்களாக இருந்த பண்டுக்கள் 1926இல் தீவுக்குக் கொண்டு வந்து தென் அந்தமானில் குடியமர்த் தப்பட்டனர். பீகார் மாநிலம் ராஞ்சி, சோட்டாநாகபுரி பகுதியிலிருந்து காடுகளில் வேலை செய்ய கொண்டு வரப்பட்டவர்கள் பழங்குடியினர் ஆவர்.
விடுதலைக்குப் பிறகு ராஞ்சி மக்கள் முன்னாள் ராணுவத்தினர்கள் தொழில் செய்து முன்னேற வாய்ப்பாக, இங்கு வந்துள்ளனர். வறுமை காரணமாக, வறட்சி காரணமாக வேலை தேடி ராம நாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் மற்றும் வட ஆர்க்காடு போன்ற தென் மாவட் டங்களிலிருந்து குடியேறிய தமிழர்கள் போர்ட்பிளேயர் பகுதியிலே அதிகம் உள்ளனர். வங்கதேசப் பிரிவினை காரணமாக பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் குடியமர்த்தப்பட்ட வங்காளியர் வடக்கு அந்தமான், மத்திய மற்றும் சிறிய அந்தமான் பகுதியில் வாழ்கின்றனர்.
நிக்கோபார் தீவுகளில் மங்கோலிஸ்டு இன பழங்குடியினர் மங்கோலிஸ்டு என்றும், நிக்கோபாரிகள் என்றும், திராவிட இன பழங்குடியினர் சோம்பன் என்றும் அழைக்கப்படுகின்றனர். நிக்போபாரி மக்கள் கிருத்துவச் சமயப் பிரச்சாரத்தால் கல்வி கற்று பொரு ளாதாரத்திலும், நாகரிகத்திலும் மேம்பட்டுள்ளனர். கப்பல், விமானம் என போக்குவரத்து இருப்பதாலும், பொதுப்பணித்துறையிலும் தனியார் துறையிலும் தொழிலாளராகவும் வியாபாரம், கடைகள் இருப்பதால் போர்ட்பிளேயர் பகுதியில் தமிழர்கள் அதிகம் உள்ளனர்.
அந்தமான் வாழ் தமிழர் நிலை
தற்பொழுது கணக்குப்படி 1,05,000 தமிழர்கள் வாழ்கின்றனர். பல மொழிகள் பேசும் மக்கள் இருந்தாலும் இந்திதான் பிராதானமாக பேசுவது, பள்ளியில் பாட மொழியாகவும் இருந்து வந்துள்ளது. தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் குடும்பத் துடன் அரசு வேலை நிமித்தம் சென்ற வர்களின் பிள்ளைகள் கல்விகற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது பல இன்னல்களை அனுபவிக்க நேர்ந் தது. எனவே தான் போர்ட்பிளேயரில் 1952ல் தமிழர்கள் நலனுக்காக தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு இன்றும் சிறப்பாக செயல்படுகிறது.
தமிழ்மொழி கல்வி நிலையங்கள்:
தமிழ், மலையாளம், வங்காளம், தெலுங்கு - இந்த மொழி பேசும் மக்கள் அவரவர் தாய்மொழியில் கல்விக்கூடம் அமைத்துள்ளனர். 1950இல் கிறித்துவப் பாதிரியார் தங்கராசு போர்ட்பிளேயரில் அச்சுக்கூடம் அமைத்தார் 1958ல் தமிழ்ப்பள்ளி துவக்கி ஆசிரியராக இருந்தார். 1954-ல் எமிலிசுந்தரி 20 ரூபாய் ஊதியம் கொடுத்து நடத்தப்பட்டுள் ளது. 1957ல் அரசே அந்தமான் நிக் கோபார் தீவுகளில் தமிழ் கற்க பள்ளி துவக்கியது. 1965இல் அரசை வலி யுறுத்திய நிலையில் அந்தமான் தமிழர் சங்கத்திலேயே 1 முதல் 5 வரை தமிழ் கற்பிக்க பள்ளி துவக்கப்பட்டது. முத லில் அபர்டீன்பகுதியில் அரசு பள்ளி துவங்கியது. தமிழர் சங்கம் நடத்திய பள்ளியையும் அரசு ஏற்றுக் கொண்டது.
5ஆம் வகுப்புக்கு பிறகு இந்திதான் பயிற்றுமொழி என்பதால், போராட்டம் துவங்கியது. 1971இல் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியன் தீவுக்கு சென்றபோது தான் தமிழ்கல்விக்கான பேச்சு முரசொலிமாறன், கே. கண் ணப்பன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் பாராளுமன்றத்தில் பேசியும், திராவிட முன்னேற்ற கழக பொதுக் குழுவும் தீர்மானம் நிறைவேற்றியும் அய்ந்தாம் வகுப்புக்கு மேலும் தமிழ்கல்வி வேண்டுமென்று போராடியதால் 1972லிருந்து தமிழ்கல்வி மாணவர் களுக்கு கிடைத்தது.
1977இ-ல் உயர்நிலைப் பள்ளியும் தமிழ் கல்வி வேண்டுமென்ற போராட்டத் திற்கு பிறகு 1979இல் தான் 10ஆம் வகுப்பு தேர்வை தமிழில் எழுதினர். 1980ஆம் ஆண்டு தான் மேல்நிலைப் பள்ளி யிலும் தமிழ் கல்வி வந்தது. மத்திய அரசு நடத்தும் சி.பி.எஸ்.இ. இங்கு அதிகம் உள்ளது.
சாதியும் - சமயமும்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடக்க காலத்தில் தமிழர்கள் சாதிப்பிரச்சினை உயர்வுதாழ்வு இல் லாது ஒற்றுமையாகத்தான் வாழ்ந்துள் ளனர். ஆனால் வசதி வாய்ப்பு வந்த பிறகு சாதி உணர்வு ஏற்பட்டு சாதி சங்கம் உறுவாகியுள்ளது. பங்குனி உத்திரம் அன்று உதாரணமாக போர்ட்பிளேயர் வெற்றிமாலை முருகன் ஆலயத்தில் நடைபெறும் 10நாள் மண்டகப்படியும் சாதி பெயராலேயே நடைபெறுகின்றது. ஆனால் திருவிழா கடசால் லிட்டில் அந்தமான் இரங்கூத் டிக்லிபூர் பகுதிகளில் சாதியின் பெயரால் நடப்பதில்லை. உடை உணவு பழக்கம் தமிழ்நாடு போன்றது.
தமிழர்களின்  பணிகள் - வாழ்வாதாரம்:
பொதுப்பணித்துறை, வனத்துறை, மின்துறை, மருத்துவத்துறை, கால்நடைப்பராமரிப்பு, விவசாயத்துறை, நகராட்சி நிருவாகம், கடல்துறை, கல்வித்துறை மற்றும் தனியார் துறையிலும் 6,500 பேர்கள் நிரந்தர பணியில் பணியாற்றிவருகின்றனர். பலர் இந்த தீவில் கல்வி அறிவு இல்லாத உழைக்கும் மக்கள் தொழில் பயிற்சியும் இல்லாதவரகள். ஒப்பந்தத் தொழிலாளர்களாக பலர் வாழ்ந்தனர். மரம் வெட்டுதல் கல்லுடைத்தல் போன்ற கடுமையான வேலை செய்துள்ளனர். அரசு நிருவாகமும் -  தமிழர் வாழ்வும்
சிறப்பு சலுகை அளிப்பதற்காக அங்குவாழும் மக்களை அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் 1) பழங்குடியினர் 2) 1942-ஆம் ஆண்டுக்கு முன்பு குடி யேறியவர்கள் 3) அரசுத் திட்டங்களால் குடியமர்த்தப்பட்டவரகள் 4) 1978-ஆம் ஆண்டிற்கு முன் குடியமர்ந்தவர்கள் 5) 1979-ஆம் ஆண்டு தொடங்கி 2002-ஆம் ஆண்டுவரை குடியமர்ந்தவர்கள். முதல் 3 பிரிவினருக்கு முழு சலுகையும் வழங்கப்படுகிறது. மற்ற இரு பிரிவினர்களுக்கும் மிகக் குறைவான சலுகைகள் கிடைக்கின்றன. கப்பல் போக்குவரத்துக்கு நடுவண் அரசு 70% அளவுக்கு உதவித்தொகை வழங்குவதாலும் அதனை பயன்படுத்தி பொருள் கொண்டுசெல்வதும் மக்கள் போக்குவரத்தும் அதிகம் உள்ளது. சொத்துரிமையும் -சொத்துடைமையும்:
அந்தமான் தீவுகளில் மொத்தபரப்பு 8293  ச.கி.மீ ஆகும். இதில் 86%  வனத் துறையிடமும் 14%  வருவாய்த்துறையிட மும் உள்ளது. வனத்துறை யிடமிருந்து 11%  வருவாய் துறைக்கு மக்கள் தேவைக்காக தற்பொழுது மாற்றப் பட்டுள்ளது. ஆனாலும் அந்தமான் குடிமக்கள் ஆக்கிரமிப்பும் செய்துவிடு கின்றனர். ஆனால் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நிக்கோபார் இனப்பழங்குடியினர் வாழும் பகுதி முழுவதும் தமக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர். வீடுகட்டியுள்ள இடம் மற்றும் விளைநிலங்கள் மட்டும் அனுபவம் மக்களுக்குள்ளது. ஆனால் சட்டப்படி உரிமையில்லாத காரணத்தால் அரசு அவ்வப்போது ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற நடவடிக்கை எடுப்பது இந்தி பேசும் வடநாட்டினர் அதிகாரியாக இருப்பதால் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்களே. அத்துடன் கல் கட்ட டங்களாக கட்டியிருந்தும் அகற்றுவ தற்காக மின் இணைப்பு குடிதண்ணீர் இங்கு மறுக்கப்பட்டும் பிடிவாதமாக மக்கள் குடியிருந்தகாரணத்தால் 1978--_க்கு முன் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அவ்விடங்களை உரிமைபடுத்தியும் தடை செய்த இணைப்புகள் கொடுக் கவும் செய்துள்ளனர். 1978-_-க்கு பிறகு வந்தவர்களுக்கு எதுவும் இல்லை.
அந்தமான் வாழ் தமிழர் நிலை
விளை நிலங்கள் அனைத்தும் 1942-க்கு முன் ஆங்கிலேயர் கையில் தீவு இருந்தபோது கைதிகளாக இருந்தவர் உள்ளுர்க்காரர்கள் என்ற வகையில் உள்ளது. ஆனால் சட்டப்படி உரிமை இல்லை வங்கதேசப் பிரிவினையின் போது இடம் பெயர்ந்த அகதிகளுக்கு விளைநிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மலையாள இஸ்லாமியர்களுக்கு மாப்ளா கிளரச்சியால் குடியமர்த்தப் பட்டு விளைநிலங்கள் உள்ளன. ஆனால் அதில் வேலை செய்பவர்கள் தமிழர்கள் தான் அதிகம். அசையா சொத்துக்களுக்கு முறையான பதிவு செய்ய முடியாத காரணத்தால் தன் சொந்த ஊரான தமிழகத்தில்தான் அந்தமான் தமிழர்கள் சொத்து வாங் குவதும் வீடு கட்டுவதுமாக உள்ளனர். போர்ட்பிளேயரில் அந்தமான் தமிழ்சங்கம் ஒரு தாயகம் போல் உள்ளது. 1952இ-ல் தொடங்கப்பட்ட இச்சங்கம் 2002-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடியுள்ளது. அவர்கள் தான் ஏப்ரல் 27 முதல் மே 1-ஆம் தேதிவரை 65 பேர் கொண்ட தமிழர்களை வரவேற்று 29.04.2012 அன்று ஒரு நாள் தமிழர்களுக்கு விழா எடுத்தனர். இதே போல பெரும்பாலான தீவுகளில் தமிழர் சங்கங்கள் செயல் படுவதுடன் படிப்பகங்களும் திருவள் ளுவர் மன்றம் கம்பன்கழகம் கலை வாணி தமிழ் கலை கலாச்சாரப் பண் பாட்டு அமைப்புகளும் செயல்பட்டு தமிழ் சமுதாய வளர்ச்சிக்கு உதவுகின்ற னர். இவர்கள் மூலமாக வானொலியில் இசை நடனம் நாடகம் நடத்தியும் வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின்போது தமிழகத்திலிருந்து நாடகக்குழு கலைக்குழு நையாண்டி மேளம் கரகாட்டம் போன்றவை அழைத்து வரப்பட்டு இங்கு நடத்தப் படுகின்றன. மேளம் நாதஸ்வரம் பங்குனி உத்திர திருவிழாவிற்கு தமிழ கத்திலிருந்து தான் ஆண்டுதோறும் செல்கின்றனர். தமிழகம் போல இசைக்குழு திரைப்பட பாடல் இசைப் பதும் நடந்து வருகின்றன. வர்த்தக வளாகம் நடத்தும் வடநாட்டவர் கூட தமிழர்களை வேலைக்கு வைத்திருப்பது சிறப்பானதாகும். வணிக நிறு வனங்களில் தமிழ்பேசுவர்கள்தான் அதிகமாக உள்ளனர். சாதி வேறுபாடு இல்லாத நிலையில் காதல் திருமணம் கலப்பு மணங்களும் பிறமொழி இனத் திலும் திருமணம் நடைபெறுவதாக உள்ளது.
தமிழர் வாழ்வில் பின்னடைவும் இருப்பதற்குக் காரணம் போதைப் பொருட்கள் எளிதாக கிடைப்ப தால்தான். குடிப்பழக்கம் மற்றும் போதை மயக்கத்தில் உள்ளவர்களை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் ஒலிபரப்பாகும் தொலைக்காட்சிகள் பாலுணர்வைத் துண்டும் திரைப்படங் களும் இதற்கு காரணம் என்கின்றனர். பலமொழி பேசும் மக்களோடு வாழ்வதால் தமிழ் சமுதாயம் தனது தனித்தன்மையை இழந்துவிடவில்லை. தமிழர்களுக்குப் பல உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் மொழி உணர்வோடும் தமிழன் என்ற இன உணர்வோடும் போராடி வென்று வாழ்ந்து வருகின்றனர். அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 38 தீவுகளில் மட்டும் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலான தீவுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர்
.தமிழ்க் கல்வி தொடங்கப்பட்டு 35  ஆண்டுகள்  ஆனபோதும்  9 முதல் 12 ஆம் வகுப்புக்கு தமிழ்மொழிபாடம் தவிர, மற்றவை ஆங்கிலப்  பாடப்புத்த கம் தான் உள்ளது. தமிழர்கள் பலர் இன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பெயரும் புகழும் நிலைக்க வாழ்கின்றனர். தமிழ்நாடு போல அரசியல் கட்சிகளும் சமீபகாலமாக வளர்ந்து தமிழர்களுக்குள் ஒற்றுமைக் குறைவும் ஏற்படுத்தியுள்ளன. அந்த மான் நிக்கோபார் தீவுகளில் பல்வேறு அரசியல் கட்சி அமைப்புகளும் செயல்படுகின்றன. காங்கிரஸ் கம்யூனிஸ்டு பாரதீய ஜனதா போன்ற அகில இந்திய கட்சிகளும் உள்ளன திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் போன்றவை சிறப்பான அமைப்பாக உள்ளன. 1952-இல் துவங் கப்பட்ட அந்தமான் தமிழர் சங்கம் தான் தாய் வீடாக இருந்து வருவது டன் 2003-பிப்ரவரியில் பொன்விழா கொண்டாடி திருவள்ளுவர் சிலை நிறுவி கவிப்பேரரசு வைரமுத்து திறந் தும் வைத்து சிறப்புச் செய்துள்ளார்.
தமிழர்கள் பிற இந்திய மக்களுடன் கலந்துதான் வாழ்கின்றனர். இங்கு ஆட்சிமொழி இந்தியும் ஆங்கிலமும் ஆகும். இங்கு இந்தி வங்கம் மலையாளம் கன்னடம் தெலுங்கு பேசுவோர்களும் பஞ்சாபி மராத்தி குஜராத்தி ஒரியா மொழிபேசு வோர்களும் இணைந்து வாழ்கின்றனர். தமிழர்கள் தாயகத் தொடர்பு மாறாமல் உணவு உடை பழக்கவழக்கம் சடங்குகள் திருவிழாக்கள் வழிபாடு தீவில் வாழும் பிற தமிழர்களோடு கொண்டுள்ள நட்பு மாறாது உள்ளனர். இங்குள்ள தமிழர்கள் வடநாட்டவரிடம் இந்தியிலே பேசவும் கற்றுள்ளனர். இங்குள்ள தமிழர்கள் தமிழகத்திலிருந்து சுற்றுலா செல்பவர்களை கனிவோடு வரவேற்று உபசரிப்பு செய்வது நன்கொடை வழங்குவது தன் சொந்த பூர்வீகமான ஊர்களில் சொத்து வாங்குவது தன் பிள்ளைகளுக்கு தன் சாதியிலேயே திருமணம் செய்வது தமிழக அளவில் தான் வைத்துள்ளனர். தமிழகம் போலவே மூடநம்பிக்கை உடைய சடங்குகள் தொடர்ந்து நடத்துகின் றனர். இங்கு முருகன் மாரியம்மன் அய்யனார் பிள்ளையார் காளி கோயில்கள் சிறிய அளவில் கட்டியுள் ளனர். தினசரி நாளிதழ் அன்றாடம் கிடைத்து படிக்கவும் செய்கின்றனர். இந்த தீவுகள் நடுவண் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்படுவதால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது தமிழகத் தலைவர்களின் கவனங் களுக்குக் கொண்டு வரப்பட்டு இவர்கள் முயற்சியால் தீர்க்கப்பட்டும் வருகின்றது. இங்கு பயிலும் மாணவர்கள் மூன்றாம் மொழியாக 8ஆ-ம் வகுப்பு வரை இந்தி பயின்றால் தான் வேலைவாய்ப்பு என்ற விதி யுள்ளதால் தமிழ் தெலுங்கு பெங்காலி இன மாணவர்கள் பாதிக்கப்படுகின் றனர். இன்றும்  தாய்த் தமிழக மக் களையும் சமுதாய தலைவர்களையும் மதித்து போற்றுவதுடன் என்றும் அவர்களுக்கு உதவுவோம் என்ற நம் பிக்கையோடு வாழ்கின்றனர். இன்னல் வரும்போது அங்கு வாழும் தமிழர் களுக்கு உதவுவது தமிழர்களின் கடமை யாகும்.
- வழக்குரைஞர் அமர்சிங்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


செப்டம்பர் 01-15-2012

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...