பி.ஜே.பி.யில் மீண்டும் சரணடைந்த செல்வி உமாபாரதி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஒன்றைக் கூறியுள்ளார். ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார். அதற்கு எதிர்ப்புத் தெரி வித்து இன்றைய தமிழக முதல் அமைச்சர் ஜெய லலிதா கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதைக் காப் பாற்றுவார் என்று நம்பு கிறேன் என்று பேட்டியில் கூறி இருக்கிறார்.
நாட்டு மக்கள் எல்லாம் மறதி மன்னர்கள் அல்லது மாங்காய் மடையர்கள் என்ற நினைப்பில் இத்த கைய அரசியல்வாதிகள், அதிலும் குறிப்பாக இந்த இந்துத் துவாவாதிகள் மிதக்கி றார்கள் போலும்! ராமர் பாலத்தை இடிக் கச் சொன்னது ஒன்றும் அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அல்ல - அப்படி ஒரு பாலம் இருந்தால் அல் லவா உடைக்கவும் முடியும்.
இந்தப் பாதையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றச் சொன்னது நீரி என்ற தொழில் நுட்ப நிறுவனம். அவ்வாறு முடிவு எடுக்கப் பட்டதும்கூட அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் அல்ல; அது தேசிய ஜனநாயகக் கூட் டணியான வாஜ்பேயி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் தான் அத்தகைய முடிவும் எடுக்கப்பட்டது.
இதில் மேலும் ஒரு முக்கியமான தகவலும் உண்டு - அதுவும் இதே உமாபாரதி சம்பந்தப்பட்டது என்பதுதான் படு நகைச் சுவை!
மத்திய அமைச்சராக உமாபாரதி இருந்தபோது தான் ராமன் பாலம் இருந்ததா, இல்லையா என்பதை தொல் பொருள் துறைமூலமாக ஆய்வு செய்யச் சொல்லப்பட்டது. அந்த ஆய்வு பாலம் இருப் பதற்கான சுவடே இல்லை என்று தெரிவித்துள்ளது என்ற தகவலை சேது சமுத்திரத் திட்டத்தில் நிருவாக இயக்குநர் ரகுபதி வெளிப்படுத்தினர் (ஆதாரம்: தினமலர் 26.7.2007 பக்கம் 5).
உண்மை இவ்வாறு இருக்க அதே உமாபாரதி இப்பொழுது பல்டி அடித் துப் பேசுவதன் பொருள் என்ன?
முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத் துள்ளார். அதுவும் மிகவும் பொருத்தம்தான்! ராமன் பாலத்தை (?) ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று சொன்னதோடு மட் டுமல்ல; இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அச்சிட்டுக் கொடுத் தவரே இதே ஜெயலலிதா தானே! முரண்பாடு என்னும் ஒரே ஓடத்தில் பயணம் செய்பவர்கள் (Sailing in the Same Boat) இப்படி யாகத்தானே நடந்து கொள்வார்கள்.
- மயிலாடன்
.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment