திருவண்ணாமலை, ஜூலை 4-பத்திரிகை கள் படம் பிடித்து போட்டுவிடுவதால், பெண் சீடர்கள் என் மீது சாய்ந்து தீட்சை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என நித்யானந்தா கவலை யுடன் கூறினார்.
ஜாமீனில் வெளியே வந்துள்ள நித்தியானந்தா பவுர்ணமியை முன் னிட்டு திருவண்ணா மலை ஆசிரமத்தில் நேற்று பேசினார். நடிகை மாளவிகா உள் ளிட்ட சீடர்கள் கலந்து கொண்டனர். சீடர் களுக்கு ஆசிரமத்தின் முழுநேர ஊழியர் என்ற அங்கீகாரம் வழங்குவ தற்கு அடையாளமாக தீட்சை கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆண் சீடர்களை கட்டி அணைத்து தீட்சை கொடுத்தார். பெண் சீடர்களின் தலையில் கை வைத்து தீட்சை கொடுத்தார். அப்போது, என் சீடர்களுக்கு இது முக்கியமான தருணம். என் மீது சாய்ந்து தீட்சை பெற முடியவில்லையே என சிஷ்யைகள் வருந்த வேண்டாம். அப்படி செய்தால் படம் பிடித்து பத்திரிகைகளில் போட்டு விடுகிறார்கள். அதனால் சிலவற்றை தியாகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
சிம்மாசனம் போன்ற இருக்கையில் நித்தியா னந்தா அமர்ந்திருந்தார். சீடர்கள் தங்க நகை களை அணிவித்தனர். கூடை கூடையாக மலர் களை அவரது தலையில் கொட்டியது கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- இலங்கைக் கடற்படையின் அட்டூழியம்! ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் சிறையில் அடைப்பு
- மயிலாடுதுறை - திருவாரூர் அகலப்பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கியது
- சங்கராச்சாரியார் மீதான வழக்கு: பிறழ்சாட்சி தொடர்கிறது
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment